பகுதி 1—முன்னுரை
வானத்திலும் பூமியிலும் யெகோவா படைத்திருக்கும் அருமையான விஷயங்களைப் பற்றிய விவரிப்பை பைபிளின் முதல் புத்தகத்தில் நம்மால் பார்க்க முடியும். யெகோவாவின் அற்புத படைப்புகள் எத்தனை எத்தனை! விதவிதமான இந்தப் படைப்புகளைப் பற்றி உங்களுடைய பிள்ளைக்குச் சொல்லிக்கொடுங்கள். மிருகங்களைவிட மனிதர்களை யெகோவா எவ்வளவு விசேஷமாகப் படைத்திருக்கிறார் என்பதைப் புரிய வையுங்கள். மனிதர்களால் மட்டும்தான் பேசவும், யோசித்து முடிவு எடுக்கவும், புதிது புதிதாக கண்டுபிடிக்கவும், பாட்டு பாடவும், ஜெபம் செய்யவும் முடியும் என்று சொல்லுங்கள். யெகோவாவுக்கு எந்தளவு சக்தியும் ஞானமும் இருக்கிறது என்பதைப் புரிய வையுங்கள். மிக முக்கியமாக, தன்னுடைய படைப்புகள்மீதும் நம் ஒவ்வொருவர்மீதும் அவர் அன்பு வைத்திருக்கிறார் என்பதை உங்கள் பிள்ளை நன்றாகப் புரிந்துகொள்ள உதவுங்கள்.