உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • th படிப்பு 4 பக். 7
  • வசனங்களைச் சரியாக அறிமுகப்படுத்துவது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வசனங்களைச் சரியாக அறிமுகப்படுத்துவது
  • வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • இதே தகவல்
  • வசனங்களைத் தெளிவாகப் பொருத்திக் காட்டுவது
    வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • வசனங்களைத் திறம்பட அறிமுகப்படுத்துதல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • இதயத்தைத் தொடுவது
    வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • பொருத்தமான முன்னுரை
    வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
மேலும் பார்க்க
வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
th படிப்பு 4 பக். 7

படிப்பு 4

வசனங்களைச் சரியாக அறிமுகப்படுத்துவது

வசனம்

மத்தேயு 22:41-45

சுருக்கம்: ஒரு வசனத்தை வாசிப்பதற்கு முன்பு, கேட்பவர்களின் மனதைத் தயார்படுத்துங்கள்.

எப்படிச் செய்வது?

  • அந்த வசனத்தை ஏன் வாசிக்கிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். அந்த வசனத்தில் என்ன முக்கியக் குறிப்பைக் காட்ட விரும்புகிறீர்கள் என்பதைக் கேட்பவர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் அதை அறிமுகப்படுத்துங்கள்.

    நடைமுறை ஆலோசனை

    வசனத்தின் சூழமைவைக் கவனியுங்கள். வசனத்திலுள்ள வார்த்தைகளை யார் சொன்னது, அந்த பைபிள் புத்தகத்தை யார் எழுதியது போன்ற விவரங்களைச் சரியாகச் சொல்லுங்கள்.

  • பைபிளைத்தான் ஆதாரமாக வைத்துப் பேசுகிறீர்கள் என்பதைக் காட்டுங்கள். கடவுள் நம்பிக்கையுள்ள ஆட்களிடம் பேசும்போது, பைபிளை கடவுளுடைய வார்த்தை என்று சொல்லுங்கள். இப்படி, கடவுள் சொல்லியிருக்கும் ஞானமான விஷயங்கள்தான் பைபிளில் இருக்கின்றன என்பதைக் காட்டுங்கள்.

  • வசனத்தின் மேல் ஆர்வத்தைத் தூண்டுங்கள். ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு, அதற்கு அந்த வசனம் பதில் தரும் என்று சொல்லுங்கள். அல்லது, ஒரு பிரச்சினையைச் சொல்லிவிட்டு, அதைத் தீர்ப்பதற்கு அந்த வசனம் உதவும் என்று சொல்லுங்கள். அல்லது, ஒரு நியமத்தைச் சொல்லிவிட்டு, அதைப் புரிந்துகொள்ள அந்த பைபிள் பதிவு உதவும் என்று சொல்லுங்கள்.

    நடைமுறை ஆலோசனை

    கேட்பவர்களுக்கு நீங்கள் சொல்லப்போகிற விஷயத்தைப் பற்றி அல்லது வசனத்தைப் பற்றி ஏற்கெனவே என்ன தெரியும் என்று யோசித்துப் பாருங்கள். எல்லாருக்கும் நன்றாகத் தெரிந்த வசனத்தைக்கூட சுவாரஸ்யமான விதத்தில் அறிமுகப்படுத்துங்கள். அந்த வசனத்தைப் புதிய கோணத்தில் பார்க்க அவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்