பாடல் 96
தேவன் தந்த வேதம்
1. உள்ளத்தைக் காட்டும் இது ஓர் கண்ணாடி.
உள்ளுக்குள் பாயும் ஒரு பட்டயம்.
வாழ்க்கையின் பாதை காட்டும் நல்ல தீபம்,
தேவன் தந்தாரே அது நம் வேதம்.
உன்னத பைபிள் தேவன் தந்ததாலே,
சிந்தையை சீராய் அது செதுக்கும்.
தன் சக்தியாலே தேவன் தூண்டத் தூண்ட
மனிதர் இங்கே எழுதினாரே.
2. வானத்தை யார்தான் படைத்தது என்று
வேதத்தில்தானே பதில் உள்ளது.
ஆதியில் ஆதாம் செய்த தவறாலே,
பூஞ்சோலை போன கதை சொல்லுதே.
பேராசையாலே ஒரு தேவதூதன்,
தேவன் பேராட்சி அதை எதிர்த்தான்.
கல்நெஞ்சக்காரன் கல்லறை நிறைத்தான்.
இந்நிலை மாறும், உயிர் மலரும்.
3. ராஜாவாய் ஏசு ஆட்சி செய்யும் நேரம்,
முள்காடு கூட பூத்துக் குலுங்கும்.
நம்பிக்கை ஊட்டும் இந்த நல்ல செய்தி,
தேவன் தன் வார்த்தையிலே பதித்தார்.
வேதத்தின் மூலம் தந்தை பேசும் நேரம்,
நெஞ்சத்தில் பூப்போல் மழை பெய்திடும்.
உள்ளுக்குள்ளே ஓர் நிம்மதியின் வாசம்,
வேதம் நம் ஸ்வாசம், நாளும் நேசிப்போம்.
(பாருங்கள்: 2 தீ. 3:16; 2 பே. 1:21.)