உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • th படிப்பு 3 பக். 6
  • கேள்விகளைப் பயன்படுத்துவது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கேள்விகளைப் பயன்படுத்துவது
  • வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • இதே தகவல்
  • கேள்விகளைத் திறம்பட பயன்படுத்துதல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • நடைமுறைப் பயனைத் தெளிவாகச் சொல்வது
    வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • சிந்தனையைத் தூண்டும் கேள்விகள்
    சொல் பட்டியல்
  • வசனங்களைச் சரியாக அறிமுகப்படுத்துவது
    வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
மேலும் பார்க்க
வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
th படிப்பு 3 பக். 6

படிப்பு 3

கேள்விகளைப் பயன்படுத்துவது

வசனம்

மத்தேயு 16:13-16

சுருக்கம்: ஆர்வத்தைத் தூண்டுவதற்கும், அது குறையாதபடி பார்த்துக்கொள்வதற்கும், நியாயங்காட்டிப் பேசுவதற்கும், முக்கியக் குறிப்புகளை வலியுறுத்துவதற்கும் சாதுரியமான கேள்விகளைக் கேளுங்கள்.

எப்படிச் செய்வது?

  • ஆர்வத்தைத் தூண்டுங்கள், அது குறையாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். கேட்பவர்களின் சிந்தனையைத் தூண்டுகிற அல்லது ஆர்வத்தைத் தூண்டுகிற கேள்விகளைக் கேளுங்கள்.

  • நியாயங்காட்டிப் பேசுங்கள். நீங்கள் எடுத்துச்சொல்லும் விஷயத்தைப் புரிந்துகொண்டு, தாங்களாகவே நியாயமான முடிவுக்கு வர கேட்பவர்களுக்கு உதவுங்கள்; அதற்கு அவர்களிடம் அடுத்தடுத்து சில கேள்விகளைக் கேளுங்கள்.

  • முக்கியக் குறிப்புகளை வலியுறுத்துங்கள். ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல ஆரம்பிப்பதற்கு முன்பு, ஆர்வத்தைத் தூண்டும் ஒரு கேள்வியைக் கேளுங்கள். ஒரு முக்கியக் குறிப்பை விளக்கிய பிறகு அல்லது பேச்சை முடிப்பதற்கு முன்பு மறுபார்வைக் கேள்விகளைக் கேளுங்கள்.

    நடைமுறை ஆலோசனை

    ஒரு வசனத்தை (அல்லது, வசனங்களை) வாசித்த பிறகு, அதிலுள்ள முக்கியக் கருத்தை வலியுறுத்துவதற்குக் கேள்விகளைக் கேளுங்கள்.

ஊழியத்தில்

நீங்கள் சந்திக்கும் நபர் நீங்கள் சொல்லும் விஷயத்தைப் பற்றி என்ன நினைக்கிறார் என்று கேளுங்கள். அவர் சொல்லும் பதிலை நன்றாகக் கவனியுங்கள். சாதுரியமான கேள்விகளை எப்போது, எப்படிக் கேட்கலாம் என்பதை விவேகமாக முடிவு செய்யுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்