உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • th படிப்பு 7 பக். 10
  • துல்லியமாகவும் நம்பகமாகவும் பேசுவது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • துல்லியமாகவும் நம்பகமாகவும் பேசுவது
  • வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • இதே தகவல்
  • திருத்தமான தகவலை அளித்தல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • வசனங்களைச் சரியாக அறிமுகப்படுத்துவது
    வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • நடைமுறைப் பயனைத் தெளிவாகச் சொல்வது
    வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • கேள்விகளைப் பயன்படுத்துவது
    வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
மேலும் பார்க்க
வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
th படிப்பு 7 பக். 10

படிப்பு 7

துல்லியமாகவும் நம்பகமாகவும் பேசுவது

வசனம்

லூக்கா 1:3

சுருக்கம்: கேட்பவர்கள் சரியான முடிவுக்கு வர, நம்பகமான அத்தாட்சிகளைக் குறிப்பிடுங்கள்.

எப்படிச் செய்வது?

  • நம்பகமான தகவல்களைப் பயன்படுத்துங்கள். கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையில் பேசுங்கள். முடிந்தவரை, அதிலிருந்து நேரடியாக வாசியுங்கள். ஒரு அறிவியல் உண்மையை, ஒரு செய்தியை, ஒரு அனுபவத்தை, அல்லது வேறொரு அத்தாட்சியைக் குறிப்பிடுகிறீர்கள் என்றால், அது நம்பகமான, சமீபத்திய தகவல்தானா என்பதை முன்கூட்டியே உறுதி செய்துகொள்ளுங்கள்.

  • தகவல்களைச் சரியாகப் பயன்படுத்துங்கள். வசனங்களை அவற்றின் சூழமைவுக்கும், பைபிளிலுள்ள மற்ற வசனங்களுக்கும், “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” வெளியிட்டிருக்கும் பிரசுரங்களுக்கும் இசைவாக விளக்குங்கள். (மத். 24:45) வேறு புத்தகங்களைப் பயன்படுத்தும்போது, அங்கே கொடுக்கப்பட்டுள்ள அர்த்தத்தை அல்லது எழுத்தாளர் சொல்ல நினைத்த கருத்தை மட்டும் சொல்லுங்கள்.

    நடைமுறை ஆலோசனை

    தகவல்களையும் புள்ளிவிவரங்களையும் மிகைப்படுத்திச் சொல்லாதீர்கள். உதாரணத்துக்கு, “சிலர்” என்பதை “பெரும்பாலானவர்கள்” என்றோ, “சிலசமயங்களில்” என்பதை “எப்போதும்” என்றோ, “ஒருவேளை” என்பதை “அநேகமாக” என்றோ சொல்லாதபடி கவனமாக இருங்கள்.

  • அத்தாட்சியை வைத்து நியாயங்காட்டிப் பேசுங்கள். ஒரு வசனத்தை வாசித்த பிறகோ, ஒரு பிரசுரத்திலுள்ள தகவலைச் சொன்ன பிறகோ, சாதுரியமான கேள்விகளைக் கேளுங்கள். அல்லது, உதாரணங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி, சொல்லவரும் குறிப்பைத் தெளிவாக விளக்குங்கள். அப்போதுதான், கேட்பவர்கள் தாங்களாகவே யோசித்துச் சரியான முடிவுக்கு வருவார்கள்.

ஊழியத்தில்

ஊழியத்துக்கு நீங்கள் தயாரிக்கும்போது, நீங்கள் சந்திக்கப்போகும் நபர்கள் என்னென்ன கேள்விகளைக் கேட்கலாம் என்று யோசித்துப் பாருங்கள்; அவர்களுக்கு எப்படிப் பதில் சொல்லலாம் என்று ஆராய்ச்சி செய்யுங்கள். ஒரு நபர் கேட்கும் கேள்விக்குப் பதில் தெரியாவிட்டால், அதைப் பற்றி ஆராய்ச்சி செய்துவிட்டு வருவதாகச் சொல்லுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்