பாடல் 113
சமாதானம்—கடவுள் தரும் பரிசு
1. கோ-டி நன்-றி சொல்-வோ-மே,
நம் தே-வன் முன்-னே.
போ-ரே இல்-லா கா-லத்-தை,
தந்-தே தீர்ப்-பா-ரே.
சா-வை வென்-று ஏ-சு-தான்,
மன்-னர் ஆ-னா-ரே.
வெல்-வார் நீ-தி போ-ரை-யே,
பூ-மி பூக்-கு-மே!
2. ரத்-தம் சிந்-தும் ஆ-யு-தம்,
எங்-கும் தே-டா-மல்,
அன்-பாய் பண்-பாய் பே-சி-யே,
கோ-பம் தீர்ப்-போ-மே.
மன்-னிப்-பை நாம் காட்-டி-யே,
கை-கள் கோர்ப்-போ-மே.
ஏ-சு போல் நாம் வாழ்-வோ-மே,
உண்-மை தோ-ழ-ரே!
3. தே-வன் தந்-த ஆ-சி-யே,
நன்-றி சொல்-வோ-மே.
வே-தம் காட்-டும் பா-தை-யில்,
என்-றும் செல்-வோ-மே.
வாக்-கு மா-றா தே-வ-னே,
தீ-மை வெல்-வா-ரே.
அந்-நாள் நாம் எல்-லோ-ரு-மே,
பூஞ்-சோ-லை செல்-வோம்!
(பாருங்கள்: சங். 46:9; ஏசா. 2:4; யாக். 3:17, 18.)