பாடல் 61
சாட்சிகளே, முன்னே செல்லுங்கள்!
1. நெஞ்சினில் வாள் வந்து பாய நின்றாலும்,
கொஞ்சம் கூட நம் கண்ணில் பயம் இல்லையே.
சாத்தான் என்னதான் எதிர்த்தாலும்,
யெகோவா நம்மை காப்பார் எந்த நாளும்.
(பல்லவி)
நாம் சாட்சிகள், என்றுமே அஞ்ச மாட்டோமே!
யெகோவாவின் சேவையில் முன்னே செல்வோமே!
பூஞ்சோலை வாழ்வை காணும் நேரம் வந்ததே,
நல்ல செய்தியை எங்கும் சொல்வோமே.
2. வாழ்வில் சுகங்களை தேட மாட்டோமே.
இந்த உலகின் நட்பை நாட மாட்டோமே.
களங்கம் இல்லாமல் நாம் வாழ்வோம்.
உண்மையாய் யெகோவாவின் பக்கம் நிற்போம்.
(பல்லவி)
நாம் சாட்சிகள், என்றுமே அஞ்ச மாட்டோமே!
யெகோவாவின் சேவையில் முன்னே செல்வோமே!
பூஞ்சோலை வாழ்வை காணும் நேரம் வந்ததே,
நல்ல செய்தியை எங்கும் சொல்வோமே.
3. தேவனின் ஆட்சி ஒதுக்கப்பட்டதே.
யெகோவாவின் பேரும் களங்கப்பட்டதே.
நெஞ்சம் இனியும் பொறுக்காது!
களங்கம் துடைக்காமல் உறங்காது!
(பல்லவி)
நாம் சாட்சிகள், என்றுமே அஞ்ச மாட்டோமே!
யெகோவாவின் சேவையில் முன்னே செல்வோமே!
பூஞ்சோலை வாழ்வை காணும் நேரம் வந்ததே,
நல்ல செய்தியை எங்கும் சொல்வோமே.
(பாருங்கள்: யாத். 9:16; பிலி. 1:7; 2 தீ. 2:3, 4; யாக். 1:27.)