-
யெகோவா உங்களை நினைத்தருள்வது எப்படி?காவற்கோபுரம்—2000 | பிப்ரவரி 1
-
-
யெகோவா உங்களை நினைத்தருள்வது எப்படி?
“என் தேவனே, . . . என்னை நினைத்தருளும்” என்று அநேக தடவை கடவுளிடம் நெகேமியா முறையிட்டார். (நெகேமியா 5:19; 13:14, 31) ஜனங்கள் கஷ்டத்தில் தவிக்கும்போது, இந்த மாதிரி வார்த்தைகளில் கடவுளிடம் மன்றாடுவது இயல்பே.
கடவுள் தங்களை நினைக்க வேண்டும் என எந்த அர்த்தத்தில் ஜனங்கள் கேட்கின்றனர்? அவர்களுடைய பெயர்களை வெறுமனே ஞாபகப்படுத்திக்கொள்வதைவிட அதிகத்தை கடவுள் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இயேசுவின் பக்கத்தில் கழுமரத்தில் தொங்கிக்கொண்டிருந்த ஒரு கள்வன் எதிர்பார்த்தது போலதான் இவர்களும் எதிர்பார்க்கின்றனர். அவனோடு இருந்த இன்னொரு கள்வனைப் போலில்லாமல், இவன் இயேசுவிடம் இப்படியாக மன்றாடினான்: “நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்.” தன்னை நினைக்கும்படி மாத்திரம் அவன் இயேசுவிடம் கேட்கவில்லை, தனக்காக ஒன்றை செய்யும்படியும்—அதாவது தன்னை உயிர்த்தெழுப்பும்படியும் மன்றாடினான்.—லூக்கா 23:42.
கடவுளுடைய கருத்தில் ‘நினைப்பது’ என்பது சாதகமான நடவடிக்கை எடுப்பதை அர்த்தப்படுத்துகிறது என பைபிள் காட்டுகிறது. உதாரணமாக, 150 நாட்களுக்கு வெள்ளத்தால் பூமி மூழ்கியிருந்தது. அதன்பின், “தேவன் நோவாவை . . . நினைத்தருளினார்; தேவன் பூமியின்மேல் காற்றை வீசப்பண்ணினார், அப்பொழுது ஜலம் அமர்ந்தது.” (ஆதியாகமம் 8:1) பல நூற்றாண்டுகளுக்குப்பின், பெலிஸ்தியர்களால் குருடாக்கப்பட்டு, சங்கிலிகளால் கட்டுண்ட நிலையில் இருந்த சிம்சோன் இப்படியாக ஜெபித்தார்: ‘இந்த ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும், தேவனே, [“யெகோவாவே,” NW], பலப்படுத்தும்.” மனித சக்திக்கு அப்பாற்பட்ட பெலத்தை சிம்சோனுக்கு தந்து யெகோவா அவரை நினைத்தருளினார். அதன்மூலம், கடவுளுடைய எதிரிகளை அவர் பழிவாங்கினார். (நியாயாதிபதிகள் 16:28-30) நெகேமியாவின் விஷயத்தில் நடந்ததும் இதுவே. யெகோவா அவருடைய முயற்சிகளை ஆசீர்வதித்தார். அதனால், எருசலேமில் உண்மை வணக்கம் மறுபடியும் நிலைநாட்டப்பட்டது.
“தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது” என அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார். (ரோமர் 15:4) விசுவாசமுள்ள ஊழியர்கள் பூர்வ காலங்களில் செய்தது போலவே, நாமும் யெகோவாவுடைய சித்தத்தை செய்வதன்மூலம் அவரை நினைக்க வேண்டும். அப்படி செய்தோமானால், யெகோவாவும் நம்மை நினைப்பார் என உறுதியாய் இருக்கலாம். எந்தெந்த வழிகளில்? நம் அன்றாட தேவைகளைப் பெறுவதில் உதவுவார். சோதனைகளின்போது ஆறுதலை தருவார். தேவ பயமில்லாதவர்கள்மீது நியாயத்தீர்ப்பைக் கொண்டுவரும்போது நம்மை விடுவிப்பார்.—மத்தேயு 6:33; 2 பேதுரு 2:9.
-
-
உங்களை சந்திக்க விரும்புகிறீர்களா?காவற்கோபுரம்—2000 | பிப்ரவரி 1
-
-
உங்களை சந்திக்க விரும்புகிறீர்களா?
கஷ்டம் நிறைந்த இவ்வுலகிலும் நீங்கள் மகிழ்ச்சியைப் பெறமுடியும். அதற்காக கடவுளையும் அவருடைய அரசாங்கத்தையும் நமக்காக அவர் வைத்திருக்கும் எதிர்காலத்தையும் பற்றி பைபிள் சொல்வதை திருத்தமாக அறிந்துகொள்ள வேண்டும். கூடுதல் தகவலைப் பெற விரும்பினால் அல்லது பைபிளை இலவசமாய் கற்றுக்கொடுக்க யாராவது உங்களை சந்திக்க விரும்பினால், தயவுசெய்து Watch Tower, H-58 Old Khandala Road, Lonavla 410 401, Mah., India, அல்லது பக்கம் 30-ல் உள்ள பொருத்தமான விலாசத்துக்கு எழுதுங்கள்.
-