பைபிளில் இருக்கும் புதையல்கள்
தைரியத்தையும் மன உறுதியையும் பக்திவைராக்கியத்தையும் காட்டினார்
பொல்லாத ராஜா ஆகாபுடைய வீட்டாரைக் கொன்றுபோடும்படி யெகூவுக்கு யெகோவா கட்டளை கொடுத்தார் (2ரா 9:6, 7; w11 11/15 பக். 3 பாரா 2)
யோராம் ராஜாவையும் (ஆகாபின் மகன்), யேசபேல் ராணியையும் (ஆகாபின் மனைவி) யெகூ உடனடியாகக் கொன்றுபோட்டார் (2ரா 9:22-24, 30-33; w11 11/15 பக். 4 பாரா. 2-3; “‘ஆகாபின் வம்சமே அடியோடு அழிந்துபோகும்’—2ரா 9:8” என்ற அட்டவணையைப் பாருங்கள்)
யெகூ தைரியத்தோடும் மன உறுதியோடும் பக்திவைராக்கியத்தோடும் தன் பொறுப்பைச் செய்து முடித்தார் (2ரா 10:17; w11 11/15 பக். 5 பாரா. 4-5)
உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘மத்தேயு 28:19, 20-ல சொல்லியிருக்குற பொறுப்ப நான் நிறைவேத்துறப்போ எப்படி யெகூ மாதிரியே நடந்துக்கலாம்?’