உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • lmd பாடம் 8
  • பொறுமை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொறுமை
  • அன்பு காட்டுங்கள்—சீஷராக்குங்கள்
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • இயேசு என்ன செய்தார்?
  • இயேசுவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
  • இயேசு மாதிரி நடந்துகொள்ளுங்கள்
  • எப்போதும் பொறுமையாக இருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
  • ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... வீடியோக்களை பயன்படுத்தி சொல்லிக்கொடுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இயேசுவுடைய பலியிலிருந்து நன்மை அடையுங்கள்
    வேறுசில தலைப்புகள்
  • அக்கறை
    அன்பு காட்டுங்கள்—சீஷராக்குங்கள்
மேலும் பார்க்க
அன்பு காட்டுங்கள்—சீஷராக்குங்கள்
lmd பாடம் 8

மறுபடியும் சந்திப்பது

இயேசு தன்னுடைய தம்பி யாக்கோபைப் போய்ப் பார்க்கிறார். மரவேலை செய்துகொண்டிருக்கும் யாக்கோபு, இயேசுவைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார்.

யோவா. 7:3-5; 1 கொ. 15:3, 4, 7

பாடம் 8

பொறுமை

நியமம்: ‘அன்பு பொறுமை உள்ளது.’ —1 கொ. 13:4.

இயேசு என்ன செய்தார்?

இயேசு தன்னுடைய தம்பி யாக்கோபைப் போய்ப் பார்க்கிறார். மரவேலை செய்துகொண்டிருக்கும் யாக்கோபு, இயேசுவைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார்.

வீடியோ: இயேசு தன் தம்பிக்கு பொறுமையோடு உதவுகிறார்

1. வீடியோவைப் பாருங்கள், அல்லது யோவான் 7:3-5 மற்றும் 1 கொரிந்தியர் 15:3, 4, 7-ஐ வாசியுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளை யோசித்துப் பாருங்கள்:

  1. அ. இயேசுவின் சகோதரர்கள் அவர் சொன்ன செய்தியை ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்டார்களா?

  2. ஆ. தன்னுடைய தம்பி யாக்கோபுக்கு இயேசு தொடர்ந்து உதவி செய்தார் என்று எதை வைத்துச் சொல்லலாம்?

இயேசுவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?

2. நல்ல செய்தியை ஏற்றுக்கொள்ள ஒருசிலருக்கு மற்றவர்களைவிட அதிக காலம் எடுக்கலாம். அதனால், நாம் பொறுமையோடு இருக்க வேண்டும்.

இயேசு மாதிரி நடந்துகொள்ளுங்கள்

3. வேறு விதத்தில் முயற்சி செய்து பாருங்கள். ஒருவர் உடனடியாக பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால், அவரைக் கட்டாயப்படுத்தாதீர்கள். பொருத்தமான சமயத்தில், சில வீடியோக்களையும் கட்டுரைகளையும் காட்டி, பைபிள் படிப்பு எப்படி இருக்கும், அவருக்கு அது எப்படிப் பிரயோஜனமாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள உதவி செய்யுங்கள்.

4. ஒப்பிடாதீர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். உங்கள் குடும்பத்தில் இருப்பவரோ, உங்களுடைய மறுசந்திப்போ பைபிள் படிப்பை ஏற்றுக்கொள்வதற்கு அல்லது ஒரு பைபிள் போதனையை நம்புவதற்குத் தயங்கினால், அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். குறிப்பிட்ட ஒரு மத நம்பிக்கை அவருடைய நெஞ்சோடு கலந்திருக்கிறதா? அவருடைய சொந்தக்காரர்களோ அக்கம்பக்கத்தில் இருக்கிறவர்களோ அவருக்கு ஏதாவது அழுத்தம் கொடுக்கிறார்களா? நீங்கள் சொன்னதைப் பற்றி யோசித்துப் பார்ப்பதற்கும் பைபிள் சொல்கிற விஷயங்களின் மதிப்பைப் புரிந்துகொள்வதற்கும் அவருக்கு நேரம் கொடுங்கள்.

5. ஆர்வம் காட்டியவரைப் பற்றி ஜெபம் செய்யுங்கள். நம்பிக்கையோடு இருப்பதற்கும் சாதுரியமாக நடந்துகொள்வதற்கும் யெகோவாவிடம் உதவி கேளுங்கள். ஒருவருக்கு உண்மையிலேயே ஆர்வம் இருக்கிறதா என்றும், அவரைப் போய் சந்திப்பதை எப்போது நிறுத்துவது என்றும் புரிந்துகொள்ள ஞானத்தைக் கேட்டு யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள்.—1 கொ. 9:26.

இதையும் பாருங்கள்

மாற். 4:26-28; 1 கொ. 3:5-9; 2 பே. 3:9

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்