கடவுளுக்கு உங்கள்மேல் அக்கறை இருக்கிறது
பைபிளில் நமக்கு தேவையான சிறந்த ஆலோசனைகள் இருக்கின்றன. ஏனென்றால், அது கடவுளிடமிருந்து வந்தது. அது மருத்துவ குறிப்புகள் இருக்கிற ஒரு புத்தகம் இல்லைதான்! இருந்தாலும், அதிலிருக்கிற ஆலோசனைகள் கஷ்டமான சூழ்நிலைகளில் நமக்கு கைகொடுக்கும். உதாரணத்துக்கு, மனச்சோர்வை ஏற்படுத்தும் சூழ்நிலைகள் வரும்போது... நம் எண்ணங்கள் நம்மை போட்டு ஆட்டிப்படைக்கும்போது... மனதை குத்திக் கிழிக்கும் உணர்வுகள் ஏற்படும்போது... உடலளவிலும் மனதளவிலும் ஏதாவது பாதிப்பு ஏற்படும்போது... பைபிள் நமக்கு உதவும்.
நம்மை படைத்த கடவுளான யெகோவாa நமக்குள் இருக்கிற வலியையும் வேதனையையும் புரிந்துகொள்கிறார். வேறு யாரையும்விட அவர் நம்மை நன்றாக புரிந்துகொள்கிறார். என்ன பிரச்சினை வந்தாலும் நமக்கு உதவ தயாராக இருக்கிறார். ஆறுதலான இந்த இரண்டு வசனங்களை பாருங்கள்:
“உள்ளம் உடைந்துபோனவர்களின் பக்கத்திலேயே யெகோவா இருக்கிறார். மனம் நொந்துபோனவர்களை அவர் காப்பாற்றுகிறார்.”—சங்கீதம் 34:18.
“யெகோவாவாகிய நான் உன்னுடைய வலது கையைப் பிடித்திருக்கிறேன். ‘பயப்படாதே, நான் உனக்கு உதவி செய்வேன்’ என்று சொல்கிறேன்.”—ஏசாயா 41:13.
அப்படியென்றால், மனநோயை சமாளிக்க யெகோவா எப்படி நமக்கு உதவுவார்? அவருக்கு நம்மேல் எவ்வளவு அக்கறை இருக்கிறது என்பதை பற்றி வரப்போகிற கட்டுரைகளில் பார்க்கலாம், வாங்க!
a யெகோவா என்பது கடவுளுடைய பெயர்.—சங்கீதம் 83:18.