உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • th படிப்பு 20 பக். 23
  • பொருத்தமான முடிவுரை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருத்தமான முடிவுரை
  • வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • இதே தகவல்
  • திறம்பட்ட முடிவுரை
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • வசனங்களைத் தெளிவாகப் பொருத்திக் காட்டுவது
    வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • இதயத்தைத் தொடுவது
    வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • நடைமுறைப் பயனைத் தெளிவாகச் சொல்வது
    வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
மேலும் பார்க்க
வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
th படிப்பு 20 பக். 23

படிப்பு 20

பொருத்தமான முடிவுரை

வசனம்

பிரசங்கி 12:13, 14

சுருக்கம்: நீங்கள் பேசி முடிக்கும்போது, கற்றுக்கொண்ட விஷயங்களை ஏற்றுக்கொண்டு அவற்றைக் கடைப்பிடிக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்ளுங்கள்.

எப்படிச் செய்வது?

  • முடிவுரையை நீங்கள் பேசும் முக்கிய விஷயத்தோடு சம்பந்தப்படுத்திக் காட்டுங்கள். முக்கியக் குறிப்புகளையும் மையப்பொருளையும் திரும்பச் சொல்லுங்கள் அல்லது வேறு வார்த்தைகளில் சொல்லுங்கள்.

  • கேட்பவர்களின் மனதைத் தூண்டுங்கள். கேட்பவர்கள் என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்; அதைச் செய்வதற்கு என்ன நல்ல காரணங்கள் இருக்கின்றன என்றும் சொல்லுங்கள். நம்பிக்கையோடும் உறுதியோடும் பேசுங்கள்.

  • முடிவுரையை எளிமையாகவும் சுருக்கமாகவும் வைத்துக்கொள்ளுங்கள். முடிவுரையில் முக்கியக் குறிப்புகளைப் புதிதாகச் சேர்க்காதீர்கள். கடைசியாக ஒரு தடவை, கேட்ட விஷயங்களைக் கடைப்பிடிக்கும்படி ஒருசில வார்த்தைகளில் அன்போடு கேட்டுக்கொள்ளுங்கள்.

    நடைமுறை ஆலோசனை

    முடிவுரையில் அவசர அவசரமாகப் பேசாதீர்கள். உங்கள் குரலின் சத்தத்தைக் குறைத்துவிடாதீர்கள். கடைசி சில வரிகளை அழுத்தம்திருத்தமாகச் சொல்லி முடியுங்கள்.

ஊழியத்தில்

பேசி முடிக்கும்போது, கேட்பவர் ஞாபகம் வைக்க வேண்டிய முக்கியக் குறிப்பைத் திரும்பச் சொல்லுங்கள். உரையாடலை அவர் சட்டென்று நிறுத்திவிட்டாலும், நம்பிக்கையான ஒரு விஷயத்தைச் சொல்லி முடியுங்கள். அவர் கோபமாக நடந்துகொண்டாலும், நீங்கள் சாந்தமாகப் பேசுங்கள். அப்போதுதான், அடுத்த தடவை அவர் காதுகொடுத்துக் கேட்பார்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்