உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ijwbq கட்டுரை 159
  • மிருகங்கள் சொர்க்கத்துக்குப் போகுமா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மிருகங்கள் சொர்க்கத்துக்குப் போகுமா?
  • பைபிள் தரும் பதில்கள்
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பைபிள் தரும் பதில்
  • மிருகங்களுக்கு ஆத்துமா இருக்கிறதா?
  • ஆத்துமா சாகுமா?
  • மிருகங்கள் பாவம் செய்யுமா?
  • மிருகங்களைக் கொடுமைப்படுத்துவது சரியா?
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • மிருகங்களை வதைப்பது தவறா?
    விழித்தெழு!—1998
  • இறைச்சி சாப்பிடுவது தவறா?
    விழித்தெழு!—1997
  • செல்லப்பிராணிகள் சமநிலையான நோக்கு
    விழித்தெழு!—2004
மேலும் பார்க்க
பைபிள் தரும் பதில்கள்
ijwbq கட்டுரை 159
ஒரு நாய்

மிருகங்கள் சொர்க்கத்துக்குப் போகுமா?

பைபிள் தரும் பதில்

பூமியிலிருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள ஆட்கள்தான் பரலோகத்துக்குப் போவார்கள் என்று பைபிள் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 14:1, 3) அவர்கள் இயேசுவோடு சேர்ந்து ராஜாக்களாக ஆட்சி செய்வார்கள், குருமார்களாக சேவை செய்வார்கள். (லூக்கா 22:28-30; வெளிப்படுத்துதல் 5:9, 10) ஏராளமான மக்கள் பூஞ்சோலை பூமியில் வாழ்வதற்கு உயிரோடு எழுப்பப்படுவார்கள்.—சங்கீதம் 37:11, 29.

செல்லப் பிராணிகளுக்கென்று ஒரு சொர்க்கம் இருப்பதாக பைபிளில் எங்கேயும் சொல்லப்படவில்லை. அதற்கு நல்ல காரணம் இருக்கிறது. ‘பரலோக அழைப்பில் பங்குகொள்கிறவர்கள்’ ஒருசில படிகளை எடுக்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 3:1) அந்தப் படிகள் என்னவென்றால், பைபிளைப் பற்றி திருத்தமாக தெரிந்துகொள்வது... விசுவாசத்தை வளர்த்துக்கொள்வது... கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது... ஆகியவைதான். இதையெல்லாம் மிருகங்களால் செய்ய முடியாது. (மத்தேயு 19:17; யோவான் 3:16; 17:3) மனிதர்களை மட்டும்தான் என்றென்றும் வாழ வேண்டும் என்ற நோக்கத்தோடு கடவுள் படைத்தார், மிருகங்களை அல்ல.—ஆதியாகமம் 2:16, 17; 3:22, 23.

மனிதர்கள் இறந்த பின்பு, உயிர்த்தெழுந்தால்தான் பரலோகத்துக்குப் போக முடியும். (1 கொரிந்தியர் 15:42) நிறைய உயிர்த்தெழுதல் பதிவுகளைப் பற்றி பைபிள் சொல்கிறது. (1 ராஜாக்கள் 17:17-24; 2 ராஜாக்கள் 4:32-37; 13:20, 21; லூக்கா 7:11-15; 8:41, 42, 49-56; யோவான் 11:38-44; அப்போஸ்தலர் 9:36-42; 20:7-12) ஆனால், மனிதர்கள்தான் உயிர்த்தெழுப்பப்பட்டார்கள், மிருகங்கள் கிடையாது.

  • மிருகங்களுக்கு ஆத்துமா இருக்கிறதா?

  • ஆத்துமா சாகுமா?

  • மிருகங்கள் பாவம் செய்யுமா?

  • மிருகங்களைக் கொடுமைப்படுத்துவது சரியா?

மிருகங்களுக்கு ஆத்துமா இருக்கிறதா?

இல்லை. மனிதர்களை மட்டுமல்ல, மிருகங்களையும் ஆத்துமா என்று பைபிள் சொல்கிறது. முதல் மனிதனான ஆதாம் படைக்கப்பட்டபோது, அவனுக்கு ஒரு ஆத்துமா கொடுக்கப்பட்டதாக பைபிள் சொல்வதில்லை, அதற்கு பதிலாக அவன், “ஜீவாத்துமாவானான்” என்று அது சொல்கிறது. (ஆதியாகமம் 2:7, தமிழ் O.V. பைபிள்) ‘பூமியிலிருக்கும் மண்ணும்’ ‘ஜீவசுவாசமும்’ சேர்ந்ததுதான் ஒரு ஆத்துமா.

ஆத்துமா சாகுமா?

ஆம், ஆத்துமா சாகும் என்று பைபிள் சொல்கிறது. (எசேக்கியேல் 18:20) சாகும்போது மனிதர்களும் சரி, மிருகங்களும் சரி மண்ணுக்கே திரும்புகிறார்கள். (பிரசங்கி 3:19, 20) அதாவது, எங்கேயும் இல்லாமல் போகிறார்கள்.

மிருகங்கள் பாவம் செய்யுமா?

இல்லை. பாவம் என்றால் கடவுளுடைய சட்டங்களுக்கு எதிராக எதையாவது யோசிப்பது அல்லது செய்வது. ஒழுக்க சம்பந்தமாக தீர்மானங்களை எடுக்க முடிந்த ஒருவரால்தான் பாவமே செய்ய முடியும். ஆனால், அப்படி முடிவெடுக்கிற திறமை மிருகங்களுக்கு கிடையாது. அவற்றுக்கு இருக்கும் குறைந்த ஆயுள் காலத்தில், அவை வெறுமனே இயல்புணர்ச்சியால் செயல்படுகின்றன. (2 பேதுரு 2:12) அவற்றின் ஆயுசு முடியும்போது, பாவம் செய்யாவிட்டாலும் அவை சாகின்றன.

மிருகங்களைக் கொடுமைப்படுத்துவது சரியா?

இல்லை. கடவுள், மிருகங்கள்மேல் மனிதர்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறாரே தவிர, அவற்றை கொடுமைப்படுத்துவதற்கு உரிமை கொடுக்கவில்லை. (ஆதியாகமம் 1:28; சங்கீதம் 8:6-8) சின்னச் சின்ன பறவைகள் உட்பட ஒவ்வொரு மிருகங்கள் மேலும் கடவுள் அக்கறை வைத்திருக்கிறார். (யோனா 4:11; மத்தேயு 10:29) மிருகங்களை நன்றாக கவனித்துக்கொள்ளச் சொல்லி கடவுள் தன்னை வணங்குகிறவர்களுக்கு கட்டளை கொடுத்திருக்கிறார்.—யாத்திராகமம் 23:12; உபாகமம் 25:4; நீதிமொழிகள் 12:10.

மிருகங்களைப் பற்றிய பைபிள் வசனங்கள்

ஆதியாகமம் 1:28: “கடவுள் அவர்களிடம் [முதல் பெற்றோர்களிடம்], “நீங்கள் பிள்ளைகளைப் பெற்று, ஏராளமாகப் பெருகி, பூமியை நிரப்புங்கள்; அதைப் பண்படுத்துங்கள். கடலில் வாழ்கிற மீன்களும், வானத்தில் பறக்கிற பறவைகளும், நிலத்தில் வாழ்கிற எல்லா உயிரினங்களும் உங்கள் அதிகாரத்தின்கீழ் இருக்கட்டும்” என்று சொல்லி ஆசீர்வதித்தார்.”

அர்த்தம்: கடவுள், மிருகங்கள்மேல் மனிதர்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார்.

பிரசங்கி 3:19, 20: “மனுஷர்களுக்கும் முடிவு வருகிறது, விலங்குகளுக்கும் முடிவு வருகிறது. எல்லா உயிர்களின் முடிவும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. விலங்குகள் சாவது போலத்தான் மனுஷர்களும் சாகிறார்கள். எல்லா உயிர்களுக்கும் உயிர்சக்தி ஒன்றுதான். அதனால், விலங்குகளைவிட மனுஷன் உயர்ந்தவன் கிடையாது, எல்லாமே வீண்தான். எல்லா உயிர்களும் ஒரே இடத்துக்குத்தான் போகின்றன. எல்லாம் மண்ணிலிருந்து வந்தன, எல்லாம் மண்ணுக்கே திரும்புகின்றன.”

அர்த்தம்: சாகும்போது மனிதர்களும் சரி, மிருகங்களும் சரி மண்ணுக்கே திரும்புகிறார்கள்.

நீதிமொழிகள் 12:10: “நீதிமான் தன் வீட்டு விலங்குகளை நன்றாகக் கவனித்துக்கொள்கிறான்.”

அர்த்தம்: நல்லவர்கள் தங்களுடைய செல்ல பிராணிகளை மட்டுமல்ல, மற்ற மிருகங்களையும் நன்றாக கவனித்துக்கொள்கிறார்கள்.

மத்தேயு 10:29: “குறைந்த மதிப்புள்ள ஒரு காசுக்கு இரண்டு சிட்டுக்குருவிகளை விற்கிறார்கள்தானே? ஆனால், அவற்றில் ஒன்றுகூட உங்கள் பரலோகத் தகப்பனுக்குத் தெரியாமல் தரையில் விழுவதில்லை.”

அர்த்தம்: சின்னச் சின்ன பறவைகள் உட்பட ஒவ்வொரு மிருகங்களையும் கடவுள் கவனிக்கிறார், அக்கறை வைத்திருக்கிறார்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்