கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“உள்ளதை வைத்துத் திருப்தியோடு இருங்கள்”
நம்மிடம் அவ்வளவாக பணம்காசு இல்லாவிட்டால், அதைச் சம்பாதிப்பதற்காக, கடவுளோடு உள்ள பந்தத்தைப் பாதிக்கிற ஒரு செயலை செய்ய நாம் தூண்டப்படலாம். உதாரணமாக, நிறைய பணம் சம்பாதிக்க நமக்கு நல்ல வாய்ப்புக் கிடைக்கலாம், அதனால் கடவுளுக்குச் சேவை செய்யவே நமக்கு நேரம் இல்லாமல் போகலாம். எபிரெயர் 13:5-ஐ ஆழமாக யோசித்துப் பார்ப்பது நமக்கு உதவும்.
“பண ஆசையில்லாமல் வாழுங்கள்”
பணத்துக்கு நீங்கள் ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கிறீர்களா என்பதைப் பற்றி ஜெபம் செய்துவிட்டு நன்றாக யோசித்துப் பாருங்கள். இந்த விஷயத்தில் நீங்கள் உங்களுடைய பிள்ளைகளுக்கு எப்படிப்பட்ட முன்மாதிரி வைக்கிறீர்கள் என்பதை யோசித்துப் பாருங்கள்.—g 10/15 பக். 3.
“உள்ளதை வைத்துத் திருப்தியோடு இருங்கள்”
உங்களுக்கு நிஜமாகவே என்ன தேவை என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். அதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா என்று யோசித்துப் பாருங்கள்.—w16.07 பக். 7 பாரா. 1-2.
“நான் ஒருபோதும் உன்னைவிட்டு விலக மாட்டேன், ஒருபோதும் உன்னைக் கைவிடவும் மாட்டேன்”
கடவுளுடைய ராஜ்யத்துக்கு நீங்கள் முதலிடம் கொடுக்கும்போது யெகோவா உங்களுடைய தேவைகளைக் கவனித்துக்கொள்வார் என்று நம்புங்கள்.—w14 4/15 பக். 21 பாரா 17.
நம் சகோதரர்கள் எப்படி சமாதானத்தை அனுபவிக்கிறார்கள், பணப் பிரச்சினைகள் மத்தியிலும் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
மிக்கெல் நொவ்வாவின் அனுபவத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?