உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb24 மே பக். 6-7
  • மே 27–ஜூன் 2

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மே 27–ஜூன் 2
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2024
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2024
mwb24 மே பக். 6-7

மே 27–ஜூன் 2

சங்கீதம் 42-44

பாட்டு 86; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. யெகோவா கற்றுத்தரும் விஷயங்களிலிருந்து நன்மையடையுங்கள்

(10 நிமி.)

மற்றவர்களோடு சேர்ந்து யெகோவாவை வணங்குவதற்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள். முடிந்தளவு நேரில் அதை செய்ய முயற்சி செய்யுங்கள் (சங் 42:4, 5; w06 6/1 பக். 9 பாரா 4)

கடவுளுடைய வார்த்தையை படிப்பதற்கு முன்பு ஜெபம் செய்யுங்கள் (சங் 42:8; w12 1/15 பக். 15 பாரா 2)

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் பைபிள் உங்களை வழிநடத்த அனுமதியுங்கள் (சங் 43:3)

சகோதரிகள் மாநாட்டை உன்னிப்பாக கவனிக்கிறார்கள், குறிப்புகள் எடுக்கிறார்கள்.

யெகோவா சொல்லிக்கொடுக்கிற விஷயங்கள் சோதனைகளை சமாளிக்க நமக்கு உதவும். என்றென்றும் யெகோவாவுக்கு சேவை செய்வதாக நாம் கொடுத்த வாக்கை காப்பாற்றவும் நமக்கு உதவும்.—1பே 5:10; w16.09 பக். 5 பாரா. 11-12.

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 44:19—“நரிகள் வாழும் இடம்” என்று சொல்லியிருப்பதன் அர்த்தம் என்ன? (it-1-E பக். 1242)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) சங் 44:1-26 (th படிப்பு 11)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச்சை ஆரம்பிப்பது

(4 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். பைபிள் படிப்பைப் பற்றிச் சொல்லுங்கள். (lmd பாடம் 5 குறிப்பு 5)

5. மறுபடியும் சந்திப்பது

(5 நிமி.) வீட்டில் சந்திப்பது. பொதுப் பேச்சைக் கேட்க அந்த நபரை அழையுங்கள். ராஜ்ய மன்றத்தில் கூட்டங்கள் எப்படி நடக்கும்? என்ற வீடியோவைப் பயன்படுத்துங்கள். (lmd பாடம் 7 குறிப்பு 5)

6. பேச்சு

(3 நிமி.) lmd இணைப்பு A குறிப்பு 4—பொருள்: எல்லாருக்கும் முழு ஆரோக்கியம் இருக்கும். (th படிப்பு 2)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 21

7. படிப்பு மற்றும் வேலையில் ஞானமான தீர்மானங்களை எடுங்கள்

(15 நிமி.) கலந்துபேசுங்கள்.

படத்தொகுப்பு: ஒரு இளம் சகோதரர் பைபிள் படிக்கிறார், ஸ்கூல் படிப்பை முடித்த பிறகு என்ன செய்ய போகிறார் என்பதை யோசித்துப் பார்க்கிறார். 1. பள்ளி ஆசிரியரிடம் பேசுகிறார். 2. ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளியில் கலந்துகொள்கிறார். 3. வேறொரு நாட்டுக்குப் போய் பிரசங்கிக்கிறார்.

இளம் பிள்ளைகளே, ஸ்கூல் படிப்பை முடித்த பிறகு என்ன செய்ய போகிறீர்கள் என்று முடிவெடுத்துவிட்டீர்களா? பயனியர் சேவையை செய்ய உதவுகிற ஒரு வேலையைப் பற்றி நீங்கள் யோசித்து வைத்திருப்பீர்கள். அல்லது ஒரு வேலையைக் கண்டுபிடிக்கவோ அதற்கு தேவையான திறமைகளை வளர்த்துக்கொள்ளவோ உதவும் ஒரு படிப்பை தேர்ந்தெடுத்து படிக்க நீங்கள் யோசித்து வைத்திருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையையே மாற்ற போகிற சமயம் இதுதான். இருந்தாலும், எதைத் தேர்ந்தெடுப்பது என தீர்மானிக்க முடியாமல் நீங்கள் குழம்பிப் போயிருக்கலாம். அல்லது ‘மற்றவர்களை சந்தோஷப்படுத்துகிற மாதிரி ஒரு முடிவை எடுக்க வேண்டுமே’ என்ற கட்டாயம் உங்களுக்கு இருக்கலாம். ஞானமான முடிவெடுக்க எது உங்களுக்கு உதவி செய்யும்?

மத்தேயு 6:32, 33-ஐ வாசியுங்கள். பிறகு, இந்த கேள்விகளைக் கேளுங்கள்:

  • வேலை, படிப்பு சம்பந்தமாக முக்கியமான தீர்மானங்களை எடுப்பதற்கு முன்பு கடவுளுடைய சேவையில் நல்ல குறிக்கோள்களை வைத்திருப்பது ஏன் நல்லது?

  • மத்தேயு 6:32, 33 சொல்கிறபடி செய்ய பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் எப்படி உதவலாம்?—சங் 78:4-7

பணக்காரராக ஆக வேண்டும், பேர் புகழ் கிடைக்க வேண்டும் என்ற ஆசையில் தப்பான முடிவு எடுத்துவிடாதபடி ஜாக்கிரதையாக இருங்கள். (1யோ 2:15, 17) நிறைய பணம் பொருள் வைத்திருப்பவர்களுக்கு கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை ஏற்றுக்கொள்வது கஷ்டமாக இருக்கும் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். (லூ 18:24-27) பணத்துக்குப் பின் போகும் ஒருவருக்கு யெகோவாவை சந்தோஷப்படுத்துவதும், அவர்மீது நம்பிக்கை வைப்பதும் ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருக்கும்.—மத் 6:24; மாற் 8:36.

ஒழிந்துபோகிறவற்றை நம்பாதீர்கள்!—பணமும் பொருளும் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இப்படிக் கேளுங்கள்:

  • ஞானமான தீர்மானங்களை எடுக்க நீதிமொழிகள் 23:4, 5 எப்படி உதவி செய்யும்?

டிப்ஸ்

  • யெகோவாவுடைய சேவையில் குறுகிய கால மற்றும் நீண்ட கால குறிக்கோள்களை வையுங்கள்

  • நீங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பும், எதிர்காலத்தில் நீங்கள் செய்யப்போகும் வேலையும் உங்கள் குறிக்கோளுக்கு இடைஞ்சலாக இல்லாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்

  • நியாயமானவர்களாக, வளைந்துகொடுப்பவர்களாக இருங்கள். கூடுதலாக ஏதாவது பயிற்சியையோ படிப்பையோ நீங்கள் தேர்ந்தெடுப்பதாக இருந்தால், அந்தத் துறையில் உண்மையிலேயே நல்ல வேலை கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்

8. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) bt அதி. 10 பாரா. 5-12

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 47; ஜெபம்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்