உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g17 எண் 6 பக். 10-11
  • நியுசிலாந்தைச் சுற்றிப் பார்க்கலாமா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நியுசிலாந்தைச் சுற்றிப் பார்க்கலாமா?
  • விழித்தெழு!—2017
விழித்தெழு!—2017
g17 எண் 6 பக். 10-11
நியுசிலாந்தில் இருக்கும் மில்ஃபோர்ட் சவுண்ட்

மில்ஃபோர்ட் சவுண்ட்

நாடுகளும் மக்களும் | நியுசிலாந்து

நியுசிலாந்தைச் சுற்றிப் பார்க்கலாமா?

உலக வரைப்படத்தில் நியுசிலாந்து

சுமார் 800 வருஷங்களுக்கு முன்பு, மயோரி (Maori) என்று அழைக்கப்படும் பழங்குடி மக்கள், கடல் வழியாக பல ஆயிரக்கணக்கான மைல்களைக் கடந்துவந்து நியுசிலாந்தில் குடியேறினார்கள். இது, அவர்கள் விட்டுவந்த பாலினேசிய வெப்பமண்டல தீவுகளைப் போல இல்லாமல் ஒரு நிலப்பகுதியாக இருந்தது. இந்த இடம் மலைகளாலும், பனிக்குன்றுகளாலும், வெந்நீர் ஊற்றுகளாலும், பனியாலும் நிறைந்திருந்தன. சுமார் ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பிறகு, வேறொரு இன மக்கள், தொலைதூரத்தில் இருந்த ஐரோப்பாவிலிருந்து இங்கே வந்து குடியேறினார்கள். ஆங்கிலோ-சாக்ஸன் மற்றும் பாலினேசிய ஆரம்பத்தைக் கொண்ட பாரம்பரியங்கள் இன்றும் நியுசிலாந்தில் இருக்கின்றன. ஏறக்குறைய 90 சதவீத மக்கள் நகரங்களில் வாழ்கிறார்கள். வெலிங்டன் நியுசிலாந்தின் தலைநகரம்; இது, உலகத்தின் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது.

நியுசிலாந்தின் வடக்குத் தீவில் இருக்கிற சூடான சேற்று குளம்

வடக்குத் தீவில் இருக்கிற கொதிக்கும் சேற்று குளம் (mud pools)

நியுசிலாந்தில் கண்ணைக் கவரும் இயற்கை காட்சிகள் நிறைய இருக்கின்றன. நியுசிலாந்து தனிமைப்படுத்தப்பட்டு இருந்தாலும், ஒவ்வொரு வருஷமும் கிட்டத்தட்ட 30 லட்சம் சுற்றுலா பயணிகள் இங்கே வருகிறார்கள்.

போங்கா என்ற மரம்

போங்கா (ponga) என்ற மரம் 30 அடிக்கு (10 மீ.) மேல் வளரும்

டக்காஹி என்ற பறக்க முடியாத பறவை

பறக்க முடியாத பறவையான டக்காஹி (takahe) அழிந்துபோய்விட்டதாக 1948 வரை நம்பப்பட்டது

இங்கே வித்தியாசமான வனவிலங்குகளும் இருக்கின்றன. பறக்க முடியாத பறவை இனங்கள் உலகத்திலேயே இங்கேதான் அதிகம் இருக்கின்றன. பல்லியைப் போன்று இருக்கும் டுவடாரா (tuatara) என்ற ஊரும் பிராணியும் இங்கே இருக்கிறது; இது சுமார் 100 வருஷங்கள் வாழக்கூடியது! பாலூட்டி இனமான சில வகை வௌவால்கள் இங்கே இருக்கின்றன. அதோடு, திமிங்கலம் மற்றும் டால்ஃபின் உட்பட சில பெரிய வகையான கடல்வாழ் பாலூட்டிகளும் இங்கே இருக்கின்றன.

ஏறக்குறைய 120 வருஷங்களாக, யெகோவாவின் சாட்சிகள் இங்கே ஊழியம் செய்துவருகிறார்கள். நியூவன், ரரோடாங்கன், சமோவான், டோங்கன் போன்ற பாலினேசிய மொழிகள் உட்பட, குறைந்தபட்சம் 19 மொழிகளில் இவர்கள் பைபிளைப் பற்றி மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார்கள். ◼

மயோரி மக்கள் பாடுகிறார்கள்

தங்கள் பாரம்பரிய உடையை அணிந்துகொண்டு மயோரி மக்கள் பாடுகிறார்கள்

உங்களுக்குத் தெரியுமா?

நியுசிலாந்து என்ற பெயர், நெதர்லாந்தில் இருக்கிற சீலாந்து என்பதிலிருந்து வந்தது. “நீள வெள்ளை மேகம் கொண்ட நாடு” என்பதுதான் ஆடிரோவா (Aotearoa) என்ற மயோரி பெயரின் அர்த்தம்.

நியுசிலாந்திலுள்ளவர்கள் பெரும்பாலும் ஆங்கிலம் பேசினாலும், மயோரி மொழி இப்போது உயிர்பெற்றிருக்கிறது, இது பள்ளிகளிலும் கற்றுத்தரப்படுகிறது. யெகோவாவின் சாட்சிகளுடைய அதிகாரப்பூர்வ வெப்சைட் jw.org மயோரி மொழியில் இருக்கிறது.

  • ஜனத்தொகை: 47,00,000

  • தலைநகரம்: வெலிங்டன்

  • நிலப்பகுதி: வடக்குத் தீவில் எரிமலை குழம்புகளும் வெப்ப குழம்புகளும் இருக்கின்றன. தெற்குத் தீவில் ஆயிரக்கணக்கான வெந்நீர் ஊற்றுகள் இருக்கின்றன

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்