உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb23 செப்டம்பர் பக். 11
  • மனம் நொந்துபோனவர்களை யெகோவா காப்பாற்றுகிறார்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மனம் நொந்துபோனவர்களை யெகோவா காப்பாற்றுகிறார்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • இதே தகவல்
  • முடிவுகள் எடுக்கும்போது யெகோவாவை நம்பியிருப்பதை காட்டுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • ‘உள்ளம் உடைந்தவர்களை யெகோவா குணமாக்குகிறார்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
  • “கடவுளிடம் நெருங்கிப் போவது” நமக்கு நல்லது!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • இருண்ட காலங்களில் யெகோவா வழிகாட்டுவார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
mwb23 செப்டம்பர் பக். 11

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

மனம் நொந்துபோனவர்களை யெகோவா காப்பாற்றுகிறார்

நாம் எல்லாருமே சில சமயம் சோகமாக இருக்கிறோம். அதற்காக, யெகோவாவோடு நமக்கு ஒரு நல்ல பந்தம் இல்லை என்று அர்த்தம் கிடையாது. சொல்லப்போனால், யெகோவாவும் சோகமாக இருந்த சமயங்கள் உண்டு. (ஆதி 6:5, 6) ஆனால், நாம் அடிக்கடி சோகமானால் அல்லது சோகக் கடலில் மூழ்கிப்போனால் என்ன செய்வது?

உதவிக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். நம் உணர்வுகளை யெகோவா பெரிதாக பார்க்கிறார்; மனதளவில் நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். நாம் எப்போது சந்தோஷமாக இருக்கிறோம், எப்போது சோகமாக இருக்கிறோம் என்பது அவருக்கு தெரியும். நாம் ஏன் அப்படி உணர்கிறோம் என்பதையும் அவர் புரிந்துகொள்கிறார். (சங் 7:9ஆ) முக்கியமாக, நாம் சோகமாகவோ மனச்சோர்வால் கஷ்டப்படும்போதோ அவரால் நமக்கு உதவ முடியும்.—சங் 34:18.

மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள். தேவையில்லாத எண்ணங்களால் நம் மனதை குழப்பிக்கொண்டால், நாம் சந்தோஷத்தை இழந்துவிடலாம். யெகோவாவோடு நமக்கு இருக்கும் நட்பையும் அது பாதிக்கலாம். அதனால் நம் இதயத்தை பாதுகாக்க வேண்டும், அதாவது நம் யோசனைகளை கட்டுப்படுத்த வேண்டும்.—நீதி 4:23.

நம் சகோதரர்கள் எப்படி சமாதானத்தை அனுபவிக்கிறார்கள்—மனச்சோர்வால் தவிக்கும்போது என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • மனச்சோர்வை சமாளிக்க நிக்கி என்ன நடைமுறையான விஷயங்களை செய்தார்?

  • தனக்கு மருத்துவ உதவி தேவை என்று நிக்கி ஏன் நினைத்தார்?—மத் 9:12

  • உதவிக்காக யெகோவாவை நம்பியிருந்ததை நிக்கி எப்படியெல்லாம் காட்டினார்?

“மனமே மனமே! நீ நலமா?” என்ற தலைப்பில் இருக்கும் “காவற்கோபுரம்” எண் 1 2023 பத்திரிகை.

உங்களுக்கு தெரிந்த யாருக்காவது காவற்கோபுரம் எண் 1 2023 பொது இதழ் பத்திரிகை பிரயோஜனமாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?

மனதளவில் ஆரோக்கியமாக இருக்க என்ன சில நடைமுறையான விஷயங்களை நாம் செய்யலாம்?

(நீங்கள் எதில் முன்னேற வேண்டும் என்பதை குறித்துக்கொள்ளுங்கள்.)

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்