உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w13 1/1 பக். 3
  • எமது வாசகருக்கு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகருக்கு
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
w13 1/1 பக். 3

எமது வாசகருக்கு

[பக்கம் 3-ன் படம்]

நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் இந்தப் பத்திரிகை ஜூலை 1879-லிருந்து பிரசுரிக்கப்பட்டு வருகிறது. காலங்கள் மாறின, இந்தப் பத்திரிகையும் மாறியது. (மேலே உள்ள படங்களைப் பாருங்கள்.) இப்போதும் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த இதழிலிருந்து காவற்கோபுர பத்திரிகையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், இதோ...

இன்று அநேக நாடுகளில் மக்கள் ஆன்லைனிலேயே நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்கிறார்கள். அது அவர்களுக்கு ரொம்ப வசதியாக இருக்கிறது. இன்டர்நெட்டில் ஒரு பட்டனை தட்டினால் போதும், தகவல்கள் வரிசைகட்டி நிற்கும். நிறைய புத்தகங்கள், பத்திரிகைகள், செய்தித்தாள்கள் என எல்லாம் ஆன்லைனிலேயே கிடைக்கின்றன.

ஆன்லைன் மோகம் இப்போது அதிகரித்திருப்பதால், www.jw.org வெப் சைட்டை இன்னும் சுவாரஸ்யமாக்க, இன்னும் சுலபமாக்க சில மாற்றங்களைச் செய்திருக்கிறோம். இந்த வெப் சைட்டை அலசுபவர்களால் 430-க்கும் அதிகமான மொழிகளிலுள்ள பிரசுரங்களை வாசிக்க முடியும். அச்சடிக்கப்பட்ட பத்திரிகையில் தவறாமல் வெளிவந்த சில கட்டுரைகள் இந்த மாதத்திலிருந்து jw.org வெப் சைட்டில் மட்டுமே கிடைக்கும்.a

இனி சில கட்டுரைகள் ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் என்பதால் இந்த இதழ் தொடங்கி காவற்கோபுர பத்திரிகையின் பொது இதழ் 16 பக்கங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. காவற்கோபுர பத்திரிகை ஏற்கெனவே 204 மொழிகளில் கிடைக்கிறது. இந்த மாற்றத்தால் இன்னும் நிறைய மொழிகளில் மொழிபெயர்க்க வாய்ப்பு இருக்கிறது.

இதனால், உயிர் காக்கும் பைபிள் சத்தியத்தை இன்னும் நிறைய பேருக்கு தெரிவிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். புதுப்புது தகவல்களை, ஆர்வத்தைத் தூண்டும் விஷயங்களை, தொடர்ந்து ஆன்லைனிலும் பத்திரிகையிலும் அள்ளிக்கொடுக்க ஆசைப்படுகிறோம். பைபிளை நம்பும், அதன் ஆழ-அகலத்தை அறிய விரும்பும், வாசகர்களுக்கு இது அளவில்லா நன்மைகளைக் கொடுக்கும் என்று நம்புகிறோம். (w13-E 01/01)

பிரசுரிப்போர்

a ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் கட்டுரைகள்: “இளம் வாசகருக்கு”—இளைஞர்களுக்கு ஆர்வமூட்டும் பைபிள் விஷயங்கள். “பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்”—மூன்று வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளோடு சேர்ந்து பெற்றோர்கள் படிக்கும் தொடர்க் கட்டுரை. தற்போது இவை ஆங்கிலத்தில் கிடைக்கும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்