உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb19 ஆகஸ்ட் பக். 3
  • யெகோவாவை நேசிக்கிறவர்களோடு நேரம் செலவிடுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவை நேசிக்கிறவர்களோடு நேரம் செலவிடுங்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
  • இதே தகவல்
  • கெட்ட நண்பர்களால் யெகோவாவைவிட்டு விலகிய யோவாஸ்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
  • நாம் ஏன் யெகோவாவுக்குப் பயப்பட வேண்டும்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
  • தைரியமான செயல்களுக்கு யெகோவா பலன் கொடுக்கிறார்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • யோய்தா தைரியமாக நடந்துகொண்டார்
    பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
mwb19 ஆகஸ்ட் பக். 3

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

யெகோவாவை நேசிக்கிறவர்களோடு நேரம் செலவிடுங்கள்

நாம் ஏன் யெகோவாவை நேசிக்கிறவர்களோடு நேரம் செலவிட வேண்டும்? ஏனென்றால், நாம் யாரோடு நேரம் செலவிடுகிறோமோ அவர்கள் நம்மை நல்லது செய்யத் தூண்டலாம் அல்லது கெட்டது செய்யத் தூண்டலாம். (நீதி 13:20) உதாரணத்துக்கு, குருவாகிய யோய்தாவோடு நேரம் செலவு செய்தவரையில், ராஜாவாகிய “யோவாஸ் யெகோவாவுக்குப் பிரியமாக நடந்துகொண்டார்.” (2நா 24:2) யோய்தா இறந்த பிறகு, கெட்ட நண்பர்களோடு நேரம் செலவு செய்ததால் யோவாஸ் யெகோவாவை விட்டுவிட்டார்.—2நா 24:17-19.

முதல் நூற்றாண்டில், அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்தவ சபையை ‘ஒரு பெரிய வீட்டுக்கும்,’ சபையில் இருந்தவர்களை ‘பாத்திரங்களுக்கும்’ ஒப்பிட்டார். யெகோவாவுக்குப் பிடிக்காத விஷயங்களைச் செய்கிறவர்கள் நம் குடும்பத்திலோ சபையிலோ இருந்தால்கூட அவர்களோடு பழகுவதைத் தவிர்க்கும்போதுதான் நாம் “கண்ணியமான காரியத்துக்குப் பயன்படுத்தப்படுகிற பாத்திரமாக” இருப்போம். (2தீ 2:20, 21) அதனால், யெகோவாவை நேசிக்கிறவர்களோடும், அவருக்குச் சேவை செய்ய நம்மை உற்சாகப்படுத்துகிறவர்களோடும் மட்டுமே நாம் நெருங்கிப் பழக வேண்டும்.

கெட்ட சகவாசத்தை ஒதுக்கித்தள்ளுங்கள் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • நமக்குத் தெரியாமலேயே, நாம் எப்படிக் கெட்ட நண்பர்களோடு நேரம் செலவு செய்யலாம்?

  • கெட்ட நண்பர்களைத் தவிர்க்க வீடியோவில் வரும் மூன்று கிறிஸ்தவர்களுக்கு எது உதவி செய்தது?

  • நண்பர்களை ஞானமாகத் தேர்ந்தெடுக்க எந்த பைபிள் நியமங்கள் உங்களுக்கு உதவும்?

ஜான், ஹோட்டலில் தன்னுடைய கஸ்டமர்களுக்கு மதுபானம் ஊற்றித் தருகிறார்; கிறிஸ்டின், சமூக வலைத்தளத்தைப் பார்க்கிறார்; ஜேடன், ஆன்லையில் வீடியோ கேம் விளையாடுகிறார்; சபைக் கூட்டத்தில் ஜான் மற்றும் அவருடைய குடும்பம், கிறிஸ்டின், ஜேடன்

“கண்ணியமான காரியத்துக்குப் பயன்படுத்தப்படுகிற பாத்திரமாக” நான் இருக்கிறேனா?—2தீ 2:21

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்