பாடல் 102
‘பலவீனருக்கு உதவி செய்யுங்கள்’
1. ப-ல-வீ-னர் நாம் தா-னே,
சோர்ந்-து-போ-கின்-றோம்.
நம் யெ-கோ-வா அன்-பு-டன்
தாங்-கிக்-கொள்-கின்-றார்!
தாய் போன்-று பா-சத்-தை
நம்-மேல் பொ-ழிந்-தா-ரே!
நா-மும் ப-ல-வீ-ன-ரை
தாங்-கிக்-கொள்-வோ-மே.
2. சோர்ந்-து-போ-ன உள்-ளங்-கள்
கண்-டு தேற்-று-வோம்.
ஆ-று-தல்-கள் சொல்-லி-யே
அச்-சம் போக்-கு-வோம்.
நம் தே-வன் கூட்-டுக்-குள்
வந்-து-சேர்ந்-தோர்-க-ளின்
நெஞ்-சின் கா-யம் ஆற்-று-வோம்,
கண்-ணீர் து-டைப்-போம்!
3. ப-ல-வீ-னர் என்-று நாம்
தள்-ள வேண்-டா-மே.
வி-சு-வா-சம் காத்-தி-ட
தோள்-கொ-டுப்-போ-மே.
ஆம், நம் உற்-சா-க-மே
தே-வை எப்-போ-து-மே!
ஆ-த-ர-வு காட்-டு-வோம்,
அன்-பைப் பொ-ழி-வோம்!
(பாருங்கள்: ஏசா. 35:3, 4; 2 கொ. 11:29; கலா. 6:2.)