பகுதி 3—முன்னுரை
பெரிய வெள்ளத்துக்குப் பிறகு, யெகோவாவை வணங்கிய ஒருசிலருடைய பெயர்கள் பைபிளில் இருக்கின்றன. அவர்களில் ஒருவர்தான் ஆபிரகாம். அவர் கடவுளுடைய நண்பராக இருந்தார். அவரை ஏன் கடவுளுடைய நண்பர் என்று பைபிள் சொல்கிறது? உங்கள் பிள்ளைமேல் யெகோவா ரொம்ப அக்கறையாக இருக்கிறார், அவனுக்கு உதவி செய்ய ஆசைப்படுகிறார் என்பதையெல்லாம் அவன் புரிந்துகொள்ள உதவி செய்யுங்கள். யெகோவாவுக்கு உண்மையாக இருந்த ஆபிரகாம், லோத்து, யாக்கோபு போன்றவர்கள் யெகோவாவிடம் உதவி கேட்டார்கள். அதேபோல, நாமும் யெகோவாவிடம் தாராளமாக உதவி கேட்கலாம். யெகோவா தான் சொன்னதையெல்லாம் கண்டிப்பாகச் செய்வார் என்று நாம் உறுதியாக நம்பலாம்.