பஞ்சத்தின் காலத்தில் ஜீவனைப் பாதுகாத்தல்
உணவு நிர்வாகியாகப் பொறுப்பேற்றவுடன் யோசேப்பு எகிப்து தேசம் முழுவதும் ஒரு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டான். மிகுதியின் வருடங்கள் ஆரம்பிப்பதற்குள் அவன் சகல காரியங்களையும் நன்கு ஒழுங்குபடுத்திக்கொண்டான். இப்பொழுதோ நிலம் முழு விளைச்சலை தந்துகொண்டிருந்தது, நகரை சுற்றியிருந்த நிலத்தின் விளைச்சலை சேகரித்து வந்தான். அவன், “அளவிறந்ததாய்க் கடற்கரை மணலைப்போல மிகுதியாகத் தானியத்தைச் சேர்த்து வைத்தான்; அது அளவுக்கு அடங்காததாயிருந்தது.”—ஆதியாகமம் 41:46-49.
2 ஏழுவருட மிகுதியின் நாட்கள் முடிவடைந்தது. யெகோவா முன்னறிவித்த விதமாகவே பஞ்சம் தொடங்கியது. இது எகிப்தில் மட்டும் உண்டான பஞ்சமல்ல, ஆனால் “சகல தேசங்களிலும்” உண்டாயிருந்த பஞ்சம். எகிப்தில் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பார்வோனிடம் ஆகாரம் கேட்டபோது பார்வோன் அவர்களைப் பார்த்து: “நீங்கள் யோசேப்பினிடத்துக்குப் போய், அவன் உங்களுக்குச் சொல்லுகிறபடி செய்யுங்கள்,” என்றான். எகிப்தியர் கைகளிலிருந்த பணம் தீர்ந்து போகுமட்டும் யோசேப்பு அவர்களுக்குத் தானியத்தை விற்றான். பின்பு, பணத்திற்கு பதிலாக அவர்களுடைய கால்நடைகளைப் பெற்றுக்கொண்டான். கடைசியில் மக்கள் அவனிடம் வந்து, “நீர் எங்களையும் எங்கள் நிலங்களையும் வாங்கிக்கொண்டு ஆகாரம் கொடுக்க வேண்டும்; நாங்களும் எங்கள் நிலங்களும் பார்வோனுக்கு ஆதீனமாயிருப்போம்,” என்றார்கள். ஆக, யோசேப்பு எகிப்தியரின் நிலங்கள் யாவையும் பார்வோனுக்காக வாங்கினான்.—ஆதியாகமம் 41:53-57; 47:13-20.
ஆவிக்குரிய உணவு அளிப்பதற்கான ஏற்பாடு
3 யோசேப்பு பகிர்ந்தளித்த தானியம் எகிப்தியருக்கு ஜீவனைக் குறித்ததுபோல, பெரிய யோசேப்பாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் யெகோவாவுக்குத் தங்களை ஒப்புக்கொடுப்பதன் மூலம் யெகோவாவின் அடிமைகளாகிற கிறிஸ்தவர்களைக் காப்பதற்கு உண்மையான ஆவிக்குரிய உணவு அவசியமாயிருக்கிறது. தம்முடைய அபிஷேகம்பண்ணப்பட்ட சீஷர்கள் இந்த உணவு ஏற்பாடுகளை பகிர்ந்தளிக்கும் உத்தரவாதத்தை உடையவர்களாயிருப்பார்கள் என்று இயேசு தம்முடைய பூமிக்குரிய ஊழியத்தின்போது முன்னறிவித்தார். அவர் கேட்டதாவது: “ஏற்ற வேளையிலே தன் வேலைக்காரருக்குப் போஜனங் கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் [அடிமை, NW] யாவன்? எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரனே பாக்கியவான்.”—மத்தேயு 24:45, 46.
4 யெகோவாவின் ஒப்புக்கொடுத்த சாட்சிகளும், உலகிலுள்ள அக்கறையுள்ள ஆட்களும் ஜீவனைக் காக்கும் ஆவிக்குரிய உணவைப் பெற்றுக்கொள்வதற்காக இன்று இந்த “விவேகமுள்ள அடிமை” வகுப்பின் உண்மையுள்ள மீதியானோர் வேதப்பூர்வமாக விரிவாக செயல்படுகின்றனர். அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் இந்தப் பொறுப்பைக் கடமையுணர்வோடு, யெகோவாவுக்குச் செய்யும் பரிசுத்த சேவையாக நிறைவேற்றப்படுகிறது. மேலும் இந்த “அடிமை” சபைகளை ஒழுங்குபடுத்தி இவற்றிற்கு நியமிக்கப்பட்ட பிராந்தியங்களில் ராஜ்ய “விதை”யை விதைப்பதற்கு வேண்டிய அளவில் பைபிள் பிரசுரங்களை ஏராளமாக அளித்திருக்கிறது. இது யோசேப்பு தன்னுடைய நாட்களில் மக்களை பட்டணங்களில் கூட்டிச்சேர்த்து, அவர்களுடைய ஜீவனைக் காப்பதற்கு மட்டும் தானியம் கொடுக்காமல், பின்னால் அறுவடை செய்யும் நோக்கத்துடன் விதைக்க விதை தானியங்களையும் கொடுத்ததற்கு இசைவாக இருக்கிறது.—ஆதியாகமம் 47:21-25; மாற்கு 4:14, 20; மத்தேயு 28:19, 20.
5 வெளியரங்கமாகச் செய்யப்பட்டுவரும் பிரசங்கவேலைக்குத் தடை இருக்கும் சமயத்திலும் யெகோவாவின் சாட்சிகள் துன்புறுத்தப்படும் சமயத்திலும் இந்த ஆவிக்குரிய உணவை அளிப்பதை இந்த ‘உண்மையுள்ள அடிமை’ தனக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கும் பரிசுத்தமான உத்தரவாதமாக நோக்குகிறது. (அப்போஸ்தலர் 5:29, 41, 42; 14:19-22) புயல்கள், வெள்ளங்கள் மற்றும் பூமியதிர்ச்சிகள் பெருஞ்சேதத்தை ஏற்படுத்துகையிலும் கடவுளுடைய வீட்டாரின் சரீரப்பிரகாரமான மற்றும் ஆவிக்குரிய தேவைகள் நிறைவேற்றப்படும் காரியத்தை இந்த “அடிமை” பார்த்துக்கொள்கிறது. கான்சன்ட்ரேஷன் முகாம்களிலுள்ளவர்களுக்குங்கூட அச்சடிக்கப்பட்ட வார்த்தை தொடர்ந்து போய்கொண்டிருக்கிறது. இந்த ஆவிக்குரிய உணவு தேவைப்படுவோருக்கு இது தொடர்ந்து செல்லுவதை தேசிய எல்லைகள் கட்டுப்படுத்துவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இந்த உணவு தொடர்ந்து செல்லுவதைக் காத்துக்கொள்வது தைரியத்தையும், யெகோவாவில் விசுவாசத்தையும் அநேக சமயங்களில் புதிய முறைகளை பயன்படுத்தும் புத்திக்கூர்மையும் ஓரளவுக்குத் தேவைப்படுகிறது. 1986-ம் ஆண்டு மட்டும் இந்த “அடிமை” 4,39,58,303 பைபிள்களும் புத்தகங்களும் அவற்றுடன் 55,02,16,455 பத்திரிகைகளையும் அச்சடித்திருக்கிறது—உண்மையிலேயே “அளவிறந்ததாய்க் கடற்கரை மணலைப்போல் மிகுதியானவை.”
பழிவாங்குதலா, தண்டனையா அல்லது இரக்கமா?
6 கடைசியாகப் பஞ்சம் கானான் தேசத்தையும் எட்டியது. யாக்கோபு யோசேப்பின் பத்து ஒன்றுவிட்ட சகோதரரையும் தானியம் வாங்கிவர எகிப்துக்கு அனுப்புகிறான். ஆனால் அவனுடைய ஒரே தம்பியாகிய பென்யமீனை அனுப்பவில்லை. அவனுக்கு “ஏதோ மோசம்வரும்” என்று சொன்னான். தானியத்தை விற்பனை செய்தது யோசேப்பு, எனவே அவனுடைய சகோதரர்கள் அவனுக்கு முன்பாக வந்து முகங்குப்புறத் தரையிலே விழுந்து அவனை வணங்கினார்கள். அவர்கள் தங்களுடைய சகோதரனை அடையாளங் காணவில்லை, ஆனால் யோசேப்பு அவர்களை அறிந்துகொண்டான்.—ஆதியாகமம் 42:1-7.
7 அவர்களைக் குறித்து தான் கண்ட சொப்பனங்கள் தன் நினைவுக்கு வந்தன. ஆனால் அவன் என்ன செய்வான்? அவன் பழிவாங்குவானா? அவர்கள் அதிக தேவையிலிருந்த அந்தச் சமயத்தில், அவர்கள் தன்னை நடத்திய விதத்தை மன்னித்துவிடுவானா? அவனுடைய தகப்பனின் பற்றியெறியும் வேதனையைப் பற்றியதென்ன? இது மறக்கப்படுமா? தாங்கள் செய்த பெரிய தவறைக் குறித்து அவனுடைய சகோதரர்கள் இப்பொழுது எப்படி உணர்ந்தார்கள்? இந்தக் காரியத்தில் யோசேப்பும் ஒரு சோதனையான கட்டத்திலிருந்தான். அவனுடைய செயல்கள் 1 பேதுரு 2:22, 23-ல் விவரிக்கப்பட்டிருக்கும் பெரிய யோசேப்பாகிய இயேசு கிறிஸ்து பின்னால் வெளிப்படுத்திய மனநிலைக்கு இசைவாக இருக்குமா? “அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை; அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச் செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.”
8 காரியங்களின் போக்கில் யோசேப்பு யெகோவாவின் கரத்தை காணமுடிந்தது. எனவே கடவுளுடைய கற்பனைகளையும் நியமங்களையும் கடைபிடிப்பதில் அவன் மிகுந்த கவனம் செலுத்துவான். அதுபோல் இயேசுவும் தம்மை விசுவாசிக்கிறவர்களுக்கு நித்திய ஜீவனை அளிக்கும் காரியத்தில் ‘தம்முடைய பிதாவின் சித்தத்தை செய்வதில்’ எப்பொழுதும் ஆர்வமுள்ளவராயிருந்தார். (யோவான் 6:37-40) “கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாய்” அவருடைய அபிஷேகம் பண்ணப்பட்ட சீஷர்களுங்கூட “இந்த ஜீவ வார்த்தைகள் எல்லாவற்றையும் ஜனங்களுக்குச் சொல்வதில் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் பரிசுத்த உத்தரவாதத்தை நிறைவேற்றுகிறார்கள்.—2 கொரிந்தியர் 5:20; அப்போஸ்தலர் 5:20.
9 யோசேப்பு தன்னை உடனடியாக தன் சகோதரர்களுக்கு வெளிப்படுத்தவில்லை. மாறாக அவன் ஒரு மொழிபெயர்ப்பாளன் மூலமாக “நீங்கள் வேவுகாரர்!” என்று கடுமையாகப் பேசினான். அவர்கள் தங்களுடைய இளைய சகோதரனைக் குறித்து சொன்னதால், அவனை எகிப்துக்கு அழைத்துக்கொண்டு வருவதன் மூலம் தங்களுடைய உண்மைத் தன்மையை நிரூபித்துக் காண்பிக்கக் கோரினான். இந்தச் சம்பவங்கள் யோசேப்பைத் தாங்கள் அடிமையாக விற்றுப் போட்டதற்கு பலன் என்று தாங்கள் மனஸ்தாபப்பட்டு ஒருவரோடொருவர் பேசிக்கொள்வதை யோசேப்பு கேட்டுக் கொண்டிருந்தான். மறுபக்கமாகத் திரும்பி அழுதான். என்றபோதிலும், அவர்கள் பென்யமீனைத் திரும்ப கொண்டுவரும்வரை சிமியோனைப் பினையாகக் காவலில் வைத்தான்.—ஆதியாகமம் 42:9-24.
10 தனக்குச் செய்யப்பட்ட தவறுக்கு யோசேப்பு பழிவாங்கவில்லை. அவர்கள் இரக்கம் பெறுவதற்காக, அவர்களுடைய மனந்திரும்புதல் உண்மையானதா, அவர்களுடைய இருதயங்களின் ஆழத்திலிருந்து வெளிப்படும் மனந்திரும்புதலா என்பதை அவன் உறுதிசெய்துகொள்ள விரும்பினான். (மல்கியா 3:7; யாக்கோபு 4:8) இயேசு காண்பிக்கக்கூடியதற்கு ஒப்பான இரங்கும் மனம்கொண்ட யோசேப்பு அவர்களுடைய சாக்குகளைத் தானியத்தால் நிரப்பியது மட்டுமல்லாமல் அவர்கள் கொண்டுவந்த பணத்தைத் திரும்ப அவரவர்களுடைய சாக்கிலே போட்டனுப்பினான். கூடுதலாக, அவர்களுடைய பயணத்துக்கு வேண்டிய ஆகாரத்தையும் கொடுத்தான்.—ஆதியாகமம் 42:25-35; மத்தேயு 11:28-30-ஐ ஒப்பிடவும்.
11 காலப்போக்கில், எகிப்திலிருந்து தாங்கள் கொண்டுவந்த உணவு தீர்ந்துவிட்டது. யாக்கோபு தன்னுடைய ஒன்பது குமாரரையும் எகிப்துக்குச் சென்று கூடுதல் தானியத்தை வாங்கிவரச் சொன்னான். ஏற்கெனவே அவன் பென்யமீனைக் குறித்து பின்வருமாறு சொன்னான்: “என் மகன் உங்களோடேகூடப் போவதில்லை; அவன் தமையன் இறந்துபோனான், இவன் ஒருவன் மீதியாயிருக்கிறான்; நீங்கள் போகும் வழியிலே இவனுக்கு மோசம் நேரிட்டால், நீங்கள் என் நரை மயிரை சஞ்சலத்தோடே பாதாளத்தில் இறங்கப் பண்ணுவீர்கள்.” என்றபோதிலும் இவர்கள் விடாமல் தொடர்ந்து கேட்டதாலும், பென்யமீனுக்குத் தான் பொறுப்புள்ளவனாய் இருப்பதாக யூதா சொன்னதாலும், யாக்கோபு அறைமனதோடு அவனைக் கூட்டிச் செல்ல அனுமதிக்கிறான்.—ஆதியாகமம் 42:36—43:14.
12 தன்னுடைய சகோதரர்களுடன் பென்யமீனும் வந்திருப்பதைப் பார்த்த யோசேப்பு அவர்களைத் தன் வீட்டுக்கு வரவழைத்து ஒரு விருந்தை ஆயத்தப்படுத்தினான். அவர்கள் எல்லாருக்கும் பரிமாறின பங்குகளைப் பார்க்கிலும் பென்யமீனுடைய பங்கு ஐந்து மடங்கு அதிகமாயிருந்தது. பின்பு யோசேப்பு தன் சகோதரர்களைக் கடைசியாக சோதிக்கிறான். அவர்களுடைய பணத்தையெல்லாம் அவரவர்களுடைய சாக்குகளில் திரும்பப் போட்டுவிட்டான், ஆனால் தன்னுடைய சொந்த விசேஷ வெள்ளிப் பாத்திரம் பென்யமீனின் சாக்கின் வாயிலே வைக்கப்பட்டது. அவர்கள் போனபின்பு யோசேப்பு தன் வீட்டு விசாரனைக்காரனை அனுப்பி அவர்கள் மீது திருட்டுப் பழியை சுமத்தி, தன்னுடைய பாத்திரத்துக்காக அவர்களுடைய சாக்குகளை சோதனையிடச் சொன்னான். அது பென்யமீனின் சாக்கில் கண்டெடுக்கப்பட்டபோது, சகோதரர்கள் அனைவரும் தங்கள் அங்கிகளைக் கிழித்தனர். யோசேப்பைச் சந்திக்க அவர்கள் கூட்டிச்செல்லப்பட்டார்கள். யூதா இரக்கத்துக்காகக் கெஞ்சினான். பென்யமீன் தன்னுடைய தகப்பனிடம் திரும்பிச்செல்ல அனுமதிக்கப்படுவதற்கு அவனுக்குப் பதிலாக தான் அடிமையாவதற்கு முன்வருகிறான்.—ஆதியாகமம் 43:15—44:34.
13 தன்னுடைய சகோதரர்களின் மனமாற்றத்தை உறுதிசெய்துகொண்ட யோசேப்பு இனிமேலும் தன்னுடைய உணர்ச்சிகளை அடக்கமுடியவில்லை. எல்லோரையும் வெளியே செல்லும்படியாக சொல்லிவிட்டு யோசேப்பு சொன்னதாவது: “நீங்கள் எகிப்துக்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான். என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப்போட்டதற்காக நீங்கள் சஞ்சலப்பட வேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார் . . . பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமலிருக்க உங்களை ஆதரிக்கிறதற்காகவும், பெரிய ரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார்.” பின்பு தொடர்ந்து தன் சகோதரர்களிடம் சொன்னான்: “நீங்கள் சீக்கிரமாய் என் தகப்பனிடத்தில் போய், . . . ‘என்னிடத்தில் வாரும், தாமதிக்க வேண்டாம் . . . கோசேன் நாட்டில் வாசம்பண்ணி என் சமீபத்தில் இருக்கலாம். உம்முடைய குடும்பத்தாருக்கும் உமக்கும் இருக்கிற யாவற்றிற்கும் வறுமை வராதபடிக்கு அங்கே உம்மைப் பராமரிப்பேன்.’”—ஆதியாகமம் 45:4-15.
14 யோசேப்பின் சகோதரர்களைக் குறித்த செய்தியைப் பார்வோன் கேள்விப்பட்டபோது, தன்னுடைய தகப்பனையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்துக்கு அழைத்துவர எகிப்திலிருந்து வண்டிகளை அனுப்பும்படி யோசேப்பிடம் சொன்னான். மேலும் மிகச் சிறந்த நிலம் அவர்களுடையதாயிருக்கும் என்றும் சொன்னான். சம்பவித்த அனைத்தையும் கேட்ட யாக்கோபு ஆவியில் எழுச்சியடைந்தவனாய் பின்வருமாறு சொன்னான்: “என் குமாரனாகிய யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறானே, இது போதும்; நான் மரணமடையுமுன்னே போய் அவனைப் பார்ப்பேன்.”—ஆதியாகமம் 45:16-28.
ஆவிக்குரிய உணவு ஏராளம்
15 இதெல்லாம் நமக்கு இன்று எதைக் குறிக்கிறது? நம்முடைய ஆவிக்குரிய தேவை குறித்து எப்பொழுதும் உணர்வுள்ளவர்களாக, யோசேப்பின் காலத்திலிருந்த அந்தத் தயவுமிகுந்த பார்வோனைக் காட்டிலும் மிகப் பெரிய ஒருவரை நாம் நோக்கியிருக்கிறோம். அவர்தான் பைபிள் சத்தியம் கிடைக்காமல் பட்டினியில் வாழும் இந்த உலகின் இருண்ட நாட்களினூடே நம்மைக் காத்து வழிநடத்தும் நம்முடைய பேரரசராகிய யெகோவா தேவன். அவருடைய ராஜ்ய அக்கறைகள் சார்பாக நம்மை மும்முரமாக ஈடுபடுத்துவதன் மூலம் அவருடைய பண்டசாலைகளுக்கு நம்முடைய தசமபாகங்களைக் கொண்டுவருவது போலிருக்கிறது. அவர் நமக்கு “இடங்கொள்ளாமற் போகுமட்டும்” எவ்வளவு தாராளமாக “வானத்தின் பலகணிகளைத் திறந்து” நமக்கு ஓர் ஆசீர்வாதத்தைப் பொழிந்திருக்கிறார்!—மல்கியா 3:10.
16 யெகோவாவின் வலது பாரிசத்தில் இருப்பதுதான் அவருடைய உணவு நிர்வாகி, இப்பொழுது அரசராக வீற்றிருக்கும் மகிமைப் படுத்தப்பட்ட இயேசு. (அப்போஸ்தலர் 2:34-36) உயிரோடிருப்பதற்காக மக்கள் தங்களை அடிமைகளாக விற்றுவிட வேண்டியதாயிருந்ததுபோல, தொடர்ந்து உயிர்வாழ விரும்பும் எல்லாரும் இன்று இயேசுவிடமாக வரவேண்டும், கடவுளுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்தவர்களாய் இயேசுவின் சீஷர்களாக வேண்டும். (லூக்கா 9:23, 24) உணவுக்காக யாக்கோபு தன்னுடைய குமாரர்களை யோசேப்பிடமாகப் போகச் செய்ததுபோல, யெகோவா மனந்திரும்பிய மனிதரைத் தம்முடைய நேச குமாரனாகிய இயேசு கிறிஸ்துவிடமாக வழிநடத்துகிறார். (யோவான் 6:44, 48-51) தம்மைப் பின்பற்றுகிறவர்களை, இயேசு, பட்டணங்கள்போன்ற சபைகளில்—இன்று உலகமுழுவதுமுள்ள 54,000-க்கும் அதிகமான சபைகளில்—கூட்டிச் சேர்க்கிறார். இங்கு கிடைக்கும் ஏராளமான ஆவிக்குரிய உணவிலிருந்து இவர்கள் போதிக்கப்படுகிறார்கள். மற்றும் நிலத்தில் விதைப்பதற்கு “விதை”யாக ஏராளமான “தானியமும்” அளிக்கப்படுகின்றனர். (ஆதியாகமம் 47:23, 24; மத்தேயு 13:4-9, 18-23) இந்த மனமுவந்த வேலையாட்கள் யெகோவாவின் சாட்சிகள்! இவர்களில் அதிகமதிகமான ஆட்கள் முழுநேர பயனியர் சேவைக்காகத் தங்களை மனமுவந்து அளிக்கிறார்கள். கடந்த ஆண்டு இந்த சிலாக்கியமிகுந்த வேலையில் ஓர் உச்சநிலையாக ஒரு மாதத்தில் 6,50,095 பேர் பங்குகொண்டனர். இது சராசரியாக சபைக்கு 11 பயனியர்களாக இருந்தது!
17 யோசேப்பின் ஒன்றுவிட்ட எல்லா சகோதரர்களும் தங்களுடைய பழைய எண்ணங்களிலிருந்தும் செயல்களிலிருந்தும் மனந்திரும்பியவர்களாய் அவனுடன் எகிப்தில் ஒன்றுசேர்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சோதோம் உட்பட எகிப்து, இயேசு கழுமரத்தில் அறையப்பட்ட இந்த உலகத்துக்குப் படமாக இருக்கிறது. (வெளிப்படுத்துதல் 11:8) இது சகரியா 8:20-23-ஐ நமக்கு நினைவுபடுத்துகிறது. இதில் உச்சக்கட்டமாக பத்து மனிதர்களைப் பற்றிய விவரம் காணப்படுகிறது. அவர்கள் சொல்லுகிறார்கள்: “உங்களோடே கூடப்போவோம்,” அதாவது யெகோவாவின் அபிஷேகம் பண்ணப்பட்ட மக்களோடு போவோம் என்கிறார்கள். அவர்களில் மீதியானோர் இன்னும் பூமியில் சேவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
18 என்றபோதிலும் யாக்கோபின் பிரியமுள்ள மனைவியாகிய ராகேலின் உயிர் பிரிய கடினமாகப் பிரசவித்த யோசேப்பின் சொந்த சகோதரனாகிய பென்யமீனைப் பற்றியதென்ன? பென்யமீன் யோசேப்பால் விசேஷமாக நேசிக்கப்பட்டான். தன்னுடைய சொந்த தாயின் இந்த மகனிடம் ஒரு நெருங்கிய உறவைக் கொண்டிருந்தான் என்பதில் சந்தேகமில்லை. யோசேப்பின் வீட்டில் ஆயத்தம் செய்யப்பட்ட விருந்தின்போது முதன்முறையாக எல்லா 12 சகோதரர்களும் மீண்டும் ஒன்றுசேர்ந்த சமயத்தில் பென்யமீன் ஐந்து பங்கு பெற்றதற்கு இது காரணம் அளிக்கிறது. இது இன்றைய அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோரை சித்தரிக்கிறதல்லவா? அவர்களில் இன்று உயிரோடிருக்கும் பலர் 1919 முதல் கர்த்தர் பக்கமாக கூட்டிச் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு விசேஷ பங்கைப் பெற்றிருக்கிறார்கள், ‘ஆவி’ தங்களுடைய ஆவியுடனேகூட சாட்சி கொடுப்பதில்’ இந்த பென்யமீன் வகுப்பு ஒரு விசேஷ பங்கைப் பெற்றிருக்கிறது. (ரோமர் 8:16) கர்த்தருடைய “ஆடுகள்” அவர்களுக்கு ஊழியம் செய்ய, இவர்களுடைய உத்தமமும் பரீட்சிக்கப்பட்டிருக்கிறது.—மத்தேயு 25:34-40.
19 யாக்கோபையும் அவனுடைய வீட்டாரையும் பார்வோன் எகிப்துக்குக் கொண்டுவந்தபோது அங்கு குடியேறிய எல்லா ஆண்களின் எண்ணிக்கையும் 7 மற்றும் 10 என்ற எண்களின் பெறுக்கல் எண்ணாக இருந்தது. இந்த இரண்டு எண்களும் வேத வசனங்கள் முழுவதிலும் குறிப்பிடத்தக்க வகையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது, அநேக சமயங்களில் “7” பரலோகத்துக்குரியதும் “10” பூமிக்குரியதுமான முழுமையைக் குறிக்கிறது. (வெளிப்படுத்துதல் 1:4, 12, 16; 2:10; 17:12) இது இன்றைய நிலைக்கு இணையாக இருக்கிறது. யெகோவா தம்முடைய “தேசத்தில்,” இப்பொழுது நாம் அனுபவித்துக்களிக்கும் ஆவிக்குரிய பரதீஸில், தம்முடைய சாட்சிகள் குடும்பத்தில் கடைசி நபரையும் கூட்டிச் சேர்ப்பார் என்பதை எதிர்பார்க்கலாம். (எபேசியர் 1:10-ஐ ஒப்பிடவும்) “யெகோவா தம்முடையவர்களை அறிவார். பார்வோன் ஆட்சியின் சமயத்தில் கோசேன் இருந்ததுபோல, யெகோவா இப்பொழுதுங்கூட அவர்களை “தேசத்திலுள்ள நல்ல இடத்திலே’ குடியேற்றுகிறார்.—ஆதியாகமம் 47:5, 6; 2 தீமோத்தேயு 2:19.
20 யோசேப்பின் நாளில், பஞ்சத்தின் வருஷங்கள் மிகுதியின் வருஷங்களைப் பின்தொடர்ந்தது. இன்று அவை ஒரே சமயத்தில் செல்கின்றன. யெகோவாவின் தயவுக்குப் புறம்பான தேசத்திலிருக்கும் ஆவிக்குரிய பஞ்சத்துக்கு முரணாக, யெகோவாவின் வணக்க ஸ்தலத்தில் ஏராளமான ஆவிக்குரிய உணவு இருக்கிறது. (ஏசாயா 25:6-9; வெளிப்படுத்துதல் 7:16, 17) ஆம், கிறிஸ்தவமண்டலத்தில் யெகோவாவின் வார்த்தைகளைக் கேட்பதற்காக ஒரு பஞ்சம் நிலவுகிறபோதிலும், ஆமோஸ் முன்னறிவித்தபடி, யெகோவாவின் வார்த்தை பரம எருசலேமிலிருந்து புறப்பட்டு வருகிறது. அது நம்மை எவ்வளவாக மகிழச் செய்கிறது!—ஆமோஸ் 8:11; ஏசாயா 2:2, 3; 65:17, 18.
21 இன்று பெரிய யோசேப்பாகிய இயேசு கிறிஸ்துவின் வழிநடத்துதலின் கீழ் பட்டணம் போன்ற சபைகளில் கூட்டிச்சேர்க்கப்படும் பெரிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறோம். அங்கு நாம் ஏராளமான பலத்த ஆவிக்குரிய உணவை அருந்துவதோடுகூட சத்தியத்தின் விதைகளையும் விதைக்கலாம், மற்றும் ஆவிக்குரிய உணவு கிடைக்கிறது என்ற நற்செய்தியைப் பரப்பலாம். சர்வலோக பேரரசராகிய யெகோவாவால் அன்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிபந்தனைகளையும் ஏற்பாடுகளையும் ஏற்றுக்கொள்கிறவர்களின் நன்மைக்காக இதை நாம் செய்கிறோம். பெரிய யோசேப்பாகிய இயேசு கிறிஸ்துவை ஓர் ஈவாகத் தந்திருக்கும் நம்முடைய தேவனுக்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாயிருக்கலாம்! இவர் ஆவிக்குரிய உணவின் ஞானமுள்ள நிர்வாகியாக சேவிக்கிறார்! ஆவிக்குரிய பஞ்சத்தின் இந்தக் காலத்தில் இவர்தாமே உயிர்காப்பாளராக செயல்படும்படி யெகோவா இவரை நியமித்திருக்கிறார். இவருடைய முன்மாதிரியைப் பின்பற்றுகிறவர்களாய் இவருடைய தலைமையின் கீழ் நாம் ஒவ்வொருவரும் பரிசுத்த சேவையில் ஊக்கமாய் ஈடுபடுவோமாக. (w87 5⁄1)
[கேள்விகள்]
1. மிகுதியின் வருடங்களின்போது யோசேப்பு என்ன ஞானமான நடவடிக்கையை மேற்கொண்டான்? என்ன பலனுடன்?
2. தனிப்பட்ட என்ன தியாகத்தின்பேரில் மக்கள் தங்களுடைய உணவு தேவைகளைப் பெற்றுக்கொள்ள முடிந்தது?
3. ஏற்ற வேளையில் உணவு அளிப்பதற்காக இயேசு என்ன ஏற்பாட்டை முன்னறிவித்தார்?
4. “அடிமை” வகுப்பு செய்திருக்கும் ஏற்பாடு எப்படி யோசேப்பின் நாளில் செய்யப்பட்ட ஏற்பாட்டுக்கு இசைவாக இருக்கிறது?
5. (எ) நெருக்கடியான காலத்தில் வீட்டாரின் தேவைகளைக் கவனிக்க அடிமை என்ன விசேஷ கவனத்தைச் செலுத்துகிறது? (பி) 1986-ல் “பொங்கிவழிந்த” ஆவிக்குரிய ஏற்பாடுகள் எப்படி யோசேப்பின் காலத்திலிருந்ததற்கு ஒப்பாக இருந்தது?
6, 7. (எ) பஞ்சம் எப்படி பத்து ஒன்றுவிட்ட சகோதரர்களும் யோசேப்புக்கு முன்பாக பணிந்துகொள்வதில் விளைவடைந்தது? (பி) யோசேப்பு தானே இப்பொழுது எந்த விதங்களில் சோதனையான கட்டத்திலிருந்தான்?
8. யோசேப்பு எதனால் வழிநடத்தப்படுவான்? இயேசுவையும் அவருடைய சீஷர்களையும் குறித்ததில் இது எதை எடுத்துக்காட்டுகிறது?
9, 10. (எ) யோசேப்பு இப்பொழுது என்ன வழியை மேற்கொண்டான்? ஏன்? (பி) இயேசு காண்பிக்கவிருந்ததற்கு ஒப்பான இரக்கத்தை யோசேப்பு எப்படி காண்பித்தான்?
11.. (எ) காலப்போக்கில் யாக்கோபு என்ன செய்ய வற்புறுத்தப்பட்டான்? அவன் ஏன் கடைசியாக அதைச் செய்ய ஒப்புக்கொண்டான்? (பி) ரோமர் 8:32-ம் 1 யோவான் 4:10-ம் எப்படி கடவுளுடைய அன்பை நமக்கு உறுதிப்படுத்துகிறது?
12, 13. (எ) தன்னுடைய சகோதரர்களின் இருதய நிலையைத் தெரிந்துகொள்ள யோசேப்பு எப்படி ஒரு சோதனையை வைத்தான்? (பி) அதன் பலன் யோசேப்பு இரக்கம் காண்பிப்பதற்கு எவ்வாறு அடிப்படையாக இருந்தது?
14. யாக்கோபினிடம் மகிழ்ச்சியான என்ன செய்தி சொல்லப்பட்டது?
15. ஆவிக்குரிய பராமரிப்புக்கு நாம் இன்று யாரை நோக்கியிருக்கிறோம்? ஏராளமாக அளிக்கப்படுவோம் என்று நாம் எப்படி உறுதியளிக்கப்படக்கூடும்?
16. (எ) ஜீவனைப் பாதுகாக்கும் “உணவு” இன்று எங்கு மட்டுமே காணப்படுகிறது? (பி) பஞ்சத்தில் வாடிக்கொண்டிருக்கும் மனிதவர்க்கத்தின் சார்பாக “தானியம்” விதைக்கப்படுதல் எப்படி விரிவாக்கப்பட்டிருக்கிறது?
17. வேறு எந்தத் தீர்க்கதரிசன விவரப்பதிவுங்கூட பத்து ஒன்றுவிட்ட சகோதரர்களும் யோசேப்போடு ஒன்றுசேர்வதற்கு ஒப்பாக இருக்கிறது?
18. பென்யமீனிடம் காண்பிக்கப்பட்ட விசேஷமான தயவு நவீன காலங்களில் எதற்கு ஒப்பாயிருக்கிறது?