உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb23 செப்டம்பர் பக். 16
  • JW.ORG முதல் பக்கத்தை ஊழியத்தில் பயன்படுத்துங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • JW.ORG முதல் பக்கத்தை ஊழியத்தில் பயன்படுத்துங்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • இதே தகவல்
  • வெப்சைட் டிப்ஸ்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
  • படிக்க டிப்ஸ்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
  • தினசரி வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள்—JW.ORG-ல்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
mwb23 செப்டம்பர் பக். 16
வித்தியாசமான மொழிகளில் jw.org-ன் முதல் பக்கமும் அதில் சிறப்பித்து காட்டப்பட்டிருக்கும் கட்டுரைகளும்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

JW.ORG முதல் பக்கத்தை ஊழியத்தில் பயன்படுத்துங்கள்

நம் வெப்சைட்டின் முதல் பக்கத்தில் இருக்கிற வீடியோக்களும் கட்டுரைகளும் நல்ல மக்களுடைய மனதைத் தொடும் விதத்தில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. (அப் 13:48) அது, பெரும்பாலும் செய்திகளில் வருகிற விஷயங்களையும் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்படுகிற விஷயங்களையும் சிறப்பித்து காட்டுகிறது.

நம்முடைய வெப்சைட்டின் முதல் பக்கத்தை நீங்கள் எப்படி ஊழியத்தில் பயன்படுத்தலாம்?

  • வெப்சைட்டை அடிக்கடி பாருங்கள். சிறப்பம்சங்கள் பகுதியில் என்னென்ன வந்திருக்கின்றன என்று பாருங்கள். ஆர்வம் காட்டும் நபரிடம் அதை எப்படி பயன்படுத்தலாம் என்று யோசியுங்கள். (முதல் பக்கத்தில் சமீபத்தில் சிறப்பித்துக் காட்டப்பட்ட கட்டுரைகளையும் வீடியோக்களையும் தெரிந்துகொள்ள, “இன்னும் பார்க்க” என்ற லிங்க்கை கிலிக் செய்யுங்கள்.) வெப்சைட்டில் வரும் விஷயங்களை உடனுக்குடனே தெரிந்துகொண்டால் ஊழியத்தை உற்சாகம் குறையாமல் சுவாரஸ்யமாக செய்ய முடியும்.

  • முதல் பக்கத்தில் இருக்கிற கட்டுரைகளையும் வீடியோக்களையும் பயன்படுத்தி பேச்சை ஆரம்பியுங்கள். நம் ஊழியப் பகுதியில் இருக்கிற மக்கள் எதைப் பற்றியெல்லாம் யோசிக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள இது உதவும்.

  • முதல் பக்கத்தைக் காட்டுங்கள். குறிப்பிட்ட சில தலைப்புகளைக் காட்டுங்கள். வெப்சைட்டை எப்படி பயன்படுத்துவது என்று சொல்லுங்கள்.

  • லிங்க் அனுப்புங்கள். ஒருவேளை நம்மிடம் நேரில் பேச சிலர் தயங்கலாம், ஆனால் வெப்சைட்டைப் பார்க்க விரும்பலாம். அதனால், ஆர்வம் காட்டுகிற மக்களிடம் முதல் பக்கத்தின் லிங்க்கையோ அதில் சிறப்பித்து காட்டப்பட்டிருக்கிற ஒரு கட்டுரை அல்லது வீடியோவின் லிங்க்கையோ அனுப்ப தயங்காதீர்கள்.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்