உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb19 ஆகஸ்ட் பக். 8
  • மறக்கப்படாத நல்ல செயல்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மறக்கப்படாத நல்ல செயல்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
  • இதே தகவல்
  • இதுவே உங்களுக்கு மிகச் சிறந்த வாழ்க்கைப்பணியாக இருக்க முடியுமா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • தோள்கொடுக்க நீங்கள் தயாரா?
    நம் ராஜ்ய ஊழியம்—2003
  • பெத்தேல் சேவை—கூடுதலான வாலண்டியர்கள் தேவை
    நம் ராஜ்ய ஊழியம்—1995
  • ‘கடவுளுடைய வீட்டை’ போற்றுதல் மனப்பான்மையோடு நோக்குதல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
mwb19 ஆகஸ்ட் பக். 8
ஒரு சகோதரி, பெத்தேலில் உள்ள சமையலறையில் வேலை செய்கிறார்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

மறக்கப்படாத நல்ல செயல்கள்

யெகோவாவின் நினைவைவிட்டு நீங்காத நல்ல செயல்களை அவருடைய மக்கள் ஒவ்வொருவராலும் செய்ய முடியும். ஓர் அன்பான அப்பா தன்னுடைய பிள்ளைகள் செய்யும் நல்ல விஷயங்கள் எவற்றையும் மறக்க மாட்டார். அதேபோல், நம்முடைய உழைப்பையும் யெகோவாவின் பெயருக்காக நாம் காட்டிய அன்பையும் யெகோவா மறக்க மாட்டார். (மத் 6:20; எபி 6:10) ஒவ்வொருவருடைய திறமைகளும் சூழ்நிலைகளும் வேறுபடுகின்றன என்பது உண்மைதான். இருந்தாலும், யெகோவாவுக்காக முழுமூச்சோடு சேவை செய்யும்போது, நாம் சந்தோஷமாக இருக்கலாம். (கலா 6:4; கொலோ 3:23) பல வருஷங்களாக, ஆயிரக்கணக்கான சகோதர சகோதரிகள் பெத்தேலில் சேவை செய்திருக்கிறார்கள். உங்களால் பெத்தேலில் சேவை செய்ய முடியுமா? இல்லையென்றால், பெத்தேல் சேவை செய்யும்படி யாரையாவது உற்சாகப்படுத்த முடியுமா? அல்லது, தொடர்ந்து பெத்தேலில் சேவை செய்ய பெத்தேல் ஊழியர் யாருக்காவது உதவ முடியுமா?

பெத்தேல் சேவை செய்ய முன்வாருங்கள் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • பெத்தேல் சேவை செய்ய எது உங்களைத் தூண்ட வேண்டும்?

  • பெத்தேல் சேவை செய்வதால் கிடைக்கும் ஆசீர்வாதங்களைப் பற்றி சிலர் என்ன சொல்கிறார்கள்?

  • பெத்தேலில் சேவை செய்ய என்ன தகுதிகள் தேவை?

  • பெத்தேல் சேவைக்கு நீங்கள் எப்படி விண்ணப்பிக்கலாம்?

பெத்தேல் ஊழியர்கள் மூன்று பேர் ஒன்றுசேர்ந்து கம்ப்யூட்டரில் வேலை பார்க்கிறார்கள்; ஒரு சகோதரர் பிரசுரங்களை அட்டைப்பெட்டிகளில் எடுத்து வைக்கிறார்; ஒரு சகோதரர் பெத்தேலில் மர வேலை செய்கிறார்

பெத்தேல் சேவை செய்வதற்கான தகுதிகள்

  • யெகோவா மீதும் அவருடைய அமைப்பின் மீதும் ஆழமான அன்பு வைத்திருப்பவராக இருக்க வேண்டும்

  • உயர்ந்த ஒழுக்க தராதரங்களும் யெகோவாமுன் சுத்தமான மனசாட்சியும் உள்ளவராக இருக்க வேண்டும்

  • கிறிஸ்தவ ஊழியருக்குப் பொருத்தமான ஆடை அலங்காரத்தைத் தேர்ந்தெடுப்பவராக இருக்க வேண்டும்

  • கிறிஸ்தவருக்குப் பொருத்தமான பொழுதுபோக்குகளைத் தேர்ந்தெடுப்பவராக இருக்க வேண்டும்

  • பொதுவாக, 19 முதல் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்

  • மன ரீதியிலும், உணர்ச்சி ரீதியிலும், உடல் ரீதியிலும் நல்ல ஆரோக்கியமுள்ளவராக இருக்க வேண்டும்

  • கிளை அலுவலகத்தில் பேசப்படும் முக்கியமான பாஷையை நன்றாக வாசிக்க, எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும்

  • குறைந்தபட்சம் ஒரு வருஷமாவது பெத்தேலில் சேவை செய்ய மனமுள்ளவராக இருக்க வேண்டும்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்