உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g20 எண் 1 பக். 14-15
  • நிம்மதியான வாழ்க்கை​—⁠கனவு நிஜமாகும்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நிம்மதியான வாழ்க்கை​—⁠கனவு நிஜமாகும்!
  • விழித்தெழு!—2020
  • இதே தகவல்
  • பொருளடக்கம்
    விழித்தெழு!—2020
  • கவலையைக் குறைக்க . . .
    விழித்தெழு!—2010
  • அமைதி தவழும் உலகினிலே!
    விழித்தெழு!—2019
  • நல்ல கவலை, கெட்டகவலை
    விழித்தெழு!—1998
மேலும் பார்க்க
விழித்தெழு!—2020
g20 எண் 1 பக். 14-15
சிறு பையனும் அவனுடைய அப்பாவும் கடல் அலையில் விளையாடுகிறார்கள், அதை அம்மாவும் அவருடைய இரண்டும் மகள்களும் கடற்கரையிலிருந்து ரசிக்கிறார்கள்.

மன அழுத்தம் மறைந்திட...

நிம்மதியான வாழ்க்கை​—கனவு நிஜமாகும்!

மன அழுத்தத்தைக் குறைக்க பைபிளிலுள்ள ஆலோசனைகள் நமக்கு உதவி செய்யும். மன அழுத்தத்தை ஏற்படுத்தும் எல்லாவற்றையும் நம்மால் நீக்க முடியாதுதான். ஆனால், நம் படைப்பாளரால் முடியும். சொல்லப்போனால், நமக்கு உதவி செய்வதற்காக அவர் ஒருவரை நியமித்திருக்கிறார். அவர்தான் இயேசு கிறிஸ்து. அவர் இந்தப் பூமியில் இருந்தபோது நிறைய அற்புதங்களைச் செய்தார். சீக்கிரத்தில் உலகம் முழுவதும், அதைவிட பிரமாண்டமான விஷயங்களைச் செய்யப்போகிறார். என்னவெல்லாம் செய்யப்போகிறார்?

இயேசு நோய்களைக் குணப்படுத்துவார், அன்றுபோல்.

‘பலவிதமான வியாதிகளால் . . . பாதிக்கப்பட்டவர்களை மக்கள் அவரிடம் கொண்டுவந்தார்கள், அவர்களை அவர் குணமாக்கினார்.’​—மத்தேயு 4:24.

இயேசு, எல்லாருக்கும் நல்ல வீடும் உணவும் தருவார்.

“ஜனங்கள் [இயேசுவின் ஆட்சியின்கீழ் இருப்பவர்கள்] வீடுகளைக் கட்டி அதில் குடியிருப்பார்கள். திராட்சைத் தோட்டங்களை அமைத்து அதன் பழங்களைச் சாப்பிடுவார்கள். ஒருவர் கட்டும் வீட்டில் இன்னொருவர் குடியிருக்க மாட்டார். ஒருவருடைய தோட்டத்தின் விளைச்சலை இன்னொருவர் சாப்பிட மாட்டார்.”​—ஏசாயா 65:21, 22.

இயேசுவின் ஆட்சி, உலகளவில் சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டுவரும்.

“அவருடைய ஆட்சியில் நீதிமான்கள் செழிப்பார்கள். சந்திரன் இருக்கும்வரை மிகுந்த சமாதானம் இருக்கும். ஒரு கடலிலிருந்து இன்னொரு கடல் வரைக்கும், ஆறு தொடங்கி பூமியின் எல்லைகள் வரைக்கும் அவருக்குக் குடிமக்கள் இருப்பார்கள். . . . அவருடைய எதிரிகள் மண்ணைக் கவ்வுவார்கள்.”​—சங்கீதம் 72:7-9.

இயேசு, அநியாயத்தை ஒழித்துக்கட்டுவார்.

“[அவர்] ஏழை எளியவர்கள்மேல் பரிதாபப்படுவார். ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். கொடுங்கோல் ஆட்சியிலிருந்தும் வன்முறையிலிருந்தும் அவர்களை விடுவிப்பார்.”​—சங்கீதம் 72:13, 14.

இயேசு, கஷ்டத்துக்கும் மரணத்துக்கும் முடிவுகட்டுவார்.

“இனிமேல் மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது.”​—வெளிப்படுத்துதல் 21:4.

“சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை படுமோசமாக இருக்கும்”

“இதுவரைக்கும் இல்லாத அளவு மன அழுத்தத்தை, கவலையை, வருத்தத்தை, வலியை மக்கள் இன்று அனுபவிக்கிறார்கள்.”​—முகமத் எஸ். யூனிஸ், காலப் (Gallup) நிர்வாக ஆசிரியர்.

மன அழுத்தம் வருவதற்கான ஒரு பொதுவான காரணம் என்ன? பைபிள் அதற்கான பதிலைத் தருகிறது. “கடைசி நாட்களில், சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை படுமோசமாக இருக்கும்” என்று 2 தீமோத்தேயு 3:1 சொல்கிறது. ஏன் அது சமாளிக்க முடியாத காலமாக இருக்கும்? அதற்கடுத்த வசனங்களில், மக்களின் குணங்கள் எந்தளவு மோசமாக இருக்கும் என்று நாம் பார்க்கிறோம். மக்கள் பேராசை பிடித்தவர்களாக, அடங்காதவர்களாக, மதத்தின் பேரில் அட்டூழியம் செய்கிறவர்களாக, கொடூரமானவர்களாக, குடும்பத்தில் பாசம் காட்டாதவர்களாக, சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்களாக இருப்பார்கள் என்றும் இதுபோன்ற இன்னும் நிறைய கெட்ட குணங்களைக் காட்டுபவர்கள் இருப்பார்கள் என்றும் அந்த வசனங்கள் சொல்கின்றன. (2 தீமோத்தேயு 3:2-5) கடவுளுடைய அரசாங்கத்தின் அரசராக, இந்த முழு பூமியையும் இயேசு கிறிஸ்து தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்ளும்போது இந்தக் கடைசி நாட்கள் முடிவடையும்.​—தானியேல் 2:44.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்