உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • th படிப்பு 12 பக். 15
  • கனிவும் அனுதாபமும்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கனிவும் அனுதாபமும்
  • வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • இதே தகவல்
  • ஆர்வத்துடிப்பு
    வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • இதயத்தைத் தொடுவது
    வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • கனிவும் உணர்ச்சியும்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • இயல்பாகப் பேசுவது
    வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
மேலும் பார்க்க
வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
th படிப்பு 12 பக். 15

படிப்பு 12

கனிவும் அனுதாபமும்

வசனம்

1 தெசலோனிக்கேயர் 2:7, 8

சுருக்கம்: கேட்பவர்கள்மேல் உங்களுக்கு உண்மையான அன்பும் அக்கறையும் இருப்பதைக் காட்டுங்கள்.

எப்படிச் செய்வது?

  • கேட்பவர்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள். உங்கள் இதயத்தைத் தயார்படுத்துங்கள். அதற்கு, கேட்பவர்கள் என்ன பிரச்சினைகளில் இருக்கிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள். அவர்களுடைய உணர்ச்சிகளைக் கற்பனை செய்து பாருங்கள்.

  • வார்த்தைகளைக் கவனமாகத் தேர்ந்தெடுங்கள். கேட்பவர்களுக்குப் புத்துணர்ச்சியும் ஆறுதலும் ஊக்கமும் தருவதற்கு முயற்சி செய்யுங்கள். உங்கள் வார்த்தைகள் அவர்களுடைய மனதைப் புண்படுத்திவிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். யெகோவாவின் சாட்சிகளாக இல்லாதவர்களைப் பற்றியோ, அவர்கள் மனதார நம்பும் விஷயங்களைப் பற்றியோ மதிப்புக்குறைவாகப் பேசாதீர்கள்.

  • அக்கறை இருப்பதைக் காட்டுங்கள். கனிவான குரலில் பேசுவதன் மூலமும், பொருத்தமான சைகைகளைப் பயன்படுத்துவதன் மூலமும் கேட்பவர்கள்மேல் உங்களுக்கு உண்மையான அக்கறை இருப்பதைக் காட்டுங்கள். உங்கள் முகபாவனைகளிலும் அந்த அக்கறையைக் காட்டுங்கள்; அடிக்கடி புன்னகை செய்யுங்கள்.

    நடைமுறை ஆலோசனை

    உணர்ச்சிகளைச் செயற்கையாகவோ மிகைப்படுத்தியோ வெளிக்காட்டாதீர்கள். ஒரு பகுதியை வாசிக்கும்போது, அதிலுள்ள உணர்ச்சிகளை வெளிக்காட்டுங்கள்; ஆனால், தேவையில்லாமல் உங்கள்மேல் கவனத்தைத் திருப்பாதீர்கள். கேட்பவர்களின் மனதைத் தொடும்படி மென்மையான குரலில் பேசுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்