உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • th படிப்பு 13 பக். 16
  • நடைமுறைப் பயனைத் தெளிவாகச் சொல்வது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நடைமுறைப் பயனைத் தெளிவாகச் சொல்வது
  • வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • இதே தகவல்
  • பொருத்தமான முன்னுரை
    வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • இதயத்தைத் தொடுவது
    வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • ஆர்வத்துடிப்பு
    வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • கேட்பவர்களுக்குப் பிரயோஜனமான தகவல்களைச் சொல்வது
    வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
மேலும் பார்க்க
வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
th படிப்பு 13 பக். 16

படிப்பு 13

நடைமுறைப் பயனைத் தெளிவாகச் சொல்வது

வசனம்

நீதிமொழிகள் 3:21, அடிக்குறிப்பு

சுருக்கம்: நீங்கள் பேசும் விஷயம் தங்களுடைய வாழ்க்கைக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள கேட்பவர்களுக்கு உதவி செய்யுங்கள். கற்றுக்கொள்ளும் விஷயங்களை அவர்கள் எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்றும் புரிய வையுங்கள்.

எப்படிச் செய்வது?

  • கேட்பவர்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள். நீங்கள் சொல்லும் விஷயத்தை அவர்கள் ஏன் கேட்க வேண்டுமென்று நன்றாக யோசித்துப் பாருங்கள். அந்த விஷயத்தின் எந்த அம்சம் முக்கியமாக அவர்களுக்கு உதவும் என்றும் யோசித்துப் பாருங்கள்.

  • கேட்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பேச்சு முழுவதும் சொல்லுங்கள். கேட்பவர்கள் ஒவ்வொருவரும், ‘இது எனக்கே சொன்ன மாதிரி இருக்கு’ என்று ஆரம்பத்திலிருந்தே நினைக்க வேண்டும். ஒவ்வொரு முக்கியக் குறிப்பையும் விளக்கும்போது, அதை எப்படி வாழ்க்கையில் பொருத்துவது என்று சொல்லுங்கள். பொதுப்படையாகப் பேசாமல் திட்டவட்டமாகப் பேசுங்கள்.

    நடைமுறை ஆலோசனை

    பைபிள் நியமங்களை எப்படிப் பொருத்தலாம் என்று விளக்கும்போது, அன்போடும் அனுதாபத்தோடும் பேசுங்கள். கேட்பவர்களை குற்றவாளிகள்போல் உணர வைக்காதீர்கள். அதற்குப் பதிலாக, அவர்களுக்கு இருக்கும் அன்பையும் விசுவாசத்தையும் பலப்படுத்துங்கள். சரியானதைச் செய்ய அவர்களுடைய இதயம் அவர்களைத் தூண்டும் என்பதில் நம்பிக்கையோடு இருங்கள்.

ஊழியத்தில்

ஊழியத்துக்குத் தயாரிக்கும்போது, செய்திகளில் வெளிவருகிற விஷயங்களைப் பற்றியும், உங்கள் பகுதியிலுள்ள மக்கள் ஆர்வம் காட்டுகிற விஷயங்களைப் பற்றியும் யோசியுங்கள். அவர்களைச் சந்திக்கும்போது, அந்தச் சூழ்நிலையில் என்ன சொன்னால் அவர்களுக்கு ரொம்பப் பிரயோஜனமாக இருக்குமோ அதைச் சொல்லுங்கள். ஒருவருக்கு எதில் ஆர்வமும் அக்கறையும் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள, அவரிடம் சாதுரியமான கேள்விகளைக் கேளுங்கள். அவர் சொல்வதைக் கேட்டுவிட்டு, அதற்கு ஏற்றபடி பேசுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்