உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g16 எண் 1 பக். 3
  • குடும்பத்தில் ஏன் சண்டை வருகிறது?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • குடும்பத்தில் ஏன் சண்டை வருகிறது?
  • விழித்தெழு!—2016
  • இதே தகவல்
  • யாக்கோபும் ஏசாவும் சமாதானமாகிறார்கள்
    பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • எப்போதும் சந்தோஷமாக இருக்க...
    விழித்தெழு!—2016
  • எதிரும் புதிருமான இரட்டையர்கள்
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
  • யாக்கோபு ஆன்மீக விஷயங்களை உயர்வாக மதித்தார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
விழித்தெழு!—2016
g16 எண் 1 பக். 3
அப்பா-அம்மா சண்டை போடுவதைப் பார்த்து பிள்ளைகள் பயந்துபோய் இருக்கிறார்கள்

அட்டைப்படக் கட்டுரை | சண்டை சச்சரவு இல்லாத குடும்பம்...

குடும்பத்தில் ஏன் சண்டை வருகிறது?

கானாவில் இருக்கும், சாராவுக்கும் ஜேக்கப்புக்கும் கல்யாணமாகி 17 வருடம் ஆகிறது.a “பண விஷயத்திலதான் எங்களுக்கு அடிக்கடி பிரச்சினை வரும். குடும்பத்துக்காக நான் நிறைய செய்வேன். ஆனா, அவர் இஷ்டத்துக்கு செலவு பண்ணுவார். அதை பார்த்து எனக்கு கோவம் கோவமா வரும். ரெண்டு பேரும் கோச்சிக்கிட்டு ரொம்ப நாளைக்கு பேசிக்காம இருப்போம்” என்று சாரா சொல்கிறார்.

அவருடைய கணவன் ஜேக்கப் சொல்கிறார்: “சண்டை வந்தா, நாங்க ரெண்டு பேரும் கன்னாபின்னானு திட்டிப்போம். ஒன்னும் இல்லாத விஷயத்துக்கெல்லாம் கத்தி, கூச்சல் போடுவோம். ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சிக்கிட்டு, மனசுவிட்டு பேசியிருந்தா பிரச்சினையே வந்திருக்காது.”

இந்தியாவில் இருக்கிற நேதனுக்கு கல்யாணம் ஆகி கொஞ்ச நாள்தான் ஆகிறது. ஒருநாள் அவருடைய மாமியாரை, மாமனார் திட்டிவிட்டார். “அத்தைக்கு ஒரே கஷ்டமா போச்சு. கோச்சிக்கிட்டு வீட்டை விட்டு போயிட்டாங்க. ‘ஏன் மாமா அப்படி கத்துனீங்க?’னு கேட்டேன். நான் அப்படி கேட்டதும் அவருக்கு இன்னும் கோவம் வந்திடுச்சு; எங்க எல்லாரையும் கத்த ஆரம்பிச்சிட்டார்.”

“வீட்டுக்கு வீடு வாசற்படி” என்பதுபோல் எல்லார் வீட்டிலும் சண்டை வரும். தப்பான நேரத்தில, தப்பான வார்த்தைகளை சொல்வதால்தான் இப்படியெல்லாம் சண்டை வருகிறது. வாய்தவறி வார்த்தைகளை கொட்டிய உடனே தென்றலாக இருந்தவர்கள்கூட புயலாக மாறிவிடுவார்கள். நாம் எல்லாருமே அடிக்கடி வாய்தவறி ஏதாவது சொல்லிவிடுவோம். மற்றவர்கள் சொல்வதை தப்பு தப்பாக புரிந்துகொள்வோம். எதையோ மனதில் வைத்துதான் இப்படிப் பேசுகிறார்கள் என்று முடிவுகட்டிவிடுவோம். அப்படியென்றால், குடும்பத்தில் சண்டையே வராமல் சமாதானமாக இருக்க முடியாதா?

சண்டை வரும்போது நாம் என்ன செய்ய வேண்டும்? பிரச்சினைகள் பெரிதாக வெடிக்கும்போது நாம் எப்படி சமாதானம் ஆகலாம்? சண்டையே இல்லாமல் எப்போதும் சந்தோஷமாக இருக்க என்ன செய்ய வேண்டும்? (g15-E 12)

a சில பெயர்களை மாற்றியிருக்கிறோம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்