பழங்கால பைபிள் கையெழுத்துப் பிரதியில் கடவுளுடைய பெயர் (படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது)
பைபிள் என்ன சொல்கிறது?
கடவுளுக்கு ஒரு பெயர் இருக்கிறதா?
மக்கள் என்ன சொல்கிறார்கள்? கடவுளுக்கென்று ஒரு பெயர் கிடையாது. கர்த்தர் அல்லது ஆண்டவர் என்பதுதான் அவருடைய பெயர் என்று சொல்கிறார்கள். வேறு சிலரோ, கடவுளுக்கு நிறைய பெயர் இருக்கிறது என்று சொல்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பைபிள் தரும் பதில்
“யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின் மேலும் உன்னதமானவர்.”—சங்கீதம் 83:17.
பைபிளில் இருந்து இன்னும் என்ன தெரிந்துகொள்ளலாம்?
கடவுளுக்கு நிறைய பட்டப்பெயர்கள் இருந்தாலும், அவர் தனக்கென்று ஒரேவொரு பெயர்தான் வைத்திருக்கிறார்.—யாத்திராகமம் 6:3.
கடவுள் ஒரு புரியாப்புதிர் அல்ல, அவரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறார். —அப்போஸ்தலர் 17:27.
கடவுளுடைய நண்பராவதற்கு, முதலில் அவருடைய பெயரை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். —யாக்கோபு 4:8.
கடவுளுடைய பெயரைச் சொல்வது தவறா?
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
தவறு
தவறில்லை
அவரவர் கருத்து
பைபிள் தரும் பதில்
‘உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக.’ (யாத்திராகமம் 20:7) கடவுளுடைய பெயரை மரியாதை இல்லாத விதத்தில் பயன்படுத்தினால்தான் தவறு.—ஏரேமியா 29:9.
பைபிளில் இருந்து இன்னும் என்ன தெரிந்துகொள்ளலாம்?
இயேசுவுக்குக் கடவுளுடைய பெயர் தெரிந்திருந்தது, அதை அவர் பயன்படுத்தினார்.—யோவான் 17:25, 26.
தன்னுடைய பெயரை நாம் பயன்படுத்த வேண்டுமென்று கடவுள் விரும்புகிறார்.—சங்கீதம் 105:1.
கடவுளுடைய பெயரை மக்கள் மறக்க வேண்டுமென்று எதிரிகள் முயற்சி செய்கிறார்கள்.—ஏரேமியா 23:27. (w16-E No. 3)