உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • th படிப்பு 8 பக். 11
  • உதாரணங்களைப் பயன்படுத்திக் கற்பிப்பது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உதாரணங்களைப் பயன்படுத்திக் கற்பிப்பது
  • வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • இதே தகவல்
  • பொருத்தமான உதாரணங்கள்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
  • “உவமைகளைப் பயன்படுத்தாமல் . . . அவர் பேசியதே இல்லை”
    என்னைப் பின்பற்றி வா
  • “உவமைகளினாலேயன்றி, அவர்களோடே பேசவில்லை”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • உட்பார்வையோடும் உந்துவிக்கும் தன்மையோடும் போதியுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
மேலும் பார்க்க
வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
th படிப்பு 8 பக். 11

படிப்பு 8

உதாரணங்களைப் பயன்படுத்திக் கற்பிப்பது

வசனம்

மத்தேயு 13:34, 35

சுருக்கம்: திறமையாகக் கற்றுக்கொடுப்பதற்கு எளிமையான உதாரணங்களைப் பயன்படுத்துங்கள்; அவை கேட்பவர்களின் மனதைத் தொட வேண்டும், முக்கியமான குறிப்புகளைப் புரியவைக்க வேண்டும்.

எப்படிச் செய்வது?

  • எளிமையான உதாரணங்களைத் தேர்ந்தெடுங்கள். இயேசுவைப் போலவே, முக்கியமான விஷயங்களை விளக்குவதற்குச் சாதாரணமான விஷயங்களைப் பயன்படுத்துங்கள், கடினமான விஷயங்களை விளக்குவதற்கு எளிமையான விஷயங்களைப் பயன்படுத்துங்கள். தேவையில்லாத விவரங்களைச் சொல்லி உதாரணத்தைச் சிக்கலாக்காதீர்கள். உதாரணத்திலுள்ள விவரங்கள், நீங்கள் கற்றுக்கொடுக்கும் பாடத்துக்குப் பொருத்தமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அப்போதுதான், பொருந்தாத விவரங்களை யோசித்து யாரும் குழம்பிப்போக மாட்டார்கள்.

    நடைமுறை ஆலோசனை

    உன்னிப்பாகக் கவனியுங்கள். உங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பாருங்கள், நம்முடைய அமைப்பின் பிரசுரங்களைப் படியுங்கள், மற்றவர்கள் திறமையாகக் கற்பிக்கும்போது கவனித்துக் கேளுங்கள். இந்த விதங்களில் நீங்கள் தெரிந்துகொள்ளும் உதாரணங்களைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அதோடு, அவற்றைப் பத்திரமாகச் சேர்த்து வையுங்கள். அப்போதுதான், அவற்றைப் பயன்படுத்தி உங்களால் திறமையாகக் கற்பிக்க முடியும்.

  • கேட்பவர்களை மனதில் வையுங்கள். கேட்பவர்கள் வழக்கமாகச் செய்கிற அல்லது ஆர்வம் காட்டுகிற விஷயங்களோடு சம்பந்தப்பட்ட உதாரணங்களைத் தேர்ந்தெடுங்கள். நீங்கள் பயன்படுத்தும் உதாரணங்கள் அவர்களைத் தர்மசங்கடப்படுத்தாமல் அல்லது புண்படுத்தாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

  • முக்கியக் குறிப்பைக் கற்றுக்கொடுங்கள். சின்னச் சின்ன விவரங்களுக்கெல்லாம் உதாரணங்களைச் சொல்லாதீர்கள்; முக்கியக் குறிப்புகளுக்கு மட்டும் சொல்லுங்கள். கேட்பவர்கள் உங்களுடைய உதாரணத்தை மட்டுமல்லாமல், அதிலிருந்து கற்றுக்கொண்ட பாடத்தையும் ஞாபகம் வைக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்