உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • th படிப்பு 15 பக். 18
  • உறுதியாகப் பேசுவது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உறுதியாகப் பேசுவது
  • வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • இதே தகவல்
  • உறுதியான நம்பிக்கையோடு பேசுதல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • ஆர்வத்துடிப்பு
    வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • இயல்பாகப் பேசுவது
    வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • கேட்பவர்களுக்குப் பிரயோஜனமான தகவல்களைச் சொல்வது
    வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
மேலும் பார்க்க
வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
th படிப்பு 15 பக். 18

படிப்பு 15

உறுதியாகப் பேசுவது

வசனம்

ரோமர் 8:38, 39

சுருக்கம்: நீங்கள் சொல்வது உண்மை என்றும், முக்கியம் என்றும் உறுதியாக நம்புவதைக் காட்டுங்கள்.

எப்படிச் செய்வது?

  • நன்றாகத் தயாரியுங்கள். முக்கியக் குறிப்புகளைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்; அவை உண்மை என்பதை பைபிள் எப்படி நிரூபிக்கிறது என்றும் புரிந்துகொள்ளுங்கள். ஒருசில எளிமையான வார்த்தைகளில் அவற்றை விளக்குவதற்கு முயற்சி செய்யுங்கள். கேட்பவர்களுக்கு அவை எப்படி உதவி செய்யும் என்பதை நன்றாக யோசித்துப் பாருங்கள். கடவுளுடைய சக்தியைக் கேட்டு ஜெபம் செய்யுங்கள்.

    நடைமுறை ஆலோசனை

    சத்தமாகப் பேசிப் பழகுங்கள். அப்போதுதான், நீங்கள் சொல்லப்போகும் விஷயங்கள் உங்கள் மனதில் நன்றாகப் பதியும்; உங்களால் சரளமாகப் பேசவும் முடியும்.

  • பொருத்தமான வார்த்தைகளைத் தேர்ந்தெடுங்கள். பிரசுரங்களிலுள்ள வார்த்தைகளை அப்படியே சொல்வதற்குப் பதிலாக, சொந்த வார்த்தைகளில் பேசுங்கள். சொல்லும் விஷயத்தை நீங்கள் உறுதியாக நம்புகிறீர்கள் என்பதை உங்கள் வார்த்தைகள் காட்ட வேண்டும்.

  • ஊக்கமாகவும் போலித்தனம் இல்லாமலும் பேசுங்கள். போதுமான சத்தத்தோடு பேசுங்கள். கேட்பவர்களின் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்; உங்கள் கலாச்சாரத்தில் அநாகரிகமாகக் கருதப்பட்டால் மட்டும் அதைத் தவிருங்கள்.

    நடைமுறை ஆலோசனை

    உறுதியாகப் பேச வேண்டும் என்பதற்காக, சாதுரியம் இல்லாமலோ, நீங்கள் சொல்வதுதான் சரி என்பது போலவோ, கருத்துகளைத் திணிப்பது போலவோ பேசலாம் என்று நினைத்துவிடாதீர்கள். உறுதியாகப் பேசினாலும், அன்பாகப் பேசுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்