உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w08 4/1 பக். 11
  • உயிர்ப்பிக்க வல்லவர்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உயிர்ப்பிக்க வல்லவர்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
  • இதே தகவல்
  • “அது உண்மையா இருக்க முடியாது!”
    நீங்கள் நேசிக்கிற ஒருவர் இறக்கும்போது...
  • விதவையின் மகனை உயிர்த்தெழுப்புகிறார்
    இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
  • இயேசு ஒரு விதவையின் துயரத்தைப் போக்குகிறார்
    எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர்
  • இயேசு ஒரு விதவையின் துயரத்தைப் போக்குகிறார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1989
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
w08 4/1 பக். 11

கடவுளிடம் நெருங்கி வாருங்கள்

உயிர்ப்பிக்க வல்லவர்

லூக்கா 7:11-15

உங்கள் அன்புக்கும் பாசத்துக்கும் உரிய ஒருவரை பறிகொடுத்திருக்கிறீர்களா? அப்படியானால், நெஞ்சைப் பிளக்கும் வேதனையை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்கள். உங்களுடைய துக்கத்தை நம்முடைய படைப்பாளர் புரிந்துகொள்கிறார். அதுமட்டுமல்ல, மரணத்தின் பாதிப்புகளை அவரால் சரிசெய்யவும் முடியும். தாம் உயிரளிப்பவர் மட்டுமல்ல, உயிர்ப்பிப்பவரும்கூட என்பதை நிரூபிக்க, முற்காலத்தில் நடந்த உயிர்த்தெழுதல்களை அவர் பைபிளில் பதிவு செய்திருக்கிறார். அதில் ஒன்றை இப்பொழுது சிந்திக்கலாம்; அதைச் செய்ய தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு அவர் அதிகாரம் அளித்தார். இந்த அற்புத சம்பவம் லூக்கா 7:11-15 வசனங்களில் காணப்படுகிறது.

அது, பொ.ச. 31-ஆம் வருடம். கலிலேயாவைச் சேர்ந்த நாயீன் ஊருக்கு இயேசு சென்றிருந்தார். (வசனம் 11) அவர் ஊரின் எல்லையை நெருங்கியபோது கிட்டத்தட்ட அந்திப்பொழுதாகிவிட்டது. “அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணும்படி கொண்டுவந்தார்கள்; அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ணாயிருந்தாள்; ஊராரில் வெகு ஜனங்கள் அவளுடனேகூட வந்தார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (வசனம் 12) அந்த விதவைத் தாயின் தாளா துயரத்தை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? தன் கணவரின் மரணத்திற்குப் பிறகு தன்னைப் பாதுகாத்துப் பராமரித்து வந்த தன் ஒரே மகனையும் அவள் பறிகொடுத்திருந்தாள்.

மகனுடைய உடலைச் சுமக்கும் பாடைக்கு அருகே அவள் நடந்து சென்றுகொண்டிருந்திருக்கலாம்; துக்கத்தில் தவிக்கும் அந்தத் தாயை இயேசு கவனித்தார். “கர்த்தர் அவளைப் பார்த்து, அவள் மேல் மனதுருகி: அழாதே என்று” சொன்னதாக பைபிள் குறிப்பிடுகிறது. (வசனம் 13) அந்த விதவையின் துயரநிலை கண்டு இயேசு நெஞ்சுருகினார். ஒருவேளை அவருடைய தாயும் அந்தச் சமயத்தில் விதவையாகியிருந்திருக்கலாம்; சீக்கிரத்தில் தம்மையும் இழந்து அவர் தவிக்கவிருப்பதை இயேசு அப்போது நினைத்துப் பார்த்திருக்கலாம்.

அவர் அந்தக் கூட்டத்தை நெருங்கினார்; ஆனால், அந்த ஊர்வலத்தில் கலந்துகொள்வதற்காக அல்ல. அதிகாரத்தோடு அவர், “பாடையைத் தொட்டார்”; கூட்டத்தார் நின்றார்கள். மரணத்தின்மீது அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்ததால், “வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன்” என்று உத்தரவிட்டார். அப்போது, “மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார்.” (வசனங்கள் 14, 15) அந்த வாலிபன் இறந்தபோது அவனுடைய தாய் அவனை இழந்தாள்; அதனால் இயேசு “அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார்.” அவர்கள் இப்போது ஒன்று சேர்ந்தார்கள். ஆழ்ந்த சோகத்தால் வாடிப்போயிருந்த அந்த விதவை ஆனந்தக் கண்ணீர் வடித்திருப்பாள் என்பதில் சந்தேகமில்லை.

மரணம் பறித்துச் சென்ற அன்பானவரைத் திரும்பச் சந்திக்கும் சந்தோஷத்தை அனுபவிக்க நீங்கள் ஏங்குகிறீர்களா? கடவுள் உங்களை நினைத்து உள்ளம் உருகுகிறார் என்பதில் உங்களுக்குச் சந்தேகமே வேண்டாம். அந்த விதவையின் துயரத்தை தம் இருதயத்தில் இயேசு உணர்ந்தது கடவுளின் இரக்கத்தைப் படம்பிடித்துக் காட்டியது. ஆம், தம் பிதாவின் சுபாவத்தை இயேசு அப்படியே வெளிக்காட்டினார். (யோவான் 14:9) தம்முடைய நினைவில் பத்திரமாக இருக்கும் இறந்தவர்களை உயிர்த்தெழுப்ப கடவுள் விரும்புகிறார், ஏங்குகிறார் என்று பைபிள் நமக்குக் கற்பிக்கிறது. (யோபு 14:14, 15) பரதீஸ் பூமியில் வாழவும் இறந்துபோன நம் அன்பானவர்களை உயிர்த்தெழுதலில் மீண்டும் பார்க்கவும் முடியும் என்ற அற்புத நம்பிக்கையை கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் நமக்கு அளிக்கிறது. (லூக்கா 23:43; யோவான் 5:28, 29) உயிர்ப்பிக்க வல்லவரான யெகோவாவைப் பற்றியும் உயிர்த்தெழுதல் நம்பிக்கையை நீங்கள் எவ்வாறு பெறலாம் என்பதைப் பற்றியும் அதிகம் தெரிந்துகொள்ள ஏன் முயற்சி செய்யக்கூடாது? (w08 3/1)

[பக்கம் 11-ன் படம்]

“மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார்”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்