பாடல் 119
வாருங்கள்! புதுத்தெம்பு பெறுங்கள்!
1. பா-லை-வ-ன-மாம் இந்-த உ-ல-கி-லே,
பக்-தி-யற்-றோர் ந-டு-வி-லே
தே-வை ந-மக்-கு நல் வ-ழி-காட்-ட-லே,
நாம் இ-ளைப்-பா-ற நி-ழ-லே.
ச-பை-தான் புத்-து-யிர் த-ரும் சோ-லை-யே,
பக்-தி நீர் ஊற்-றெ-டுக்-கு-தே;
போ-த-னை பே-ரீச்-ச-மாய்த் தித்-திக்-கு-தே,
பு-துத்-தெம்-பு கி-டைக்-கு-தே;
ப-ர-வ-சத்-தில் தே-கம் சி-லிர்க்-கு-தே,
நம்-பிக்-கை ப-ல-மா-கு-தே;
யெ-கோ-வா சொல்-ப-டி கூ-டி-டு-வோ-மே,
அ-சட்-டை செய்-ய மாட்-டோ-மே!
2. ம-ணி-ம-ணி-யாய் அ-றி-வு-ரை-க-ளே,
முத்-தாய் புத்-தி-ம-தி-க-ளே,
கோர்த்-துச் சொல்-லி-டும் ச-கோ-த-ரர்-க-ளே,
நம்-பிக்-கைக் க-வ-சங்-க-ளே;
புன்-ன-கை சிந்-தும் நே-ச நெஞ்-சங்-க-ளே,
து-திக்-கின்-ற பிஞ்-சு-க-ளே;
அ-னைத்-தும் ஒ-ரு-மித்-த க-தம்-ப-மே,
யெ-கோ-வா-வின் ஆ-ல-ய-மே!
அங்-கு செல்-ல-வே நே-ரம் வாங்-கு-வோ-மே,
நம் விஸ்-வா-சம் பெ-ரு-கு-மே;
ப-ர-ம ஞா-னம் வே-றெங்-கும் இல்-லை-யே,
ச-பைக்-கு இ-ணை இல்-லை-யே!
(காண்க: சங். 37:18; 140:1; நீதி. 18:1; எபே. 5:16; யாக். 3:17.)