உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • th படிப்பு 16 பக். 19
  • நம்பிக்கையும் உற்சாகமும் தரும்படி பேசுவது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நம்பிக்கையும் உற்சாகமும் தரும்படி பேசுவது
  • வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • இதே தகவல்
  • இதயத்தைத் தொடுவது
    வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • நம்பிக்கையூட்டும் விதமாக பேசுதல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • ஆர்வத்துடிப்பு
    வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • நடைமுறைப் பயனைத் தெளிவாகச் சொல்வது
    வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
மேலும் பார்க்க
வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
th படிப்பு 16 பக். 19

படிப்பு 16

நம்பிக்கையும் உற்சாகமும் தரும்படி பேசுவது

வசனம்

யோபு 16:5

சுருக்கம்: பிரச்சினைகளைப் பற்றியே பேசாமல், அவை எப்படிச் சரியாகும் என்பதைப் பற்றிப் பேசுங்கள். கேட்பவர்களுக்கு நம்பிக்கை தரும் விதத்தில் பேசுங்கள்.

எப்படிச் செய்வது?

  • கேட்பவர்களை நல்ல கண்ணோட்டத்தில் பாருங்கள். யெகோவாவை வணங்குகிற எல்லாருமே அவருக்குப் பிரியமாக நடக்கத்தான் விரும்புகிறார்கள் என்று நம்புங்கள். சிலசமயங்களில் நீங்கள் ஆலோசனை கொடுக்க வேண்டியிருக்கலாம்; ஆனால், அப்படிச் செய்வதற்குமுன் முடிந்தவரை அவர்களை மனதாரப் பாராட்டுங்கள்.

    நடைமுறை ஆலோசனை

    கேட்பவர்களிடம் எரிச்சலோடு பேசாமல், அன்போடு பேசுங்கள். சிரித்த முகத்தோடும் பேசுங்கள்; அப்போதுதான், ஒரு நண்பர் பேசுவதைக் கேட்பதுபோல் நீங்கள் பேசுவதை அவர்கள் நன்றாகக் கேட்பார்கள்.

  • எதிர்மறையான தகவல்களை முடிந்தவரை குறைத்துக்கொள்ளுங்கள். பிரயோஜனமாக இருந்தால் மட்டுமே இப்படிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்துங்கள். மொத்தத்தில், நீங்கள் பேசுவது நம்பிக்கையும் உற்சாகமும் தரும்படி இருக்க வேண்டும்.

  • கடவுளுடைய வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துங்கள். மனிதர்களுக்காக யெகோவா என்ன செய்திருக்கிறார், என்ன செய்துகொண்டிருக்கிறார், என்ன செய்யப்போகிறார் என்பதையெல்லாம் வலியுறுத்துங்கள். கேட்பவர்களுக்கு நம்பிக்கையும் தைரியமும் தரும் விதத்தில் பேசுங்கள்.

ஊழியத்தில்

நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரையும் வருங்கால யெகோவாவின் சாட்சியாகப் பாருங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்