உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • lff பாடம் 39
  • இரத்தம்​—⁠கடவுள் சொல்வது என்ன?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இரத்தம்​—⁠கடவுள் சொல்வது என்ன?
  • இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஆராய்ந்து பார்க்கலாம்!
  • சுருக்கம்
  • அலசிப் பாருங்கள்
  • இரத்தத்தின் சிறு கூறுகளும் அறுவை சிகிச்சை முறைகளும்
    ‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • ஜீவனுள்ள தேவனுடைய வழிநடத்துதலை பின்பற்றுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
மேலும் பார்க்க
இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
lff பாடம் 39
பாடம் 39. நுண்ணோக்கியில் தெரியும் இரத்த ஓட்டம்.

பாடம் 39

இரத்தம்—கடவுள் சொல்வது என்ன?

அச்சடிக்கப்பட்ட பிரதி
அச்சடிக்கப்பட்ட பிரதி
அச்சடிக்கப்பட்ட பிரதி

இரத்தம் ரொம்ப முக்கியமானது. இரத்தம் இல்லாமல் யாராலும் உயிர்வாழ முடியாது. கடவுள் நம்மைப் படைத்திருப்பதால் இரத்தத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லும் உரிமை அவருக்குத்தான் இருக்கிறது. இரத்தத்தைப் பற்றி அவர் என்ன சொல்லியிருக்கிறார்? அதை நாம் சாப்பிடலாமா? உடம்பில் ஏற்றிக்கொள்ளலாமா? இந்த விஷயத்தில் நாம் எப்படி சரியான முடிவுகளை எடுக்கலாம்?

1. இரத்தத்தைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார்?

ஆரம்ப காலத்தில் யெகோவா தன் மக்களிடம், “எல்லா உயிரினத்துக்கும் இரத்தம்தான் உயிராக இருக்கிறது” என்று சொன்னார். (லேவியராகமம் 17:14) அவர் பார்வையில், இரத்தம் உயிரைக் குறிக்கிறது. அவர் தந்திருக்கும் உயிர் புனிதமானது. அதனால், இரத்தமும் புனிதமானது.

2. இரத்தத்தை எப்படிப் பயன்படுத்த கூடாது என்று கடவுள் சொல்கிறார்?

கிறிஸ்தவ சபை உருவாவதற்கு முன்பே, இரத்தத்தைச் சாப்பிடக் கூடாதென்று யெகோவா தன் மக்களிடம் சொல்லியிருந்தார். (ஆதியாகமம் 9:4-ஐயும் லேவியராகமம் 17:10-ஐயும் வாசியுங்கள்.) கிறிஸ்தவ சபை உருவான பிறகும், “இரத்தத்துக்கு . . . தொடர்ந்து விலகியிருங்கள்” என்று ஆளும் குழு மூலமாகச் சொன்னார்.—அப்போஸ்தலர் 15:28, 29-ஐ வாசியுங்கள்.

இரத்தத்துக்கு விலகியிருப்பது என்றால் என்ன? மதுவைத் தொடக் கூடாதென்று டாக்டர் சொன்னால், நீங்கள் அதைக் குடிக்க மாட்டீர்கள். ஆனால், மதுபானம் கலந்த ஏதாவது உணவைச் சாப்பிடுவீர்களா? அல்லது, ஊசி வழியாக ஏற்றிக்கொள்வீர்களா? மாட்டீர்கள்! அதே மாதிரிதான், நாம் இரத்தத்தைக் குடிக்கவும் கூடாது, இரத்தம் வடிக்காத இறைச்சியையோ இரத்தம் கலந்த உணவுகளையோ சாப்பிடவும் கூடாது.

மருத்துவ சிகிச்சைக்காக இரத்தத்தைப் பயன்படுத்தலாமா? முழு இரத்தம் அல்லது இரத்தத்தின் நான்கு முக்கிய பாகங்களான சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள், பிளாஸ்மா ஆகியவற்றை நாம் ஏற்றிக்கொள்வது கடவுளுடைய சட்டத்துக்கு நேர் எதிரானது. மற்ற சிகிச்சைமுறைகள் கடவுளுடைய சட்டத்துக்கு எதிராக இருக்கின்றனவா இல்லையா என்று தெளிவாகத் தெரியாமல் இருக்கலாம். இதற்கு உதாரணமாக, இரத்தத்தின் முக்கிய பாகங்களிலிருந்து எடுக்கப்படுகிற சிறு கூறுகளைப் பயன்படுத்திக் கொடுக்கப்படுகிற சிகிச்சைமுறைகளைச் சொல்லலாம். சிலசமயம், ஒருவருடைய சொந்த இரத்தத்தைப் பயன்படுத்தியே சிகிச்சைகள் கொடுக்கப்படுகின்றன. ஒரு சிகிச்சையை ஏற்றுக்கொள்ளலாமா வேண்டாமா என்று அவரவர்தான் முடிவு செய்ய வேண்டும்.a—கலாத்தியர் 6:5.

ஆராய்ந்து பார்க்கலாம்!

ஒரு சிகிச்சையை ஏற்றுக்கொள்ளலாமா வேண்டாமா என்று எப்படி முடிவு செய்யலாம்? பார்க்கலாம்.

3. யெகோவாவுக்குப் பிடித்த முடிவை எடுங்கள்

ஒரு சிகிச்சையைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில், யெகோவாவின் மனதை சந்தோஷப்படுத்தும் முடிவை நீங்கள் எப்படி எடுக்கலாம்? வீடியோவைப் பார்த்துவிட்டு, பின்வரும் படிகளை எடுப்பது ஏன் முக்கியம் என்று கலந்துபேசுங்கள்.

வீடியோ: இரத்தம் சம்பந்தப்பட்ட சிகிச்சைமுறைகள்—முடிவு எடுப்பது எப்படி? (5:47)

  • ஞானத்துக்காக ஜெபம் செய்யுங்கள்.—யாக்கோபு 1:5.

  • பைபிள் நியமங்களை எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்று ஆராய்ச்சி செய்யுங்கள்.—நீதிமொழிகள் 13:16.

  • உங்கள் பகுதியில் என்ன சிகிச்சைமுறைகள் இருக்கின்றன என்று கண்டுபிடியுங்கள்.

  • எந்த சிகிச்சைமுறைகளை உங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது என்பதை முடிவு செய்யுங்கள்.

  • உங்கள் முடிவு உங்கள் மனசாட்சியைக் குத்தாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.—அப்போஸ்தலர் 24:16.b

  • மனசாட்சி சம்பந்தப்பட்ட விஷயங்களில், நீங்கள் என்ன முடிவெடுக்க வேண்டுமென்று உங்களுக்கு பைபிளைச் சொல்லிக்கொடுப்பவரோ, மூப்பரோ, உங்கள் மணத்துணையோகூட சொல்ல முடியாது என்பதை ஞாபகம் வையுங்கள்.—ரோமர் 14:12.

  • உங்கள் முடிவை மற்றவர்களும் தெரிந்துகொள்வதற்காக அதை எழுதி வையுங்கள்.

படங்களின் தொகுப்பு: ஒரு மருத்துவ சிகிச்சையைப் பற்றி ஒருவர் முடிவெடுக்கிறார். 1. அவர் ஜெபம் செய்கிறார். 2. பைபிளையும் பைபிள் பிரசுரங்களையும் டாப்லெட்டையும் பயன்படுத்தி ஆராய்ச்சி செய்கிறார். 3. தன்னுடைய டாக்டரிடம் பேசுகிறார்.

4. யெகோவாவின் சாட்சிகள் சிறந்த சிகிச்சையையே தேர்ந்தெடுக்கிறார்கள்

இரத்தம் சம்பந்தமான கடவுளுடைய சட்டத்தை மீறாமலேயே நாம் சிறந்த சிகிச்சைமுறைகளைத் தேர்ந்தெடுக்க முடியும். வீடியோவைப் பாருங்கள்.

வீடியோ: பேட்டி—பேராசிரியர் மாசிமோ பி. ஃப்ராங்கி, M.D. (1:36)

தீத்து 3:2-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • டாக்டர்களிடம் நாம் ஏன் எப்போதுமே மரியாதையோடும் பொறுமையோடும் பேச வேண்டும்?

ஒரு டெஸ்ட் டியூபில் இரத்தத்தின் நான்கு சிறு கூறுகள் A, B, C, D என்று தனித்தனியாகக் காட்டப்பட்டிருக்கின்றன.

ஏற்றுக்கொள்ளக் கூடாது

சொந்தமாகத் தீர்மானிக்கலாம்

A. இரத்தத்தின் பிளாஸ்மா

பிளாஸ்மாவின் சிறு கூறுகள்

B. வெள்ளை அணுக்கள்

வெள்ளை அணுக்களின் சிறு கூறுகள்

C. பிளேட்லெட்டுகள்

பிளேட்லெட்டுகளின் சிறு கூறுகள்

D. சிவப்பு அணுக்கள்

சிவப்பு அணுக்களின் சிறு கூறுகள்

5. இரத்தத்தின் சிறு கூறுகள் சம்பந்தப்பட்ட சிகிச்சைகள்

இரத்தத்தில் நான்கு முக்கிய பாகங்கள் இருக்கின்றன. அவை: சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள், மற்றும் பிளாஸ்மா. இந்த ஒவ்வொரு முக்கிய பாகத்திலும் நிறைய சின்னச் சின்ன பாகங்கள் இருக்கின்றன. இவற்றைத்தான் சிறு கூறுகள் என்று சொல்கிறோம்.c இந்த சிறு கூறுகளைப் பயன்படுத்தி சில மருந்துகளைத் தயாரிக்கிறார்கள். நோய்களைக் குணப்படுத்தவும் இரத்தக் கசிவை நிறுத்தவும் அந்த மருந்துகள் உதவுகின்றன.

சிறு கூறுகளைப் பொறுத்தவரை, ஒவ்வொருவரும் பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியின் அடிப்படையில் சொந்தமாக முடிவு எடுக்க வேண்டும். சிறு கூறுகள் சம்பந்தப்பட்ட சிகிச்சைமுறைகளை ஏற்றுக்கொள்ள சிலருடைய மனசாட்சி இடம்கொடுக்கலாம். ஆனால், மற்றவர்களுடைய மனசாட்சி அதற்கு இடம்கொடுக்காமல் போகலாம்.

நீங்கள் ஒரு முடிவை எடுக்கும்போது இந்தக் கேள்வியை யோசித்துப் பாருங்கள்:

  • ஒருசில சிறு கூறுகளை நான் ஏன் ஏற்றுக்கொள்வேன் அல்லது ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்பதை டாக்டரிடம் எப்படி விளக்குவேன்?

யாராவது இப்படிக் கேட்கலாம்: “இரத்தம் ஏத்திக்கறதுல என்ன தப்பு?”

  • நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

சுருக்கம்

இரத்தத்தை நாம் புனிதமாக நினைக்க வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார்.

ஞாபகம் வருகிறதா?

  • யெகோவா ஏன் இரத்தத்தைப் புனிதமாக நினைக்கிறார்?

  • இரத்தத்துக்கு விலகியிருக்க வேண்டுமென்றால் இரத்தத்தை ஏற்றிக்கொள்ளவும் கூடாது என்று எப்படிச் சொல்லலாம்?

  • மருத்துவ சிகிச்சைகளுக்காக இரத்தத்தைப் பயன்படுத்தும் விஷயத்தில் நீங்கள் எப்படி நல்ல முடிவுகளை எடுக்கலாம்?

குறிக்கோள்

அலசிப் பாருங்கள்

சிகிச்சைக்காக உங்கள் இரத்தத்தையே பயன்படுத்தலாமா வேண்டாமா என்று முடிவெடுப்பதற்கு முன்பு நீங்கள் எதையெல்லாம் யோசிக்க வேண்டும்?

“வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” (காவற்கோபுரம், அக்டோபர் 15, 2000)

இரத்தத்தின் சிறு கூறுகளை எடுத்துக்கொள்ளலாமா வேண்டாமா என்று முடிவெடுப்பதற்கு முன்பு நீங்கள் எதையெல்லாம் யோசிக்க வேண்டும்?

“வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” (காவற்கோபுரம், ஜூன் 15, 2004)

இரத்தத்தைப் பற்றி யெகோவா சொல்வது நியாயம்தான் என்று ஒரு டாக்டர் எப்படிப் புரிந்துகொண்டார்?

“இரத்தம் பற்றிய கடவுளுடைய நோக்குநிலையை ஏற்றுக்கொண்டேன்” (விழித்தெழு!, ஜனவரி 8, 2004)

மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக் குழுக்களில் இருக்கும் மூப்பர்கள் எப்படி எல்லா யெகோவாவின் சாட்சிகளுக்கும் உதவி செய்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

உடம்பு சரியில்லாதவர்களுக்கு யெகோவா உதவுகிறார் (10:23)

a “நல்ல முடிவுகள் எடுப்பது எப்படி?” என்ற 35-வது பாடத்தைப் பாருங்கள்.

b “இரத்தத்தின் சிறு கூறுகள் சம்பந்தப்பட்ட சிகிச்சைகள்” என்ற 5-வது குறிப்பையும், “இரத்தம் சம்பந்தப்பட்ட சிகிச்சைமுறைகள்” என்ற பின்குறிப்பு 3-ஐயும் பாருங்கள்.

c மருத்துவர்கள் சிலர், இரத்தத்தின் நான்கு முக்கிய பாகங்களைக்கூட சிறு கூறுகள் என்று சொல்கிறார்கள். அதனால், நீங்கள் எதையெல்லாம் ஏற்றிக்கொள்ள மாட்டீர்கள் என்று உங்கள் டாக்டரிடம் தெளிவாகச் சொல்ல வேண்டியிருக்கலாம். அதாவது, முழு இரத்தத்தையோ அதன் நான்கு முக்கிய பாகங்களான சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள், பிளாஸ்மா ஆகியவற்றையோ ஏற்றிக்கொள்ள மாட்டீர்கள் என்று அவருக்குப் புரியவைக்க வேண்டியிருக்கலாம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்