உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • lff பாடம் 36
  • எல்லாவற்றிலும் நேர்மை தேவை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எல்லாவற்றிலும் நேர்மை தேவை
  • இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஆராய்ந்து பார்க்கலாம்!
  • சுருக்கம்
  • அலசிப் பாருங்கள்
  • எல்லாவற்றிலும் நேர்மையாக நடந்துகொள்ளுங்கள்
    கடவுளுடைய அன்பில் நிலைத்திருங்கள்
  • எல்லாவற்றிலும் நேர்மையாக நடந்துகொள்ளுங்கள்
    ‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’
  • நேர்மையால் நன்மையே
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • நேர்மையாயிருத்தல் என்பதன் அர்த்தம் என்ன?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1989
மேலும் பார்க்க
இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
lff பாடம் 36
பாடம் 36. ஒருவர் ஒரு ஆவணத்தில் கையெழுத்து போடுகிறார்.

பாடம் 36

எல்லாவற்றிலும் நேர்மை தேவை

அச்சடிக்கப்பட்ட பிரதி
அச்சடிக்கப்பட்ட பிரதி
அச்சடிக்கப்பட்ட பிரதி

நம் நண்பர்கள் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்றுதான் நாம் எல்லாருமே எதிர்பார்ப்போம். யெகோவாவும் தன் நண்பர்களிடம் அதைத்தான் எதிர்பார்க்கிறார். ஆனால், நேர்மை இல்லாதவர்கள் நிறைய பேர் இருக்கிற இந்த உலகத்தில் நேர்மையாக நடப்பது கஷ்டம்தான். இருந்தாலும், எல்லாவற்றிலும் நேர்மையாக நடப்பதால் என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாம் ஏன் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும்?

நாம் நேர்மையாக நடந்துகொள்ளும்போது யெகோவாமேல் அன்பும் மரியாதையும் வைத்திருப்பதைக் காட்டுகிறோம். நாம் என்ன யோசித்தாலும் சரி, என்ன செய்தாலும் சரி, எல்லாமே யெகோவாவுக்குத் தெரியும். (எபிரெயர் 4:13) அப்படியென்றால், நாம் நேர்மையாக நடப்பதையும் அவர் பார்க்கிறார், சந்தோஷப்படுகிறார். “ஏமாற்றுக்காரனை யெகோவா அருவருக்கிறார். ஆனால், நேர்மையானவனுக்கு நெருங்கிய நண்பராக இருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது.—நீதிமொழிகள் 3:32.

2. நாம் எப்படியெல்லாம் நேர்மையாக நடக்கலாம்?

நாம் “ஒருவரோடு ஒருவர் உண்மை பேச வேண்டும்” என்று யெகோவா விரும்புகிறார். (சகரியா 8:16, 17) அப்படியென்றால், நாம் எல்லாரிடமும் உண்மை பேச வேண்டும். குடும்பத்தில் இருக்கிறவர்கள், நம்மோடு வேலை செய்கிறவர்கள், சபையில் இருக்கிறவர்கள், அரசாங்க அதிகாரிகள் என யாரிடமும் நாம் பொய் சொல்லக் கூடாது, எதையாவது சொல்லி ஏமாற்றவும் கூடாது. நேர்மையானவர்கள் திருட மாட்டார்கள், மோசடி செய்யவும் மாட்டார்கள். (நீதிமொழிகள் 24:28-ஐயும் எபேசியர் 4:28-ஐயும் வாசியுங்கள்.) அரசாங்கத்துக்குக் கட்ட வேண்டிய எல்லா வரிகளையும் சரியாகக் கட்டிவிடுவார்கள். (ரோமர் 13:5-7) இதுபோல நாம் “எல்லாவற்றிலும் நேர்மையாக நடக்க” வேண்டும்.—எபிரெயர் 13:18.

3. நேர்மையாக நடப்பதால் என்ன பலன்கள் கிடைக்கும்?

நேர்மையானவர்கள் என்று நாம் பெயர் எடுத்தால் மற்றவர்கள் நம்மை நம்புவார்கள். சபையில் இருக்கிற ஒவ்வொருவரும் நேர்மையாக நடக்கும்போது எல்லாரும் ஒரே குடும்பத்தில் இருப்பதுபோல் பாதுகாப்பாக உணர முடியும். நம் மனசாட்சியும் சுத்தமாக இருக்கும். அதுமட்டுமல்ல, “நம்முடைய மீட்பரான கடவுளுடைய போதனைகளை . . . அலங்கரிக்க முடியும்.” நம்மைப் பார்த்து மற்றவர்களும் யெகோவாவை வணங்க ஆசைப்படுவார்கள்.—தீத்து 2:10.

ஆராய்ந்து பார்க்கலாம்!

நேர்மையாக நடப்பது எப்படி யெகோவாவுக்கும் உங்களுக்கும் சந்தோஷம் தரும்? என்னென்ன விதங்களில் நீங்கள் நேர்மையாக இருக்கலாம்? பார்க்கலாம்.

4. நேர்மையாக நடப்பது யெகோவாவை சந்தோஷப்படுத்தும்

சங்கீதம் 44:21-ஐயும் மல்கியா 3:16-ஐயும் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • உண்மையை மறைக்கலாம் என்று நினைப்பது ஏன் முட்டாள்தனம்?

  • நமக்குக் கஷ்டமாக இருந்தாலும் உண்மையைச் சொல்லும்போது யெகோவாவுக்கு எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

ஒரு சிறுமி தன் அப்பாவிடம் பேசுகிறாள், அவர் மண்டிபோட்டு அவளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். டேபிளில் இருக்கும் ஜூஸ் டம்ளர் கவிழ்ந்திருக்கிறது, ஜூஸ் கீழே வழிந்துகொண்டிருக்கிறது.

பிள்ளைகள் உண்மை பேசும்போது பெற்றோர் சந்தோஷப்படுகிறார்கள். அதேபோல், நாம் உண்மை பேசும்போது யெகோவா சந்தோஷப்படுகிறார்

5. எப்போதும் நேர்மையாக இருங்கள்

எல்லா சமயத்திலும் நேர்மையாக நடப்பது நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவராது என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். ஆனால், நாம் ஏன் எப்போதுமே நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்று பாருங்கள். வீடியோவைப் பாருங்கள்.

வீடியோ: நமக்கு சந்தோஷம் தருபவை—சுத்தமான மனசாட்சி (2:32)

‘நமக்கு சந்தோஷம் தருபவை​​—⁠சுத்தமான மனசாட்சி’ என்ற வீடியோவிலிருந்து ஒரு காட்சி. ஒரு பெரிய தப்பு செய்துவிட்டதாக பென் தன் முதலாளியிடம் சொன்ன பிறகு, அவர்கள் கைகுலுக்குகிறார்கள்.

எபிரெயர் 13:18-ஐப் படித்துவிட்டு, நாம் எப்படியெல்லாம் நேர்மையாக நடக்கலாம் என்று கலந்துபேசுங்கள் . . .

  • குடும்பத்தில்.

  • வேலை செய்யும் இடத்தில் அல்லது பள்ளியில்.

  • வேறு சூழ்நிலைகளில்.

6. நேர்மை நன்மை தரும்

நேர்மையாக இருப்பதால் சில பிரச்சினைகள் வருவதுபோல் தெரியலாம். ஆனால் உண்மையில், நேர்மைதான் கடைசிவரைக்கும் கைகொடுக்கும்! சங்கீதம் 34:12-16-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • நேர்மையாக நடக்கும்போது உங்கள் வாழ்க்கை எப்படி நல்லபடியாக மாறும்?

A. ஒரு கணவனும் மனைவியும் காபி குடித்துக்கொண்டே பேசுகிறார்கள். B. கடையில் ஒரு மெக்கானிக்கை அவருடைய முதலாளி பாராட்டுகிறார். C. காரில் உட்கார்ந்திருக்கும் ஒருவர் தன்னுடைய அடையாள அட்டையை போலீஸ் அதிகாரியிடம் காட்டுகிறார்.
  1. கணவன் மனைவிக்கு இடையில் நேர்மை இருந்தால் நெருக்கமான பந்தமும் இருக்கும்

  2. நேர்மையாக வேலை செய்கிறவர்கள் முதலாளிகளின் நம்பிக்கையை சம்பாதிப்பார்கள்

  3. நேர்மையான மக்கள் அரசாங்க அதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுப்பார்கள்

சிலர் இப்படிச் சொல்கிறார்கள்: “சின்ன சின்ன பொய் சொல்றதுல தப்பே இல்ல.”

  • எல்லா பொய்களையுமே யெகோவா வெறுக்கிறார் என்று நீங்கள் நம்புகிறீர்களா? ஏன்?

சுருக்கம்

யெகோவா தன்னுடைய நண்பர்கள் எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் எல்லாவற்றிலும் நேர்மையாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்.

ஞாபகம் வருகிறதா?

  • நாம் எப்படியெல்லாம் நேர்மையாக நடக்கலாம்?

  • உண்மையை மறைக்கலாம் என்று நினைப்பது ஏன் முட்டாள்தனம்?

  • நீங்கள் ஏன் எல்லா சமயத்திலும் நேர்மையாக நடக்க நினைக்கிறீர்கள்?

குறிக்கோள்

அலசிப் பாருங்கள்

நேர்மையாக நடந்துகொள்ள பெற்றோர் எப்படிப் பிள்ளைகளுக்குச் சொல்லித்தரலாம்?

உண்மையை பேசுங்க (1:44)

சொன்ன சொல்லைக் காப்பாற்றுவது ஏன் நல்லது?

வாக்கைக் காப்பாற்றுங்கள், ஆசீர்வாதங்களைப் பெறுங்கள் (9:09)

வரிப்பணத்தை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்தினாலும் நாம் ஏன் வரி கட்டாமல் இருக்கக் கூடாது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

“நீங்கள் வரி செலுத்த வேண்டுமா?” (ஆன்லைன் கட்டுரை)

ஏமாற்றுப் பேர்வழியாக இருந்த ஒருவர் எப்படி நல்லவராக மாறி, நேர்மையாக வேலை செய்ய ஆரம்பித்தார் என்று படித்துப் பாருங்கள்.

“யெகோவா இரக்கமானவர், மன்னிக்கிறவர்” (காவற்கோபுரம், ஜூலை 1, 2015)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்