வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
மார்ச் 1-7
பைபிளில் இருக்கும் புதையல்கள் | எண்ணாகமம் 7-8
“இஸ்ரவேலர்களின் முகாமிலிருந்து கற்றுக்கொள்ளும் பாடங்கள்”
it-1-E பக். 497 பாரா 3
சபையார்
இஸ்ரவேலில் பொறுப்பிலிருந்த ஆண்கள் மக்களின் சார்பாகச் செயல்பட்டார்கள். (எஸ்றா 10:14) அதனால்தான், வழிபாட்டுக் கூடாரத்தை அமைத்த பிறகு “கோத்திரத் தலைவர்கள்” மக்கள் சார்பாக அங்கே காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள். (எண் 7:1-11) நெகேமியாவின் காலத்தில்கூட, குருமார்கள், லேவியர்கள் மற்றும் “ஜனங்களின் தலைவர்கள்” மக்கள் சார்பாகச் செயல்படுவதற்கு “உறுதியான தீர்மானத்தோடு ஓர் ஒப்பந்தத்தை” எழுதி முத்திரை போட்டு அதை உறுதிப்படுத்தினார்கள். (நெ 9:38–10:27) வனாந்தரத்தில் இஸ்ரவேலர்கள் பயணம் செய்த சமயத்தில், “ஜனங்களின் தலைவர்கள், சபையின் பிரதிநிதிகள், பிரபலமானவர்கள்” இருந்தார்கள். அவர்களில் 250 பேரும் கோராகு, தாத்தான், அபிராம், ஓன் ஆகிய நான்கு பேரும், மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராகத் திரண்டார்கள். (எண் 16:1-3) யெகோவா கொடுத்த ஆலோசனையின்படி, இஸ்ரவேலில் இருந்த பெரியோர்களிலிருந்து 70 பேரை மோசே தேர்ந்தெடுத்தார். ‘ஜனங்களைக் கவனித்துக்கொள்வதில்’ இந்த அதிகாரிகள் மோசேக்கு உதவியாக இருந்தார்கள். (எண் 11:16, 17, 24, 25) லேவியராகமம் 4:15-ன் அடிக்குறிப்பின்படி இஸ்ரவேலில் “மூப்பர்கள்” இருந்தார்கள். இவர்கள் மக்களின் பிரதிநிதிகளாக, அதாவது பெரியோர்களாக, தலைவர்களாக, நியாயாதிபதிகளாக, அதிகாரிகளாக இருந்தார்கள் என்று தெரிகிறது.—எண் 1:4, 16; யோசு 23:2; 24:1.
it-2-E பக். 796 பாரா 1
ரூபன்
இஸ்ரவேலர்களுடைய முகாமில், ரூபன் கோத்திரத்தார் வழிபாட்டுக் கூடாரத்தின் தெற்கே கூடாரம் போட்டார்கள். அவர்களுடைய கூடாரத்தின் ஒரு பக்கம் சிமியோன் கோத்திரத்தாரும் இன்னொரு பக்கம் காத் கோத்திரத்தாரும் கூடாரம் போட்டார்கள். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் புறப்பட்டபோது இந்த மூன்று கோத்திரப் பிரிவு ரூபன் கோத்திரத்தின் தலைமையில் போனது. இவர்கள், யூதா, இசக்கார், செபுலோன் ஆகிய மூன்று கோத்திரப் பிரிவுக்குப் பின்னால் போனார்கள். (எண் 2:10-16; 10:14-20) வழிபாட்டுக் கூடாரம் அர்ப்பணிக்கப்பட்ட நாளில், ஒவ்வொரு கோத்திரத்தாரும் இந்த வரிசையில்தான் தங்களுடைய காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள்.—எண் 7:1, 2, 10-47.
எண்ணாகம புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
8:25, 26. லேவியரின் பொறுப்பை சரிவர நிறைவேற்றுவதற்காகவும் அவர்களுடைய வயதிற்கு கரிசனை காட்டுவதற்காகவும் கட்டாய சேவையிலிருந்து ஓய்வு பெறும்படி முதியவர்களுக்கு கட்டளையிடப்பட்டது. என்றாலும், அவர்கள் தாங்களாகவே மனமுவந்து மற்ற லேவியருக்கு ஒத்தாசை புரியலாம். இன்று ராஜ்ய அறிவிப்பாளர் ஒருவருக்கு பணி ஓய்வு என எதுவும் இல்லாதபோதிலும், ஒரு மதிப்புமிக்க பாடத்தை இச்சட்டத்தின் நியமம் கற்பிக்கிறது. முதிர் வயதின் காரணமாக ஒரு கிறிஸ்தவரால் சில கடமைகளை நிறைவேற்ற முடியாமல் போனாலும் தன்னுடைய சக்திக்குட்பட்ட சேவையில் அவர் ஈடுபடலாம்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 835
முதல் மகன்களும், முதல் குட்டிகளும்
இஸ்ரவேலர்களுடைய முதல் மகன்கள்தான் அவர்களுடைய குடும்பத்துக்குத் தலைவர்களாக ஆவார்கள். அவர்கள் முழு தேசத்தையும் அடையாளப்படுத்தினார்கள். சொல்லப்போனால், இந்த முழு தேசத்தையும் தன்னுடைய “மூத்த மகன்” என்று யெகோவா சொன்னார். (யாத் 4:22) ஏனென்றால், ஆபிரகாமோடு யெகோவா செய்த ஒப்பந்தத்தின்படி அவர்கள் முதலில் பிறந்த தேசமாக இருந்தார்கள். அவர்களுடைய உயிரை யெகோவா காப்பாற்றியிருந்ததால், ‘இஸ்ரவேலர்களுக்குப் பிறக்கிற முதல் ஆண் குழந்தைகளையும் சரி, அவர்களுடைய மிருகங்களுக்குப் பிறக்கிற முதல் ஆண்குட்டிகளையும் சரி, . . . எனக்கு அர்ப்பணிக்க வேண்டும்’ என்று அவர் கட்டளையிட்டார். (யாத் 13:2) இப்படி, மூத்த மகன்கள் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்களாக இருந்தார்கள்.
மார்ச் 8-14
பைபிளில் இருக்கும் புதையல்கள் | எண்ணாகமம் 9-10
“யெகோவா தன் மக்களை எப்படி வழிநடத்துகிறார்?”
it-1-E பக். 398 பாரா 3
முகாம்
இஸ்ரவேலர்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் போகும்போது பிரம்மாண்டமான விதத்தில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் சுமார் 40 இடங்களில் முகாம் போட்டதாக எண்ணாகமம் 33-ல் மோசே குறிப்பிட்டிருக்கிறார். வழிபாட்டுக் கூடாரத்தின் மேல் மேகம் தங்கியிருக்கும் வரையில் அவர்கள் முகாம் போட்டிருந்த இடத்திலேயே இருப்பார்கள். மேகம் மேலே எழும்பும்போது அவர்களும் அங்கிருந்து புறப்படுவார்கள். “யெகோவாவின் கட்டளைப்படியே அவர்கள் முகாம்போடுவார்கள், யெகோவாவின் கட்டளைப்படியே புறப்படுவார்கள்.” (எண் 9:15-23) வெள்ளியினால் செய்யப்பட்ட இரண்டு எக்காளங்கள் ஊதப்படும்போது அவர்கள் யெகோவாவின் இந்தக் கட்டளைகளின்படி செய்வார்கள். (எண் 10:2, 5, 6) அவற்றை ஏற்ற இறக்கத்துடன் ஊதும்போது, அவர்கள் புறப்படுவார்கள். “இரண்டாம் வருஷம் [கி.மு. 1512] இரண்டாம் மாதம் 20-ஆம் நாளில்” இந்தச் சத்தத்தை அவர்கள் முதல்முறையாகக் கேட்டார்கள். (எண் 10:11-28) ஒப்பந்தப் பெட்டிக்குப் பின்னால், யூதா கோத்திரத்தின் தலைமையில் இசக்கார் மற்றும் செபுலோன் கோத்திரத்தார் அடுத்தடுத்து புறப்பட்டுப் போனார்கள். இந்த முதல் மூன்று கோத்திரப் பிரிவுக்குப் பின்னால் கெர்சோனியர்களும் மெராரியர்களும் வழிபாட்டுக் கூடாரத்தின் சில பாகங்களை எடுத்துக்கொண்டு போனார்கள். அடுத்ததாக ரூபன் கோத்திரத்தின் தலைமையில் சிமியோன் மற்றும் காத் கோத்திரத்தார் அடுத்தடுத்து போனார்கள். இந்த மூன்று கோத்திரப் பிரிவுக்குப் பின்னால் கோகாத்தியர்கள் புனிதப் பொருள்களை எடுத்துக்கொண்டு போனார்கள். அவர்களுக்குப் பின்னால் எப்பிராயீம் கோத்திரத்தின் தலைமையில் மனாசே மற்றும் பென்யமீன் கோத்திரத்தார் அடுத்தடுத்து புறப்பட்டுப் போனார்கள். கடைசியில், தாண் கோத்திரத்தின் தலைமையில் ஆசேர் மற்றும் நப்தலி கோத்திரத்தார் அடுத்தடுத்து போனார்கள். இந்த மூன்று கோத்திரப் பிரிவு எல்லா கோத்திரங்களுக்கும் காவலாகப் போனது. இப்படி, எண்ணிக்கையில் அதிகமாகவும் பலசாலிகளாகவும் இருந்த இரண்டு பிரிவுகள்தான் முன்னும் பின்னும் காவலாகப் போயின.—எண் 10:11-28.
கடவுள் வழிநடத்துவதை உணர்கிறீர்களா?
கடவுளுடைய வழிநடத்துதலை மதிக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்? ‘உங்களைத் தலைமைதாங்கி நடத்துகிறவர்களுக்குக் கீழ்ப்படிந்து, அடிபணிந்து நடங்கள்’ என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (எபி. 13:17) அப்படிச் செய்வது எப்போதுமே எளிதாக இருக்காது. உதாரணத்திற்கு, நீங்கள் மோசேயின் காலத்தில் வாழ்வதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். சில நாட்கள் நடந்து சென்ற பிறகு, அந்த ஸ்தம்பம் ஓர் இடத்தில் நிற்கிறது. எத்தனை நாட்களுக்கு அது அங்கேயே தங்கியிருக்கும்? ஒரு நாளா, ஒரு வாரமா, பல மாதங்களா? ‘எல்லா மூட்டை முடிச்சுகளையும் பிரிப்பதா, வேண்டாமா?’ என்று நீங்கள் யோசிக்கிறீர்கள். முதலில், அத்தியாவசியமான பொருள்களை மட்டும் வெளியே எடுக்கிறீர்கள். சில நாட்களுக்குப் பிறகு, வேறு சில பொருள்களுக்காகத் தேடித் தேடி, எரிச்சலடைந்து கடைசியில் எல்லா மூட்டை முடிச்சுகளையுமே பிரிக்க ஆரம்பிக்கிறீர்கள். இப்படி எல்லாவற்றையும் பிரித்து முடிக்கும் நேரத்தில் அந்த ஸ்தம்பம் மேலே எழும்புவதைப் பார்க்கிறீர்கள்; திரும்பவும் மூட்டைக் கட்ட வேண்டுமே என யோசிக்கிறீர்கள்! அது ஒன்றும் இலேசுப்பட்ட வேலை அல்ல. இருந்தாலும், இஸ்ரவேலர் ‘உடனடியாகப் பிரயாணம் பண்ண’ வேண்டியிருந்தது.—எண். 9:17-22.
அப்படியானால், கடவுள் தரும் வழிநடத்துதலுக்கு நாம் எப்படிப் பிரதிபலிக்கிறோம்? அதை ‘உடனடியாக’ பின்பற்ற முயலுகிறோமா? அல்லது, நாம் வழக்கமாக செய்கிற முறையிலேயே காரியங்களைச் செய்கிறோமா? உதாரணத்திற்கு, பைபிள் படிப்புகள் நடத்துவது... வேற்றுமொழி ஆட்களிடம் பிரசங்கிப்பது... குடும்ப வழிபாட்டைத் தவறாமல் நடத்துவது... மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக் குழுவோடு ஒத்துழைப்பது... மாநாடுகளில் தகுந்த விதத்தில் நடந்துகொள்வது... சம்பந்தமாகச் சமீபத்தில் கொடுக்கப்பட்ட அறிவுரைகளைத் தெரிந்து வைத்திருக்கிறோமா? ஆலோசனையை ஏற்றுக்கொள்ளும்போதும் கடவுளுடைய வழிநடத்துதலை மதிக்கிறோம் என்பதைக் காட்டுகிறோம். முக்கியமான தீர்மானங்களை எடுக்கையில், நம்முடைய சொந்த ஞானத்தைச் சார்ந்திருக்காமல் யெகோவாவும் அவருடைய அமைப்பும் தருகிற வழிநடத்துதலை நாடுகிறோம். கடும் புயல் தாக்குகையில் ஒரு பிள்ளை பாதுகாப்புக்காகப் பெற்றோரிடம் செல்வதுபோல, இந்த உலகில் பிரச்சினைகள் புயல்போல் தாக்குகையில் பாதுகாப்புக்காக நாம் யெகோவாவுடைய அமைப்பின் உதவியை நாடுகிறோம்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 199 பாரா 3
ஒன்றுகூடுவது
ஒன்றுகூடி வருவதன் முக்கியத்துவம். ஒன்றுகூடிவந்து ஆன்மீக நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்காக யெகோவா செய்திருக்கிற ஏற்பாடுகளிலிருந்து முழுமையாகப் பயனடைவது ரொம்ப முக்கியம். வருடாந்தர பஸ்கா பண்டிகை சம்பந்தமாக யெகோவா சொன்னதிலிருந்து இது தெளிவாகத் தெரிகிறது. ஒருவர் தீட்டுப்படாமலோ நீண்டதூரம் பயணம் போகாமலோ இருந்தும் பஸ்கா பண்டிகையைக் கொண்டாடாமல் அதை அலட்சியப்படுத்தினால், அவர் கொல்லப்பட வேண்டும் என்ற கட்டளை கொடுக்கப்பட்டிருந்தது. (எண் 9:9-14) பஸ்கா பண்டிகைக்காக எருசலேமுக்குக் கூடிவரும்படி யூதாவிலும் இஸ்ரவேலிலும் இருந்த மக்களுக்கு எசேக்கியா ராஜா இப்படிச் செய்தி அனுப்பினார்: “இஸ்ரவேல் மக்களே, . . . யெகோவாவிடம் திரும்பி வாருங்கள். . . . உங்கள் முன்னோர்களைப் போல நீங்கள் பிடிவாதமாக இருக்காதீர்கள். யெகோவாவுக்கு அடிபணிந்து நடங்கள். உங்களுடைய கடவுளான யெகோவா நிரந்தரமாகப் புனிதப்படுத்திய ஆலயத்துக்கு வந்து, அவருக்குச் சேவை செய்யுங்கள். அப்போதுதான், உங்கள்மீது அவருக்கு இருக்கிற கடும் கோபம் குறையும். . . . உங்கள் கடவுளான யெகோவா கரிசனையுள்ளவர், இரக்கமுள்ளவர். நீங்கள் அவரிடம் திரும்பி வந்தால் அவர் முகத்தைத் திருப்பிக்கொள்ள மாட்டார்.” (2நா 30:6-9) வேண்டுமென்றே அந்தப் பண்டிகைக்கு வராமல் இருப்பது, யெகோவாவை ஒதுக்கித்தள்ளுவதை அர்த்தப்படுத்தியது. பஸ்கா பண்டிகையைப் போன்ற பண்டிகைகளை கிறிஸ்தவர்கள் கொண்டாடுவதில்லை என்பது உண்மைதான். ஆனால், ஒன்றுகூடி வருவதற்கான சந்தர்ப்பங்களைத் தவறவிடக் கூடாது என்று கடவுளுடைய மக்களை பவுல் ஊக்கப்படுத்தினார். “அன்பு காட்டுவதற்கும் நல்ல செயல்கள் செய்வதற்கும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தி, ஒருவர்மீது ஒருவர் ஆழ்ந்த அக்கறை காட்ட வேண்டும்; சிலர் வழக்கமாகச் சபைக் கூட்டங்களுக்கு வராமல் இருந்துவிடுவதுபோல் நாமும் இருந்துவிடக் கூடாது. அதற்குப் பதிலாக, ஒன்றுகூடிவந்து ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்த வேண்டும்; நாள் நெருங்கி வருவதை நாம் எந்தளவுக்குப் பார்க்கிறோமோ அந்தளவுக்கு ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்த வேண்டும்” என்று அவர் சொன்னார்.—எபி 10:24, 25.
மார்ச் 15-21
பைபிளில் இருக்கும் புதையல்கள் | எண்ணாகமம் 11-12
“குறைசொல்லும் மனப்பான்மையை ஏன் தவிர்க்க வேண்டும்?”
கேட்பதை மறக்கிறவர்களாய் இராதேயுங்கள்
20 கிறிஸ்தவர்களில் மிகப் பெரும்பான்மையர் ஒருபோதும் பாலுறவு ஒழுக்கக்கேட்டில் ஈடுபடும்படி கவர்ந்திழுக்கப்படுவதில்லை. எனினும், எப்போதும் முறுமுறுப்பதன் மூலம் கடவுளுடைய அங்கீகாரத்தை இழக்கச் செய்யும் போக்கை தொடராமலிருக்க நாம் கவனமாயிருக்க வேண்டும். “அவர்களில் [இஸ்ரவேலரில்] சிலர் ஆண்டவரைச் [“யெகோவாவை,” NW] சோதித்துப்பார்த்துப் பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள். அதுபோல் நாமும் ஆண்டவரைச் [“யெகோவாவை,” NW] சோதித்துப் பார்க்காமல் இருப்போமாக. அவர்களில் சிலர் முறுமுறுத்துச் சங்காரக்காரனால் அழிக்கப்பட்டார்கள்; அதுபோல் நீங்களும் முறுமுறுக்காதிருங்கள்” என பவுல் நமக்கு அறிவுரை கூறுகிறார். (1 கொரிந்தியர் 10:9, 10, தி.மொ.) இஸ்ரவேலர் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக, சொல்லப்போனால் கடவுளுக்கு விரோதமாகவே முறுமுறுத்து, அற்புதமாய் அருளப்பட்ட மன்னாவை குறைகூறினார்கள். (எண்ணாகமம் 16:41; 21:5) வேசித்தனம் செய்தவர்களுடைய விஷயத்தில் கோபப்பட்ட அளவுக்கு இவர்களுடைய முறுமுறுப்பால் யெகோவா கோபப்படவில்லையா? முறுமுறுத்தவர்கள் பலர் பாம்புகளால் கொல்லப்பட்டதாக பைபிள் விவரப்பதிவு காட்டுகிறது. (எண்ணாகமம் 21:6) முந்தின ஒரு சந்தர்ப்பத்தில், முறுமுறுத்த கலகக்காரர்களில் 14,700-க்கும் அதிகமானோர் அழிக்கப்பட்டார்கள். (எண்ணாகமம் 16:49) ஆகையால், யெகோவா தருபவற்றை அவமதிப்பதன் மூலம் யெகோவாவின் பொறுமையைச் சோதிக்காமல் இருப்போமாக.
‘முறுமுறுப்பதை’ தவிருங்கள்
7 இஸ்ரவேலர் எப்படி மாறிவிட்டார்கள் பாருங்கள்! எகிப்திலிருந்து விடுதலையாகி சிவந்த சமுத்திரத்தை பத்திரமாக கடந்தபோது அவர்கள் இருதயம் நன்றியால் நிரம்பி வழிந்தது. அதனால் யெகோவாவைத் துதித்துப் பாடினார்கள். (யாத்திராகமம் 15:1-21) வனாந்தரத்தில் எதிர்ப்பட்ட அசௌகரியங்களாலும் கானானியர்களைப் பற்றிய பயத்தாலும் கடவுளுடைய மக்களின் மனதிலிருந்த நன்றியுணர்வு மறைந்துபோனது, அதற்குப் பதிலாக அதிருப்தி குடிகொண்டது. தங்களுக்குக் கிடைத்த சுதந்திரத்திற்கு நன்றி சொல்வதற்குப் பதிலாக, தாங்கள் கஷ்டப்படுவதாக நினைத்துக்கொண்டு அவரைக் குறைகூறினார்கள். இவ்வாறு முறுமுறுத்தது யெகோவாவின் ஏற்பாடுகளுக்கு சரியான நன்றியுணர்வு இல்லாததையே வெளிக்காட்டியது. ஆக, “எனக்கு விரோதமாய் முறுமுறுக்கிற இந்தப் பொல்லாத சபையாரை எதுவரைக்கும் பொறுப்பேன்?” என்று அவர் கேட்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை.—எண்ணாகமம் 14:27; 21:5.
it-2-E பக். 719 பாரா 4
வாக்குவாதம்
முணுமுணுப்பது. ஒருவருக்கு எதிராக முணுமுணுப்பது அந்த நபரைச் சோர்வடைய வைக்கும், அவருடைய மனதைச் சுக்குநூறாக்கும். இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வந்த கொஞ்ச நாட்களிலேயே யெகோவாவுக்கு எதிராக முணுமுணுத்தார்கள். அவர்களை வழிநடத்த யெகோவா ஏற்பாடு செய்த மோசேயையும் ஆரோனையும் பற்றிக் குறை சொன்னார்கள். (யாத் 16:2, 7) ஒருசமயம், மோசே ரொம்பவே சோர்ந்துபோகும் அளவுக்கு மக்கள் குறை சொன்னார்கள். அதனால், தன்னைக் கொன்றுவிடும்படி கடவுளிடம் அவர் கேட்டார். (எண் 11:13-15) முணுமுணுப்பது ஒருவருடைய உயிரையே பறித்துவிடலாம். மோசேயைப் பற்றி மக்கள் குறை சொன்னதை, தன்னுடைய வழிநடத்துதலுக்கு எதிராகக் குறை சொன்னதாகவே யெகோவா நினைத்தார். (எண் 14:26-30) இப்படிக் குறை சொன்னதால் நிறைய பேர் தங்களுடைய உயிரை இழந்தார்கள்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-2-E பக். 309
மன்னா
விளக்கம். மன்னா, “வெள்ளையாகவும் கொத்துமல்லி விதையைப் போலவும்” இருந்தது. அது “பார்ப்பதற்கு,” வெள்ளைப் பிசின் போல, அதாவது மெழுகு போல ஒளி ஊடுருவக்கூடியதாக இருந்தது. அதன் வடிவம் முத்துபோல் இருந்தது. அதன் சுவை “தேன் கலந்த அப்பத்தைப் போல” அல்லது ‘எண்ணெய் கலந்து சுடப்பட்ட இனிப்பான அப்பத்தை’ போல இருந்தது. திரிகைக் கல்லில் அரைத்த பிறகு அல்லது உரலில் இடித்த பிறகு, பானைகளில் அதை வேக வைப்பார்கள் அல்லது வட்ட ரொட்டிகளாகச் சுடுவார்கள்.—யாத் 16:23, 31; எண் 11:7, 8.
மார்ச் 22-28
பைபிளில் இருக்கும் புதையல்கள் | எண்ணாகமம் 13-14
“விசுவாசம் நமக்குத் தைரியத்தைத் தருகிறது”
விசுவாசமும் தேவபயமும் தருகிற தைரியம்
5 இருப்பினும், அந்த வேவுகாரர்களில் யோசுவா, காலேப் என்ற இருவரும் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குப் போக ஆவலாய் இருந்தார்கள். கானானியர் “நமக்கு இரையாவார்கள்; அவர்களைக் காத்த நிழல் அவர்களைவிட்டு விலகிப்போயிற்று; கர்த்தர் நம்மோடே இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்பட வேண்டியதில்லை” என்று சொன்னார்கள். (எண்ணாகமம் 14:9) ஆதாரமே இல்லாமல் யோசுவாவும் காலேபும் நம்பிக்கையோடு அப்படிச் சொன்னார்களா? இல்லவே இல்லை! பத்து வாதைகளை வரவழைத்ததன் மூலம் பலம்படைத்த எகிப்து தேசத்தையும் அதன் தெய்வங்களையும் யெகோவா சிறுமைப்படுத்தியதை மற்ற ஜனங்களைப் போலவே இவர்களும் கண்ணாரக் கண்டிருந்தார்கள். பிறகு, பார்வோனையும் அவனுடைய படை வீரர்களையும் சிவந்த சமுத்திரத்தில் மூழ்கடித்ததையும் அவர்கள் பார்த்திருந்தார்கள். (சங்கீதம் 136:15) எனவே, பத்து வேவுகாரர்களும் அவர்கள் சொன்னதைக் கேட்ட மற்றவர்களும் அப்படிப் பயப்பட்டதன் மூலம் மிகப் பெரிய தவறு செய்ததாகத் தெரிகிறது. ஏனென்றால், யெகோவா ரொம்பவே வேதனைப்பட்டு, “தங்களுக்குள்ளே நான் காட்டின சகல அடையாளங்களையும் அவர்கள் கண்டும், எது வரைக்கும் என்னை விசுவாசியாதிருப்பார்கள்?” என்று கேட்டார்.—எண்ணாகமம் 14:11.
6 யெகோவா அந்தப் பிரச்சினைக்கான அடிப்படை காரணத்தைக் குறிப்பிட்டார்; அந்த ஜனங்கள் பயப்பட்டது, அவர்களுக்கு விசுவாசம் இல்லாதிருந்ததை அம்பலப்படுத்தியது. ஆம், விசுவாசத்திற்கும் தைரியத்திற்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது; அந்தளவு அவற்றுக்கு நெருங்கிய தொடர்பிருந்ததால், கிறிஸ்தவ சபையையும் அதன் ஆன்மீக நலனையும் குறித்து அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு எழுதினார்: “நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.” (1 யோவான் 5:4) யோசுவாவும் காலேபும் காட்டியதைப் போன்ற விசுவாசத்தை, பெரியோர் சிறியோர், பலமுள்ளோர் பலவீனர் என 60 லட்சத்துக்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகள் வெளிக்காட்டுவதால் இன்று உலகெங்கும் ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி பிரசங்கிக்கப்பட்டு வருகிறது. எந்த எதிரியும், தைரியமிக்க இந்த மாபெரும் படையினரின் வாயை அடைக்க முடியவில்லை.—ரோமர் 8:31.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 740
இஸ்ரவேலர்களுக்குக் கடவுள் கொடுத்த தேசம்
இஸ்ரவேலர்களுக்குக் கடவுள் கொடுத்த தேசம் உண்மையிலேயே ஒரு நல்ல தேசம். கடவுள் வாக்குக்கொடுத்த அந்த தேசத்துக்கு அவர்கள் போவதற்கு முன்னால், அது எப்படிப்பட்ட தேசம் என்பதைப் பார்க்க சில உளவாளிகளை மோசே அனுப்பினார். அங்கே விளைகிறவற்றில் கொஞ்சத்தை எடுத்துவரும்படியும் அவர்களிடம் சொன்னார். அவர்கள் அங்கிருந்து அத்திப்பழங்களையும் மாதுளம்பழங்களையும் ஒரு பெரிய திராட்சைக் குலையையும் எடுத்துக்கொண்டு வந்தார்கள். அந்தத் திராட்சைக் குலையை இரண்டு பேர் ஒரு கம்பத்தில் கட்டித் தூக்கிக்கொண்டு வர வேண்டியிருந்தது! அவர்களுக்கு விசுவாசம் இல்லாததால் பயந்து பின்வாங்கினாலும், அந்தத் தேசத்தைப் பற்றிச் சொல்லும்போது “அது நிஜமாகவே பாலும் தேனும் ஓடுகிற தேசம்” என்றுதான் சொன்னார்கள்.—எண் 13:23, 27.
மார்ச் 29–ஏப்ரல் 4
பைபிளில் இருக்கும் புதையல்கள் | எண்ணாகமம் 15-16
“பெருமையும் மிதமிஞ்சிய தன்னம்பிக்கையும் வேண்டாம்”
யெகோவா உங்களை அறிந்திருக்கிறாரா?
12 என்றாலும், இஸ்ரவேலர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குப் போய்க்கொண்டிருந்த சமயத்தில், கடவுளுடைய ஏற்பாட்டில் குளறுபடிகள் இருப்பதாய் கோராகு நினைத்தார். அதனால் மாற்றங்கள் கொண்டுவர விரும்பினார். இஸ்ரவேலரில் 250 பேர் கோராகுடன் கூட்டுச்சேர்ந்து கொண்டார்கள். யெகோவா தங்களை அறிந்திருந்ததாகவும் தங்களை அங்கீகரித்திருந்ததாகவும் அவர்கள் நினைத்துக்கொண்டார்கள். அதனால் மோசேயிடமும் ஆரோனிடமும், “நீங்கள் மிஞ்சிப்போகிறீர்கள்; சபையார் எல்லாரும் பரிசுத்தமானவர்கள்; கர்த்தர் அவர்கள் நடுவில் இருக்கிறாரே” என்று சொன்னார்கள். (எண். 16:1-3) எப்பேர்ப்பட்ட மிதமிஞ்சிய தன்னம்பிக்கை, எப்பேர்ப்பட்ட கர்வம்! மோசே அவர்களிடம், ‘யெகோவா தம்முடையவன் இன்னான் என்று . . . காண்பிப்பார்’ எனக் கூறினார். (எண்ணாகமம் 16:5-ஐ வாசியுங்கள்.) அடுத்த நாளே, கோராகும் அவரோடு சேர்ந்துகொண்ட எல்லாரும் சமாதியானார்கள்.—எண். 16:31-35.
யெகோவா உங்களை அறிந்திருக்கிறாரா?
11 யெகோவாவின் ஏற்பாட்டிற்கும் அவருடைய தீர்மானங்களுக்கும் மரியாதை காட்டும் விஷயத்தில் மோசேக்கும் கோராகுக்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசம் இருந்தது. அவர்களுடைய செயல்களுக்கும் யெகோவா அவர்களைக் கருதிய விதத்திற்கும் சம்பந்தம் இருந்தது. கோராகு லேவி கோத்திரத்தைச் சேர்ந்த கோகாத்திய வம்சத்தார். அவர் பல பாக்கியங்களைப் பெற்றிருந்தார்; யெகோவா செங்கடலைப் பிளந்து இஸ்ரவேலரைக் காப்பாற்றியதைப் பார்த்தது... சீனாய் மலையில், கீழ்ப்படியாத இஸ்ரவேலருக்கு விதிக்கப்பட்ட நியாயத்தீர்ப்பை ஆதரித்தது... ஒப்பந்தப் பெட்டியை இடம்விட்டு இடம் எடுத்துச் செல்வதில் பங்கு வகித்தது... போன்றவை அந்தப் பாக்கியங்களில் அடங்கியிருக்கலாம். (யாத். 32:26-29; எண். 3:30, 31) அநேக ஆண்டுகளாய் அவர் யெகோவாவுக்கு உண்மையோடு இருந்திருந்தார், அதனால் இஸ்ரவேலர் பலருடைய மதிப்பு மரியாதையைச் சம்பாதித்திருந்தார்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
முக்கியமானதற்கே முதலிடம்!
யெகோவா இதைப் பெரும் தவறாக கருதினார். “கர்த்தர் மோசேயை நோக்கி: அந்த மனிதன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படவேண்டும்” என சொன்னதாக பைபிள் குறிப்பிடுகிறது. (எண்ணாகமம் 15:35) அந்த மனிதன் செய்ததை கடவுள் ஏன் சாதாரண காரியமாக நினைக்கவில்லை?
விறகு பொறுக்குவதற்கும், உணவு, உடை, இருப்பிடம் போன்ற தேவைகளைக் கவனித்துக்கொள்வதற்கும் மக்களுக்கு ஆறு நாட்கள் இருந்தன. ஏழாவது நாளோ அவர்களுடைய ஆவிக்குரிய தேவைகளுக்காக அர்ப்பணிக்கப்பட வேண்டிய நாள். விறகு பொறுக்குவதில் தவறேதுமில்லை; ஆனால் யெகோவாவை வணங்குவதற்காக ஒதுக்கி வைக்கப்பட்ட நேரத்தில் அதைச் செய்ததே தவறாகியது. கிறிஸ்தவர்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு கட்டுப்பட்டவர்களாய் இல்லாதபோதிலும், இன்று நம்முடைய வாழ்க்கையில் முக்கியமானதற்கு முதலிடம் கொடுக்க வேண்டியதன் சம்பந்தமாக இந்தச் சம்பவம் நமக்கு ஒரு பாடத்தை கற்பிக்கிறதல்லவா?—பிலிப்பியர் 1:10.
ஏப்ரல் 5-11
பைபிளில் இருக்கும் புதையல்கள் | எண்ணாகமம் 17-19
“நானே உன் சொத்து”
யெகோவாவை உங்கள் பங்காகக் கொண்டிருக்கிறீர்களா?
9 நிலத்தில் ஒரு பங்கைப் பெறாத லேவியரைச் சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் தூய வழிபாட்டை முன்னேற்றுவிக்கவே தங்களை அர்ப்பணித்திருந்ததால், பொருளாதாரத் தேவைகளுக்கு யெகோவாவைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. “நானே உன் பங்கு” என்று அவர் சொல்லியிருந்தார். (எண். 18:20) குருமாரையும் லேவியரையும் போல் நாம் ஓர் ஆலயத்தில் சேவை செய்யவில்லையென்றாலும், அவர்களுடைய மனப்பான்மையைப் பின்பற்றலாம்; யெகோவா நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்வார் என்ற நம்பிக்கையுடன் இருக்கலாம். இந்தக் கடைசி காலத்திற்கு முடிவு நெருங்கி வரவர, நம் தேவைகளைக் கவனித்துக்கொள்ளும் சக்தி கடவுளுக்கு இருக்கிறது என்பதில் நம்முடைய நம்பிக்கை மேன்மேலும் வளர வேண்டும்.—வெளி. 13:17.
யெகோவாவே என் பங்கு
4 யெகோவா தம்முடைய சேவைக்காக லேவியரைத் தேர்ந்தெடுத்தபோது, எப்படி அவர்களுடைய பங்காக ஆனார்? அவர்களுக்கு ஒரு நிலத்தைச் சுதந்தரமாகக் கொடுப்பதற்குப் பதிலாக, தமக்குச் சேவை செய்யும் அருமையான பாக்கியத்தை அளித்தார். “ஆசாரியபட்டமே,” அதாவது குருத்துவப் பணியே, யெகோவா அவர்களுக்கு அளித்த சுதந்தரம். (யோசு. 18:7) இதனால் அவர்கள் வறுமையில் தள்ளப்படவில்லை என்பதை எண்ணாகமம் 18:20-ன் சூழமைவு காட்டுகிறது. (எண்ணாகமம் 18:19, 21, 24-ஐ வாசியுங்கள்.) ‘லேவியருடைய வேலைக்காக, இஸ்ரவேலருக்குள்ளவை எல்லாவற்றிலும் தசமபாகம் அவர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுக்கப்பட்டது.’ இஸ்ரவேலின் விளைச்சலிலும் ஆடுமாடுகளிலும் 10 சதவீதத்தை அவர்கள் பெற்றார்கள். அதேபோல், லேவியரும் தாங்கள் பெற்றதிலிருந்து பத்தில் ஒரு பாகத்தைக் குருத்துவப் பணிக்காகக் கொடுக்க வேண்டியிருந்தது; அதுவும் ‘உச்சிதமானதை,’ அதாவது மிகச் சிறந்ததை, கொடுக்க வேண்டியிருந்தது. (எண். 18:25-29) கடவுளுடைய வழிபாட்டுத் தலத்திற்கு இஸ்ரவேலர் கொண்டுவந்த ‘பரிசுத்தமான அன்பளிப்புகளும்’ குருமாருக்குக் கொடுக்கப்பட்டன. ஆகவே, யெகோவா தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வார் எனக் குருமார் நம்புவதற்கு நல்ல காரணம் இருந்தது.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
g02 7/8 பக். 27 பாரா 2
உப்பு—மவுசு மிக்க பொருள்
உப்பு, நிரந்தர மற்றும் ஸ்திரத்தன்மையின் சின்னமாகவும் ஆனது. ஆகவே, பைபிளில் நிரந்தர ஒப்பந்தம் ஒன்று, “உப்பு ஒப்பந்தம்” என்று அழைக்கப்பட்டது. பொதுவாக, ஒப்பந்தம் செய்யும் இரு தரப்பினரும் உப்பிட்ட உணவை சேர்ந்து உண்டனர்; இவ்வாறு அந்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தினர். (எண்ணாகமம் 18:19, அடிக்குறிப்பு) மோசேயின் திருச்சட்டப்படி, பலிபீடத்தில் செலுத்தப்பட்ட பலிகளுடன் உப்பு சேர்க்கப்பட வேண்டியிருந்தது; அது கெட்டுப்போகாமலும் சிதைவுறாமலும் இருப்பதையே குறித்தது.
ஏப்ரல் 12-18
பைபிளில் இருக்கும் புதையல்கள் | எண்ணாகமம் 20-21
“கஷ்டமான சூழ்நிலையிலும் மனத்தாழ்மையோடு இருங்கள்”
சாந்த குணத்தைக் காட்டுங்கள் யெகோவாவைப் பிரியப்படுத்துங்கள்
19 தவறுகள் செய்வதைத் தவிர்ப்போம். மோசேயைப் பற்றி மறுபடியும் யோசித்துப்பாருங்கள். நிறைய வருஷங்களாக, அவர் சாந்தமாக இருந்தார்; யெகோவாவுக்குப் பிரியமாக நடந்துகொண்டார். ஆனால், இஸ்ரவேலர்கள் வனாந்தரத்தில் சுற்றித்திரிந்த கஷ்டமான அந்த 40 வருஷ பயணம் முடிவுக்கு வரவிருந்த சமயத்தில், மோசே சாந்த குணத்தைக் காட்டத் தவறினார். எகிப்தில் அவருடைய உயிரைக் காப்பாற்றிய அவருடைய அக்கா கொஞ்சம் முன்புதான் இறந்துபோயிருந்தார், பிறகு காதேசில் அடக்கம் செய்யப்பட்டிருந்தார். தாங்கள் சரியாகக் கவனிக்கப்படவில்லை என்று இஸ்ரவேலர்கள் மறுபடியும் குறை சொன்னார்கள். இந்தத் தடவை, தண்ணீர் கிடைக்காததால் அவர்கள் “மோசேயோடு வாக்குவாதம்” செய்தார்கள். யெகோவா தந்த சக்தியால் மோசே நிறைய அற்புதங்களைச் செய்திருந்தும், சுயநலமில்லாமல் அத்தனை காலமாக அவர் இஸ்ரவேலர்களை வழிநடத்தியிருந்தும், அந்த மக்கள் மோசேக்கு விரோதமாக முணுமுணுத்தார்கள். தண்ணீர் கிடைக்காததைப் பற்றி மட்டுமல்ல, மோசேயைப் பற்றியும் அவர்கள் குறை சொன்னார்கள். அவர்கள் தாகமாக இருப்பதற்கு ஏதோ மோசேதான் காரணம் என்பதுபோல் முணுமுணுத்தார்கள்.—எண். 20:1-5, 9-11.
சாந்த குணத்தைக் காட்டுங்கள் யெகோவாவைப் பிரியப்படுத்துங்கள்
20 பயங்கர கோபம் வந்ததால், மோசே சாந்த குணத்தைக் காட்டத் தவறினார்; யெகோவா கொடுத்த கட்டளையின்படி செய்யாமல் போய்விட்டார். விசுவாசத்தோடு கற்பாறையைப் பார்த்துப் பேசுவதற்குப் பதிலாக மக்களிடம் கோபமாகப் பேசினார். தான் ஓர் அற்புதத்தைச் செய்யப் போவதாகச் சொன்னதன் மூலம் தனக்குப் புகழ் சேர்த்துக்கொண்டார். பிறகு, கற்பாறையை இரண்டு தடவை அடித்தார்; உடனே அதிலிருந்து தண்ணீர் பாய்ந்து வந்தது. மோசே மிகப் பெரிய பாவத்தைச் செய்வதற்குப் பெருமையும் கோபமும்தான் காரணம். (சங். 106:32, 33) அந்த ஒருசமயத்தில் சாந்த குணத்தைக் காட்டத் தவறியதால், வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்துக்குள் போக மோசே அனுமதிக்கப்படவில்லை.—எண். 20:12.
21 இந்தச் சம்பவத்திலிருந்து, நாம் முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம். முதலாவதாக, தொடர்ந்து சாந்த குணத்தைக் காட்ட நாம் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும். சாந்த குணத்தை ஒரு கணத்துக்கு இழந்துவிட்டால்கூட நமக்குக் கர்வம் வந்துவிடலாம்; பிறகு, முட்டாள்தனமாக எதையாவது பேசிவிடலாம் அல்லது செய்துவிடலாம். இரண்டாவதாக, மனஅழுத்தத்தில் இருக்கும்போது சாந்த குணத்தைக் காட்டுவது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். அதனால், அழுத்தத்தில் இருந்தாலும், சாந்த குணத்தைக் காட்ட கடினமாகப் போராட வேண்டும்.
நீதி வழுவாத நீதிபதி
முதலாவதாக, கடவுள் மோசேயிடம் மக்களைப் பார்த்துப் பேசும்படியும் சொல்லவில்லை, அவர்களைக் கலகக்காரர்கள் என முத்திரை குத்தும்படியும் சொல்லவில்லை. இரண்டாவதாக, மோசேயும் ஆரோனும் கடவுளுக்கு மகிமை சேர்க்கவில்லை. ‘நீங்கள் என்னைப் பரிசுத்தம் பண்ணவில்லை’ என்று கடவுள் சொன்னார். (வசனம் 12) ‘நாங்கள் தண்ணீர் புறப்படப்பண்ணுவோம்’ என்று சொன்னதன் மூலம் அற்புதமாய்த் தண்ணீரை வழங்கியது கடவுள் அல்ல, தானும் ஆரோனுமே என்பதுபோல் மோசே பேசினார். மூன்றாவதாக, முன்பு கலகம் செய்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட அதே தண்டனையே இவர்களுக்கும் கொடுக்கப்பட்டது. அந்தக் கலகக்காரர்கள் கானானுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை; அவ்வாறே மோசேக்கும் ஆரோனுக்கும் நடந்தது. (எண்ணாகமம் 14:22, 23) நான்காவதாக, மோசேயும் ஆரோனும் இஸ்ரவேலரின் தலைவர்களாக இருந்தார்கள். அதிகப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருப்பவர்களிடம் அதிகம் கேட்கப்படும்.—லூக்கா 12:48.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
யெகோவாவைப்போல் பலவீனரைத் தாங்குங்கள்
12 தவறு செய்த அந்த நொடியே ஆரோனைத் தண்டிக்க யெகோவாவுக்கு நியாயமான காரணங்கள் இருந்தன. ஆனால், ஆரோன் இதையெல்லாம் வேண்டுமென்றே செய்யவில்லை, சந்தர்ப்ப சூழ்நிலையும் மற்றவர்களின் வற்புறுத்துதலும்தான் காரணம் என்று அவருக்குத் தெரிந்திருந்தது. அதுமட்டுமல்ல, தவறைச் சுட்டிக்காட்டியபோது அதை உடனடியாக ஒப்புக்கொண்டார், யெகோவா கொடுத்த தண்டனையையும் ஏற்றுக்கொண்டார். (யாத். 32:26; எண். 12:11; 20:23-27) ஆரோன் காட்டிய விசுவாசத்தையும் மனந்திரும்புதலையும் யெகோவா பார்த்தார். அதனால்தான், பல வருடங்களுக்குப் பிறகுகூட ஆரோனையும் அவருடைய குடும்பத்தாரையும் ‘கர்த்தருக்குப் பயந்தவர்கள்’ என்று பைபிள் சொல்கிறது.—சங். 115:10-12; 135:19, 20.
ஏப்ரல் 19-25
பைபிளில் இருக்கும் புதையல்கள் | எண்ணாகமம் 22-24
“யெகோவா சாபத்தை ஆசீர்வாதமாக மாற்றுகிறார்”
“இயேசுவைப் பற்றிய நற்செய்தியை” அறிவித்தல்
5 முதல் நூற்றாண்டைப் போல, இன்றைக்கும் துன்புறுத்தலால் கடவுளுடைய மக்களின் பிரசங்க வேலையை முடக்க முடியவில்லை. கிறிஸ்தவர்கள் அடிக்கடி சிறைச்சாலைக்கோ வேறொரு நாட்டிற்கோ செல்லும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். ஆனால், அங்குள்ள மக்களுக்கு நற்செய்தி அறிமுகமாகத்தான் அது அடிகோலியிருக்கிறது. உதாரணமாக, இரண்டாம் உலகப் போரின்போது நாசி சித்திரவதை முகாம்களில் இருந்தவர்களுக்கு யெகோவாவின் சாட்சிகளால் சிறந்த சாட்சி கொடுக்க முடிந்தது. அங்கு சாட்சிகளை சந்தித்த ஒரு யூதர் சொல்கிறார்... “சிறையில் இருந்த யெகோவாவின் சாட்சிகளின் உறுதியைப் பார்த்தபோது அவர்களுடைய விசுவாசம் பைபிளை ஆதாரமாகக் கொண்டது என்பதை உணர்ந்துகொண்டேன். அதனால் நானும் ஒரு சாட்சியானேன்.”
it-2-E பக். 291
பைத்தியக்காரத்தனம்
யெகோவாவை எதிர்த்து பைத்தியக்காரத்தனமாக நடப்பது. மோவாபிய ராஜாவான பாலாக்கிடமிருந்து பணம் கிடைப்பதற்காக, பிலேயாம் முட்டாள்தனமாக நடந்துகொள்ள நினைத்தான். அதாவது, இஸ்ரவேலர்களுக்கு எதிராக தீர்க்கதரிசனம் சொல்ல நினைத்தான். ஆனால், அவனுடைய திட்டத்தை யெகோவா தலைகீழாக மாற்றி, அப்படிச் செய்ய விடாமல் தடுத்தார். “வாயில்லாத ஜீவன் ஒன்று மனித குரலில் பேசி, அந்தத் தீர்க்கதரிசியின் பைத்தியக்காரச் செயலைத் தடுக்க முயற்சி செய்தது” என்று பிலேயாமைப் பற்றி அப்போஸ்தலன் பேதுரு எழுதினார்.—2பே 2:15, 16; எண் 22:26-31.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
எண்ணாகம புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
22:20-22—பிலேயாமின் மீது யெகோவா ஏன் கடுங்கோபம் கொண்டார்? இஸ்ரவேலரை சபிக்கக் கூடாதென பிலேயாம் தீர்க்கதரிசியிடம் யெகோவா சொல்லியிருந்தார். (எண்ணாகமம் 22:12) ஆனாலும், இஸ்ரவேலை சபிக்க வேண்டுமென்ற எண்ணத்துடனேயே பாலாக்கின் மனிதரோடு அந்த தீர்க்கதரிசி சென்றார். அவர் மோவாபின் ராஜாவை பிரியப்படுத்தி அவரிடமிருந்து வெகுமதியை பெற்றுக்கொள்ள விரும்பினார். (2 பேதுரு 2:15, 16; யூதா 11) இஸ்ரவேலரை சபிப்பதற்கு பதிலாக அவர்களை ஆசீர்வதிக்கும்படி பிலேயாம் பலவந்தப்படுத்தப்பட்டாலும், இஸ்ரவேல் ஆண்களை கெடுப்பதற்கு பாகால் வணக்கத்தாரான பெண்களை உபயோகிக்கும்படி ஆலோசனை கொடுப்பதன் மூலம் ராஜாவின் ஆதரவை அவர் நாடினார். (எண்ணாகமம் 31:15, 16) ஆக, பிலேயாம் மீது கடவுள் கோபம் கொண்டதற்கு காரணம் அவருடைய கீழ்த்தரமான பேராசையே.
ஏப்ரல் 26–மே 2
பைபிளில் இருக்கும் புதையல்கள் | எண்ணாகமம் 25-26
“ஒருவருடைய தைரியமான செயலால் கிடைத்த பலன்”
“பாலியல் முறைகேட்டிலிருந்து விலகி ஓடுங்கள்”
மீனவர் ஒருவர், குறிப்பிட்ட ஒருவகை மீனைப் பிடிப்பதற்காக அந்த மீன் அதிகமாகக் கிடைக்கும் இடத்துக்குப் போகிறார். எந்த இரையைப் போட்டால் அந்த மீன் தூண்டிலில் சிக்குமோ அந்த இரையைக் கொக்கியில் மாட்டி தூண்டில் போடுகிறார். பிறகு, பொறுமையாகக் காத்திருக்கிறார். கொக்கியில் மீன் மாட்டிய உடனேயே தூண்டிலை மேலே இழுக்கிறார்.
2 இதே போல் மக்களையும் சிக்க வைக்க முடியும். இஸ்ரவேலர்களின் உதாரணத்தைக் கவனியுங்கள். அவர்கள் வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்துக்குப் பக்கத்திலுள்ள மோவாப் பாலைநிலத்தில் முகாம்போட்டிருந்தார்கள். அப்போது மோவாப் தேசத்து ராஜா, இஸ்ரவேலர்களைச் சபிப்பதற்காக பிலேயாம் என்ற ஒருவனை அழைத்தான். அவர்களைச் சபித்தால், அவனுக்கு நிறைய பணம் கொடுப்பதாகச் சொன்னான். இஸ்ரவேலர்கள் தங்களுக்கு தாங்களே சாபத்தை வரவழைத்துக்கொள்வதற்காக பிலேயாம் ஒரு வழியைக் கண்டுபிடித்தான். அவர்களைச் சிக்க வைப்பதற்கு ஏற்ற ‘இரையை’ கவனமாகத் தேர்ந்தெடுத்தான். இஸ்ரவேல் ஆண்களை வசீகரிப்பதற்காக அவர்களுடைய முகாமுக்கு இளம் மோவாபியப் பெண்களை அனுப்பினான்.—எண்ணாகமம் 22:1-7; 31:15, 16; வெளிப்படுத்துதல் 2:14.
“பாலியல் முறைகேட்டிலிருந்து விலகி ஓடுங்கள்”
4 பிலேயாமின் சதித்திட்டத்தில் ஏன் இத்தனை இஸ்ரவேலர்கள் சிக்கிக்கொண்டார்கள்? ஏனென்றால், அவர்கள் தங்களுடைய சுயநல ஆசைகளைத் திருப்தி செய்வதைப் பற்றியே நினைத்தார்கள்; தங்களுக்காக யெகோவா செய்த எல்லாவற்றையும் மறந்துவிட்டார்கள். எகிப்தில் அடிமைகளாக இருந்த அவர்களை யெகோவா விடுதலை செய்தார்; வனாந்தரத்தில் அவர்களுக்கு உணவு கொடுத்தார்; வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தின் எல்லைவரை அவர்களைப் பாதுகாப்பாகக் கூட்டிக்கொண்டு வந்தார். இப்படி, கடவுளுக்கு உண்மையாக இருக்க அவர்களுக்கு நிறைய காரணங்கள் இருந்தன. (எபிரெயர் 3:12) அப்படியிருந்தும், பாலியல் முறைகேடு என்னும் கண்ணியில் அவர்கள் சிக்கிக்கொண்டார்கள். அப்போஸ்தலன் பவுல் இப்படி எழுதினார்: “சிலர் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதால் . . . செத்துப்போனார்கள்; அவர்களைப் போல் நாமும் பாலியல் முறைகேட்டில் ஈடுபடாமல் இருப்போமாக.”—1 கொரிந்தியர் 10:8.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 359 பாரா. 1-2
எல்லை
இரண்டு விஷயங்களை அடிப்படையாக வைத்து இஸ்ரவேல் கோத்திரங்களுக்கு தேசம் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதாவது, குலுக்கல் முறையிலும், ஒரு கோத்திரத்தின் அளவின் அடிப்படையிலும் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஒவ்வொரு கோத்திரத்துக்கும் சொத்தாகக் கிடைக்கும் இடம் ஏறக்குறைய எந்தப் பகுதியில் இருக்கும் என்பதை குலுக்கல் முறையில் முடிவு செய்திருக்கலாம். உதாரணத்துக்கு, வடக்கு, தெற்கு, கிழக்கு அல்லது மேற்குப் பகுதியையோ கடற்கரைச் சமவெளியையோ மலைப்பகுதியையோ குலுக்கல் முறையில் கொடுக்கத் தீர்மானித்திருக்கலாம். இது யெகோவாவுடைய தீர்மானமாக இருந்ததால், கோத்திரங்களுக்கு இடையில் பொறாமையோ வாக்குவாதமோ ஏற்பட வாய்ப்பு இருந்திருக்காது. (நீதி 16:33) இதன் மூலம், மரணப்படுக்கையில் யாக்கோபு சொன்ன தீர்க்கதரிசனத்தின்படி ஒவ்வொரு கோத்திரத்துக்கும் ஏற்ற பகுதி கிடைக்கும் விதத்திலும் யெகோவா பார்த்துக்கொண்டார்.—ஆதி 49:1-33.
ஒரு கோத்திரத்துக்கு எந்தப் பகுதியைக் கொடுக்க வேண்டும் என்பதைக் குலுக்கல் முறையில் தீர்மானித்த பிறகு, அதன் எல்லையை அந்தக் கோத்திரத்தின் அளவைப் பொறுத்து தீர்மானிக்க வேண்டியிருந்தது. “நீங்கள் அந்தத் தேசத்தை அந்தந்த கோத்திரங்களுக்கும் குடும்பங்களுக்கும் குலுக்கல் முறையில் பங்குபோட்டுக் கொடுக்க வேண்டும். ஒரு தொகுதியில் நிறைய பேர் இருந்தால் அதிக நிலத்தைக் கொடுக்க வேண்டும், கொஞ்சம் பேர் மட்டும் இருந்தால் கொஞ்சம் நிலத்தை மட்டும் கொடுக்க வேண்டும். குலுக்கல் முறையில் ஒரு கோத்திரத்துக்கு எந்த இடம் விழுகிறதோ அந்த இடத்தைக் கொடுக்க வேண்டும்.” (எண் 33:54) ஒவ்வொரு கோத்திரத்துக்கும் குலுக்கல் முறையில் எந்தப் பகுதி விழுந்தாலும், அந்தந்த கோத்திரத்தின் அளவுக்கு ஏற்றபடி அவற்றுக்குரிய எல்லைகளில் மாற்றம் செய்யப்படலாம். அதன்படி, யூதா கோத்திரத்துக்குக் கிடைத்த பகுதி மிகப் பெரியதாக இருந்ததால், அந்தப் பகுதியில் சிமியோன் கோத்திரத்துக்கும் பங்கு கொடுக்கப்பட்டது.—யோசு 19:9.