பாடல் 30
என் தந்தை, என் தேவன், என் தோழன்!
1. வாழ்க்கையே போர்க்களம்தான்,
போராட தெம்பின்றி சாய்கிறேன்.
ஆனால், நெஞ்சில் நம்பிக்கை,
“வீண் இல்லை என் வாழ்க்கை!”
(பல்லவி)
தேவன் அநீதி செய்யார்.
எந்தன் அன்பைத்தான் மறந்திடார்.
என்றும் துணை இருப்பார்,
தனியாக நான் இல்லையே!
பொன்னாய் பார்த்துக்கொள்வாரே,
எந்நாளும் என்னை தாங்கிக்கொள்வார்.
என் யெகோவா அன்பு தந்தை,
தேவன், தோழன்!
2. வாலிபம் போய்விட்டதே,
வேதனை காலம்தான் வந்ததே.
ஆனால், கண்ணால் பார்க்கின்றேன்,
ஆனந்த காலமே!
(பல்லவி)
தேவன் அநீதி செய்யார்.
எந்தன் அன்பைத்தான் மறந்திடார்.
என்றும் துணை இருப்பார்,
தனியாக நான் இல்லையே!
பொன்னாய் பார்த்துக்கொள்வாரே,
எந்நாளும் என்னை தாங்கிக்கொள்வார்.
என் யெகோவா அன்பு தந்தை,
தேவன், தோழன்!
(பாருங்கள்: சங். 71:17, 18.)