பாடல் 1
யெகோவாவின் குணங்கள்
1. யெ-கோ-வா நீ-ரே உ-யர்ந்-த-வ-ரே!
உ-யிர் கொ-டுத்-த எங்-கள் உன்-ன-த-ரே!
கை-கோர்த்-து வான் சு-டர்-கள் சொல்-லு-தே,
உம் வல்-ல-மைக்-கு சாட்-சி-தா-னே!
2. உங்-கள் ஆட்-சி-யே நீ-தி-யா-ன-தே!
சட்-டங்-கள் எல்-லாம் நி-கர் இல்-லா-த-தே!
பொன் போன்-று உம் ஞா-னம்-தான் மின்-னு-தே!
உம் வார்த்-தை-யி-லே காண்-கின்-றோ-மே!
3. உம் அன்-பை சொல்-ல வார்த்-தை இல்-லை-யே!
அன்-பின் ஊற்-று-தான் உங்-கள் சந்-நி-தி-யே!
உம் பெ-ய-ரை, நற்-கு-ணங்-க-ளை-யே
பு-கழ்ந்-தால் நெஞ்-சில் ஆ-னந்-த-மே!
(பாருங்கள்: சங். 36:9; 145:6-13; பிர. 3:14; யாக். 1:17.)