கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
இப்படிப் பேசலாம் பகுதியைப் பயன்படுத்துவது எப்படி?
இப்படிப் பேசலாம் பகுதியைத் தயாரிப்பதற்காக சகோதரர்கள் கடினமாக உழைக்கிறார்கள். அதிலிருக்கிற மாதிரி பேசுவதால் சகோதர சகோதரிகளுக்கு ஊழியத்தில் நல்ல பலன்கள் கிடைத்திருக்கின்றன. இருந்தாலும், ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான சூழ்நிலை இருப்பதால் நீங்கள் வித்தியாசமான முறைகளில் உங்களுடைய ஊழியத்தில் பேசலாம். நீங்கள் இருக்கிற இடத்தில் எந்தத் தலைப்பில் பேசினால் மக்கள் ஆர்வமாக கேட்பார்களோ அந்தத் தலைப்பில் தாராளமாகப் பேசலாம். ஆனால் விசேஷ ஊழியத்தை, நமக்குக் கிடைக்கிற ஆலோசனைகளின்படிதான் நாம் செய்வோம். நல்ல செய்தியை எல்லாருக்கும் சொல்ல வேண்டும் என்று இயேசு கொடுத்திருக்கிற கட்டளைக்கு முழுமையாகக் கீழ்ப்படிவதுதான் நம்முடைய குறிக்கோள்.—மத் 24:14.
மாணவர் நியமிப்பு செய்யும்போது வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகத்தில் இருக்கிற இப்படிப் பேசலாம் பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச வேண்டும். (உதாரணத்துக்கு, ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் இருக்கிற இப்படிப் பேசலாம் பகுதியின் முக்கியப் பொருள் ‘சந்தோஷம்’ மற்றும் ‘தாராள குணம்’). இந்த முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து கேள்வி, வசனம், மறுசந்திப்புக்கான கேள்வி, சூழமைவு இதையெல்லாம் ஊழியப் பகுதிக்கு ஏற்ற மாதிரி மாணவர் மாற்றிக்கொள்ளலாம். ஒருவேளை இப்படிப் பேசலாம் பகுதியில் இருப்பதை அப்படியே பேச வேண்டும் என்றால் அது மாணவருக்குச் சொல்லப்படும். இது, ஜூன் 2020 பயிற்சி புத்தகத்தில் பக்கம் 8-ல் வந்த ஆலோசனையை மாற்றீடு செய்கிறது.