பைபிளில் இருக்கும் புதையல்கள் | 2 கொரிந்தியர் 4–6
“நாங்கள் சோர்ந்துபோவதில்லை”
பாழடைந்த ஒரு கட்டிடத்தில் இரண்டு குடும்பங்கள் வாழ்வதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். ஒரு குடும்பம் ரொம்பவே கவலையாக இருக்கிறது; அவர்களுடைய கவலையை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால், இன்னொரு குடும்பம் எந்தக் கவலையும் இல்லாமல் சந்தோஷமாக இருக்கிறது! ஏனென்றால், சீக்கிரத்தில் ஓர் அழகான புதிய வீட்டுக்கு அவர்கள் போகப்போகிறார்கள்.
“இதுவரை எல்லா படைப்புகளும் ஒன்றாகக் குமுறிக்கொண்டும் வேதனைப்பட்டுக்கொண்டும்” இருந்தாலும், கடவுளுடைய ஊழியர்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது; அது அவர்களைத் தாங்குகிறது. (ரோ 8:22) கடவுள் கொண்டுவரும் புதிய உலகத்தில் என்றென்றும் வாழும் வாழ்க்கையோடு ஒப்பிடும்போது, பல வருஷங்களாக நாம் அனுபவிக்கும் கஷ்டங்கள் ‘லேசானவை, அவை நொடிப்பொழுதுதான் இருக்கும்.’ கடவுளுடைய அரசாங்கம் எதிர்காலத்தில் கொண்டுவரவிருக்கும் ஆசீர்வாதங்களின் மீது கண்களைப் பதிய வைப்பது நமக்குச் சந்தோஷத்தைத் தரும்; சோர்ந்துபோகாமல் இருக்கவும் உதவும்.