கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
தள்ளிப்போடுவதைத் தவிர்க்க உதவி
சிலர் தாங்கள் உடனடியாகச் செய்ய வேண்டிய அல்லது செய்ய முடிந்த வேலைகளைக்கூட தள்ளிப்போடுவார்கள். ஆனால் யெகூ அப்படிச் செய்யவில்லை. ஆகாபின் வீட்டாரைக் கொன்றுபோடும்படி யெகோவா சொன்ன உடனேயே யெகூ அதைச் செய்து முடித்தார். (2ரா 9:6, 7, 16) சிலர் இப்படியெல்லாம் சொல்லலாம்: “ஒண்ணு ரெண்டு வருஷத்துல நான் ஞானஸ்நானம் எடுத்திடுவேன்.” “சீக்கிரத்துல நான் பைபிள தினமும் வாசிக்க ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.” “எனக்கு ஒரு நல்ல வேலை கிடச்சவுடனே நான் பயனியர் செய்ய ஆரம்பிச்சிடுவேன்.” வணக்கம் சம்பந்தமான விஷயங்களில் எதையும் தள்ளிப்போடாமல் இருப்பதற்கு பைபிள் நமக்கு உதவும்.
தள்ளிப்போடுவதைத் தவிர்ப்பதற்கு இந்த வசனங்கள் நமக்கு எப்படி உதவும்?
பிர 5:4
பிர 11:4
1கொ 7:29-31
யாக் 4:13, 14