பைபிளில் இருக்கும் புதையல்கள்
யாரும் எதிர்பார்க்காததை யெகோவா நடத்திக் காட்டினார்
கடுமையான பஞ்சம் இருந்த சமயத்திலும்கூட, அடுத்த நாள் நிறைய உணவு கிடைக்கும் என்று யெகோவா சொன்னார் (2ரா 7:1; it-1-E பக். 716-717)
யெகோவா சொன்னதுபோல் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று ஒரு இஸ்ரவேல் அதிகாரி ஏளனமாகச் சொன்னார் (2ரா 7:2)
யாரும் எதிர்பார்க்காததை யெகோவா நடத்திக் காட்டினார் (2ரா 7:6, 7, 16-18)
யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் திடீரென்று இந்த உலகத்துக்கு அழிவு வரும் என்று யெகோவா சொல்லியிருக்கிறார். (1தெ 5:2, 3) யெகோவாவின் வார்த்தையில் நாம் நம்பிக்கை வைப்பது ஏன் முக்கியம்?