உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb22 செப்டம்பர் பக். 13
  • இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தின் சிறப்பம்சங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தின் சிறப்பம்சங்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • இதே தகவல்
  • ஆராய்ச்சி செய்ய டிப்ஸ்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
mwb22 செப்டம்பர் பக். 13

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தின் சிறப்பம்சங்கள்

இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தில் இருக்கிற வீடியோக்களும் யோசிக்க வைக்கிற கேள்விகளும் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? “சிலர் இப்படிச் சொல்கிறார்கள்,” “குறிக்கோள்,” “அலசிப் பாருங்கள்” என்ற பகுதிகளைப் பயன்படுத்தி படிப்பு நடத்துவது உங்களுக்கு எப்படி இருக்கிறது? சீஷராக்கும் வேலையை இன்னும் நன்றாகச் செய்வதற்கு இந்தப் புத்தகத்தில் வேறென்ன சிறப்பம்சங்கள் இருக்கின்றன?—மத் 28:19, 20.

“JW லைப்ரரி” அப்ளிகேஷனில் “இன்றும் என்றும் சந்தோஷம்!” புத்தகம். “பகுதி 1-க்கான வீடியோக்களும் கட்டுரைகளும்” என்ற பட்டனைக் காட்டும் உள்படம்.

வீடியோக்களும் கட்டுரைகளும்: அச்சிடப்பட்ட புத்தகத்திலிருந்து நீங்கள் பைபிள் படிப்பை நடத்திக்கொண்டிருந்தால், அதில் இருக்கிற எல்லா வீடியோக்களையும் கட்டுரைகளையும் எப்படி ஒரே இடத்தில் கண்டுபிடிக்கலாம்? JW லைப்ரரியில் நீங்கள் படிக்கிற பாடம் அந்தப் புத்தகத்தின் நான்கு முக்கியப் பகுதிகளில் எந்தப் பகுதியில் வருகிறதோ அந்தப் பகுதியை எடுத்துக்கொள்ளுங்கள். அந்தப் பகுதிக்குக் கீழே இருக்கிற வீடியோக்களும் கட்டுரைகளும் என்ற தலைப்பை க்ளிக் செய்தால், அந்தப் பகுதியில் வருகிற எல்லா வீடியோக்களையும் கட்டுரைகளையும் நீங்கள் பார்க்கலாம். (படம் 1.)

“புத்தக வடிவம்” (Printed Edition) செட்டிங்: நீங்கள் யாருக்காவது ஃபோனிலோ டேப்லெட்டிலோ பைபிள் படிப்பு நடத்துகிறீர்கள் என்றால், சிலசமயம் “புத்தக வடிவம்” செட்டிங்கைப் பயன்படுத்துவது உங்களுக்குப் பிரயோஜனமாக இருக்கலாம். நீங்கள் ஒரு பாடத்தைப் படித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், அந்தப் பாடத்துக்கு மேல் வலது பக்கத்தில் இருக்கிற மூன்று புள்ளிகளை க்ளிக் செய்யுங்கள். அதில் வருகிற “புத்தக வடிவம்” என்ற செட்டிங்கை க்ளிக் செய்யுங்கள். இந்த வடிவத்தில் ஒரு பாடத்தைப் பார்க்கும்போது நீங்கள் படிக்கிற விஷயங்கள் பாடத்தின் முக்கியப் பொருளோடு எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை உங்களால் தெளிவாகப் பார்க்க முடியும். திரும்பவும் பழைய செட்டிங்க்குப் போவதற்கு அதே மூன்று புள்ளிகளை க்ளிக் செய்து “எழுத்து மட்டும்” (Digital Edition) என்ற செட்டிங்கை க்ளிக் செய்யுங்கள்.

“JW லைப்ரரி” அப்ளிகேஷனில் “இன்றும் என்றும் சந்தோஷம்!” புத்தகம். “நான் தயாரா?” என்ற பெட்டி மற்றும் “பின்குறிப்புகள்” என்ற பகுதிக்கான பட்டன்களைக் காட்டும் உள்படங்கள்.

“நான் தயாரா?”: புத்தகத்தின் கடைசியில் இருக்கிற இந்தப் பெட்டிகள், சபையோடு சேர்ந்து ஊழியம் செய்வதற்கும் ஞானஸ்நானம் எடுப்பதற்கும் என்ன அடிப்படைத் தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள உதவும். (படம் 2.)

பின்குறிப்புகள்: முக்கியமான சில விஷயங்களைப் பற்றிய விளக்கம், பின்குறிப்புகளில் இருக்கிறது. ஃபோனில் அல்லது டேப்லெட்டில் படிப்பதாக இருந்தால் இந்தப் பின்குறிப்புகளுக்குக் கீழே ஒரு லிங்க் இருக்கும். அதை க்ளிக் செய்தால், நீங்கள் எந்தப் பாடத்தைப் படித்துக்கொண்டிருக்கிறீர்களோ அந்தப் பாடம் வந்துவிடும். (படம் 2.)

நன்றாக முன்னேறி வருகிற பைபிள் மாணவர்கள் இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தைப் படித்து முடிப்பதற்கு முன்பே ஞானஸ்நானம் எடுத்தாலும் அவர்களோடு சேர்ந்து இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்துவிடுங்கள். அவர்கள் ஞானஸ்நானம் எடுத்த பிறகும்கூட அவர்களுக்குப் படிப்பு எடுக்கிற நேரத்தையும் மறுசந்திப்புகளையும் படிப்பையும் உங்கள் ஊழிய அறிக்கையில் சேர்த்துக்கொள்ளலாம். அந்தப் படிப்பில் ஒரு பிரஸ்தாபி உங்களோடு கலந்துகொண்டால் அந்த மணிநேரத்தை அவரும் ஊழிய அறிக்கையில் சேர்த்துக்கொள்ளலாம்.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்