பைபிளில் இருக்கும் புதையல்கள்
சாலொமோன் ராஜா முட்டாள்தனமான முடிவை எடுக்கிறார்
[2 நாளாகமம் புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]
சாலொமோன் ராஜா எகிப்து தேசத்திலிருந்து குதிரைகளையும் ரதங்களையும் வாங்கிக் குவித்தார் (உபா 17:15, 16; 2நா 1:14, 17)
சாலொமோனுடைய படையில் புதிதாக சேர்க்கப்பட்ட குதிரைகளையும் ரதங்களையும் பராமரிப்பதற்கு நிறைய ஆட்கள் தேவைப்பட்டார்கள், நகரங்களும் தேவைப்பட்டன (2நா 1:14; it-1-E பக். 174 பாரா 5; பக். 427)
சாலொமோனின் ஆட்சியின் ஆரம்பத்தில் மக்கள் செல்வச் செழிப்பாக வாழ்ந்தது என்னவோ உண்மைதான்! ஆனால், காலங்கள் போகப்போக, அவர் மக்களை பயங்கரமாக வேலை வாங்கினார். பிறகு, ரெகொபெயாம் தன்னுடைய அப்பாவைவிட அதிகமான சுமையை மக்கள்மீது சுமத்தியதால் மக்கள் அவருடைய ஆட்சிக்கு எதிராக கலகம் செய்தார்கள். (2நா 10:3, 4, 14, 16) நாம் எடுக்கும் முடிவுகளின் பின்விளைவுகளை நாம் சந்தித்தே ஆக வேண்டும்.—கலா 6:7.