உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g 1/13 பக். 12-13
  • கேமரூனைச் சுற்றிப் பார்க்கலாமா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கேமரூனைச் சுற்றிப் பார்க்கலாமா?
  • விழித்தெழு!—2013
விழித்தெழு!—2013
g 1/13 பக். 12-13
[பக்கம் 12-ன் படம்]

நாடுகளும் மக்களும்

கேமரூன் கேமரூனைச் சுற்றிப் பார்க்கலாமா?

[பக்கம் 12-ன் வரைப்படம்]

குட்டை மனிதர்கள் (பிக்மீஸ்) என்று சொல்லப்படும் பாக்கா இனத்தவரே கேமரூனில் முதன்முதலில் குடியேறியதாகத் தெரிகிறது. 1500-களில் போர்ச்சுகீசியர்கள் இங்கு குடியேறினார்கள். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, ஃபுளானி என்ற இஸ்லாமிய மக்கள் கேமரூனின் வடக்குப் பகுதியைக் கைப்பற்றினார்கள். இன்று, இங்கு வாழும் 40 சதவீதத்தினர் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள், 20 சதவீதத்தினர் இஸ்லாமியர், மீதி 40 சதவீதத்தினர் ஆப்பிரிக்காவின் பாரம்பரிய மதத்தைச் சேர்ந்தவர்கள்.

[பக்கம் 13-ன் படம்]

கேமரூனில் பேசப்படும் பஸா மொழியில் யெகோவாவின் சாட்சிகள் பைபிள் அடிப்படையிலான பிரசுரங்களைப் பிரசுரித்திருக்கிறார்கள்

கேமரூனின் கிராமப்புறங்களில் வாழும் மக்கள் உபசரிப்புக்கு பேர்போனவர்கள். வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை அன்பாக வாழ்த்தி... உள்ளே அழைத்து... சாப்பாடு கொடுக்காமல் விடமாட்டார்கள். அழைப்பை விருந்தாளிகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், பெருத்த அவமானமாக நினைப்பார்கள். மதித்து ஏற்றுக்கொண்டால் கௌரவமாக நினைப்பார்கள்.

விருந்தாளிகளிடம் முதலில் நலம் விசாரிப்பார்கள், அவர்களுடைய சொந்தபந்தங்களைப் பற்றியும் விசாரிப்பார்கள். ஏன், ஆடுமாடுகளைப் பற்றிக்கூட விசாரிப்பார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! கேமரூனில் பிறந்து வளர்ந்த ஜோசஃப் சொல்கிறார்: “விருந்தாளி கிளம்பும்போது சும்மா ‘போய்ட்டு வாங்க’ன்னு சொன்னா பத்தாது. கொஞ்ச தூரம் வரைக்கும் அவர்கூட பேசிக்கிட்டே போய், அவரை வழியனுப்பி வைக்கிறதுதான் முறை. இப்படிச் செய்யலன்னா தன்னை அவமதித்ததாக விருந்தாளி நினைச்சுக்குவாரு.”

[பக்கம் 13-ன் படம்]

சிறு மரதோணிகள் சனகா நதியில் சர்வசாதாரணமாகக் காணப்படும். கிடைக்கும் எந்தப் பொருளை வைத்தும் கப்பற்பாய்களைச் செய்வார்கள்

நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து சாப்பிடும்போது ஒரே தட்டில் சாப்பிடுவது வழக்கம், அதுவும் சில நேரங்களில் கையால் சாப்பிடுவார்கள். இது ஒற்றுமையை எடுத்துக்காட்டும் முக்கிய சின்னம். நட்பில் ஏற்படும் சிறுசிறு விரிசல்களை ஒட்டவைக்க இப்படி ஒன்றுசேர்ந்து சாப்பிட வைப்பார்கள். சுருக்கமாகச் சொன்னால், “நாங்க இப்ப ஒன்னு சேர்ந்துட்டோம்” என்று சொல்லாமல் சொல்லத்தான் இப்படிச் செய்கிறார்கள். ◼ (g13-E 01)

[பக்கம் 13-ன் படம்]

இந்தப் பத்திரிகையைப் பிரசுரிக்கும் யெகோவாவின் சாட்சிகள் கேமரூனிலும் இருக்கிறார்கள். 300-க்கும் அதிகமான சபைகளில் இருக்கிறார்கள். சுமார், 65,000 பைபிள் படிப்புகளை நடத்தி வருகிறார்கள்

துணுக்குச் செய்திகள்

[பக்கம் 13-ன் படம்]

குட்டை மனிதர்களில் பெரும்பாலானோர் 4-லிருந்து 4.8 அடி (1.2மீ-1.42மீ) உயரம்தான் இருப்பார்கள்

  • மக்கள்தொகை: சுமார் 2 கோடி

  • தலைநகரம்: யாண்டே

  • சீதோஷ்ணம்: வடக்கே வறண்டு வெப்பமாக இருக்கும், கடலோரங்களில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்

  • ஏற்றுமதி: எண்ணெய், கொக்கோ, காபி, பருத்தி, மரக்கட்டை, அலுமினியம்

  • மொழிகள்: ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் 270 ஆப்பிரிக்க மொழிகளும் அதன் கிளை மொழிகள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்