பாடல் 7
என் பலம் யெகோவா
1. வாள் வீ-சும் போர்ப் ப-டை வந்-தா-லு-மே,
நாள் எல்-லாம் என் ப-லம் நீங்-கள்-தா-னே.
தோள் மே-லே உங்-கள் பேர் தாங்-கி-னே-னே,
ஊ-ரார் முன் சொல்-லத்-தான் ஏங்-கி-னே-னே.
(பல்லவி)
என் கோட்-டை நீங்-கள், என் தெம்-பும் நீங்-கள்,
நான் தே-டி சே-ரும் தஞ்-சம் நீங்-கள்.
என் மீட்-பர், என் து-ணை, என் எல்-லா-மே,
நீங்-கள்-தான் தே-வ-னே, யெ-கோ-வா-வே.
2. கண்-டேன் நான் பை-பி-ளில் உண்-மை எல்-லாம்,
வென்-றேன் நான் வாழ்க்-கை-யின் பொய்-கள் எல்-லாம்.
சென்-றேன் நான் நீ-தி-யின் பா-தை எல்-லாம்,
நின்-றேன் நான் உங்-கள் பக்-கம் நாள் எல்-லாம்.
(பல்லவி)
என் கோட்-டை நீங்-கள், என் தெம்-பும் நீங்-கள்,
நான் தே-டி சே-ரும் தஞ்-சம் நீங்-கள்.
என் மீட்-பர், என் து-ணை, என் எல்-லா-மே,
நீங்-கள்-தான் தே-வ-னே, யெ-கோ-வா-வே.
3. வாழ்-வில் நான் சே-வை-தான் செய்-கின்-றே-னே,
வீழ்த்-தத்-தான் பார்க்-கி-றான் சாத்-தான்-தா-னே.
வாள் வந்-து நெஞ்-சி-லே பாய்ந்-தா-லு-மே,
தோள் மா-றி சாய்-வே-னோ யெ-கோ-வா-வே!
(பல்லவி)
என் கோட்-டை நீங்-கள், என் தெம்-பும் நீங்-கள்,
நான் தே-டி சே-ரும் தஞ்-சம் நீங்-கள்.
என் மீட்-பர், என் து-ணை, என் எல்-லா-மே,
நீங்-கள்-தான் தே-வ-னே, யெ-கோ-வா-வே.
(பாருங்கள்: 2 சா. 22:3; சங். 18:2; ஏசா. 43:12.)