உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g20 எண் 3 பக். 10-11
  • உங்கள் நட்பு வட்டத்தை விரிவாக்குங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்கள் நட்பு வட்டத்தை விரிவாக்குங்கள்
  • விழித்தெழு!—2020
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பிரச்சினைக்கு ஆணிவேர்
  • பைபிள் ஆலோசனை
  • நம் நட்பு வட்டத்தை ஏன் விரிவாக்க வேண்டும்?
  • நீங்கள் என்ன செய்யலாம்?
  • அவர்கள் பாகுபாட்டைத் தகர்த்தெறிந்தார்கள்
    விழித்தெழு!—2020
  • அன்பு காட்டுங்கள்
    விழித்தெழு!—2020
  • இன்னும் நிறைய பேரை நான் நண்பர்களாக்கிக்கொள்ள வேண்டுமா?
    இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
  • இனவேற்றுமை உணர்வுகள் சார்ந்த தப்பெண்ணங்களை நான் எவ்விதம் மேற்கொள்ளலாம்?
    விழித்தெழு!—1989
மேலும் பார்க்க
விழித்தெழு!—2020
g20 எண் 3 பக். 10-11
நான்கு வித்தியாசமான பின்னணிகளைச் சேர்ந்த பெண்கள் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய பிள்ளைகள் விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் நட்பு வட்டத்தை விரிவாக்குங்கள்

பிரச்சினைக்கு ஆணிவேர்

நமக்கு எப்படிப்பட்ட ஆட்கள்மேல் தப்பான அபிப்பிராயம் இருக்கிறதோ அப்படிப்பட்ட ஆட்களோடு ஒட்டாமலேயே இருந்தால் நம் மனதில் பாகுபாடு இன்னும் ஆழமாக வேர்விடும். நம்மைப் போன்ற ஆட்களிடம் மட்டும் நட்பு வைத்துக்கொண்டால், நம்முடைய யோசனைகள், உணர்வுகள், செயல்கள்தான் சரியானவை என்று நினைக்க ஆரம்பித்துவிடலாம்.

பைபிள் ஆலோசனை

“உங்கள் இதயக் கதவை அகலமாகத் திறங்கள்.”—2 கொரிந்தியர் 6:13.

இதன் அர்த்தம் என்ன? ‘இதயம்’ என்பது நம்முடைய உணர்ச்சிகளைக் குறிக்கிறது. நம்மைப் போன்ற ஆட்களிடம் மட்டுமே அன்பு காட்டினால் நம் இதயக் கதவு மூடியே இருக்கும். மற்ற ஆட்களிடமும் நட்பு வைத்துக்கொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தை வளர்த்துக்கொண்டால், நம் இதயக் கதவைத் திறக்க முடியும்.

நம் நட்பு வட்டத்தை ஏன் விரிவாக்க வேண்டும்?

மற்றவர்களோடு நெருங்கிப் பழகும்போதுதான் அவர்கள் ஏன் சில விஷயங்களை வித்தியாசமாகச் செய்கிறார்கள் என்பது நமக்குப் புரியவரும். அவர்கள்மேல் இருக்கிற அன்பு வளர வளர, அவர்களைப் பற்றி நமக்கு இருந்த தப்பான அபிப்பிராயம் மனதிலிருந்து மறைந்துவிடும். அவர்கள்மேல் நமக்கு இருக்கிற மதிப்பு அதிகமாகும்; அவர்களுடைய சந்தோஷத்திலும் சோகத்திலும் நாம் பங்குகொள்வோம்.

நஸரே என்ற பெண்ணின் அனுபவத்தைப் பார்க்கலாம். தன்னுடைய நாட்டுக்குக் குடிமாறி வந்திருந்த ஆட்களைப் பற்றி அவருக்குத் தப்பான எண்ணம் இருந்தது. இந்த எண்ணத்தைத் தவிர்க்க எது உதவியது என்று அவரே சொல்கிறார்: “நான் அவங்ககிட்ட நல்லா பழகுனேன், அவங்களோட வேல செஞ்சேன். எங்க சமுதாயத்துல இருக்குறவங்க எந்த மாதிரி ஆட்கள தப்பா நெனச்சாங்களோ அந்த மாதிரி ஆட்களோட பேசிப் பழகுனேன். வித்தியாசமான கலாச்சாரத்த சேந்தவங்ககிட்ட நாம ஃபிரெண்டாகுறப்போ, மத்தவங்க நெனக்கிற மாதிரி அவங்க மோசமானவங்க இல்லனு புரிஞ்சுப்போம். அவங்ககிட்ட அன்பா நடந்துப்போம், அவங்கள உயர்வா மதிப்போம்.”

ஓர் எச்சரிக்கை!

தங்களுக்கும், மற்றவர்களுக்கும் கெடுதல் உண்டாக்குகிற பழக்கவழக்கங்கள் சிலருக்கு இருப்பதால், நண்பர்களை நாம் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். நேர்மையாக, ஒழுக்கமாக நடந்துகொள்ளாதவர்களோடு நாம் பழகாமல் இருப்பதால், நாம் பாகுபாடு காட்டுகிறோம் என்று அர்த்தம் கிடையாது. நாம் கடைப்பிடிக்கிற ஒழுக்க நெறிகளின்படி நடக்காதவர்களுக்கு நாம் கெடுதல் செய்வதுமில்லை, அவர்களுடைய உரிமைகளைப் பறிக்க வழிதேடுவதுமில்லை. ஆனாலும், அவர்களை நம்முடைய நண்பர்களாக தேர்ந்தெடுக்காமல் இருப்பதுதான் நல்லது.—நீதிமொழிகள் 13:20.

நீங்கள் என்ன செய்யலாம்?

வேறொரு நாட்டையோ, இனத்தையோ, மொழியையோ சேர்ந்த மக்களிடம் பேசுவதற்கான வாய்ப்புகளைத் தேடுங்கள். இப்படிச் செய்துபாருங்கள்:

  • தங்களைப் பற்றிய சில விஷயங்களைச் சொல்லும்படி அவர்களிடம் கேளுங்கள்.

  • உங்களோடு சாப்பிட அவர்களைக் கூப்பிடுங்கள்.

  • அவர்கள் சொல்கிற அனுபவத்தைக் கவனமாகக் கேட்டு, அவர்கள் எதை முக்கியமானதாக நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

வாழ்க்கையில் அவர்கள் சந்தித்த சில விஷயங்களை சொல்லும்போது, அவர்கள் ஏன் வித்தியாசமாக இருக்கிறார்கள் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். அப்போது, அவர்கள்மீதும் அந்தப் பிரிவைச் சேர்ந்த மற்றவர்கள்மீதும் நமக்கு நல்ல அபிப்பிராயம் வரும்.

நிஜ அனுபவம்: கந்தசாமி மற்றும் சூக்கம்மா (கனடா)

“நாங்க தென் ஆப்பிரிக்காவுல வளந்தோம். அந்த சமயத்துல அங்க இன ஒதுக்கீட்டுக்கொள்கை அமல்ல இருந்துச்சு. மக்கள் அவங்கவங்க இனத்தோட சேந்துதான் வாழணும்னு அரசாங்கம் கட்டாயப்படுத்துச்சு. அதனால, எல்லாரோட மனசுலயும் பாகுபாடுங்கிற எண்ணம் பற்றியெரிஞ்சுது. நாங்க கறுப்பினரா இருந்ததால வெள்ளையர்கள் சிலர் எங்கள மட்டமா நடத்துனாங்க. அதனால, அவங்கள பாத்தாலே எங்களுக்கு வெறுப்பா இருந்துச்சு. அந்த சமயத்துல, நாங்க பாகுபாடு காட்டுறதா நெனக்கல. மத்தவங்கதான் எங்ககிட்ட பாகுபாடு காட்டுறதா நெனச்சோம்.

எங்களோட எண்ணத்த மாத்திக்க முயற்சி எடுத்தோம். இதயக் கதவ அகலமா திறந்து, வித்தியாசமான பின்னணிய சேந்தவங்களோட நண்பராகுறதுக்கு முயற்சி பண்ணுனோம். வெள்ளையர்களோட பழக ஆரம்பிச்சப்போ, நெறய விஷயங்கள் எங்களுக்குள்ள ஒத்துப்போறத பாக்க முடிஞ்சுது. எல்லாருக்குமே வாழ்க்கையில ஒரே மாதிரியான சூழ்நிலைகளும் பிரச்சினைகளும் வருது.

வெள்ளை இனத்த சேந்த ஒரு தம்பதிய எங்க வீட்டுல ரொம்ப நாள் தங்க வெக்கிறதுக்கு ஒரு வாய்ப்பு கெடச்சுது. அவங்களோட நல்லா பழகுனோம். நாங்க ஒருத்தர ஒருத்தர் நண்பர்களா பாக்க ஆரம்பிச்சோம், சமமாவும் பாக்க ஆரம்பிச்சோம். அதுக்கு அப்புறம் எங்களுக்கு வெள்ளையர்கள்மேல நல்ல அபிப்பிராயம் வர ஆரம்பிச்சுது.”

உண்மையான நண்பர்கள்

யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்துக்கு வெளியில் ஜானியும் கிதியோனும் பிள்ளைகளை அன்பாக வரவேற்கிறார்கள்.

ஜானியும் கிதியோனும் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு இடையில் வித்தியாசமான அரசியல் கொள்கைகள் இருந்தன. ஆனாலும், அவர்கள் நெருங்கிய நண்பர்களாக ஆனார்கள்.

ஜானியும் கிதியோனும்: முன்பு எதிரிகள், இப்போது சகோதரர்கள் என்ற வீடியோவை jw.org-ல் பாருங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்