உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb24 செப்டம்பர் பக். 14-15
  • அக்டோபர் 28–நவம்பர் 3

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அக்டோபர் 28–நவம்பர் 3
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2024
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2024
mwb24 செப்டம்பர் பக். 14-15

அக்டோபர் 28–நவம்பர் 3

சங்கீதம் 103-104

பாட்டு 30; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. “நாம் மண் என்பதை அவர் நினைத்துப் பார்க்கிறார்”

(10 நிமி.)

யெகோவாவிடம் இருக்கும் கரிசனை, அவரை வளைந்து கொடுக்க தூண்டுகிறது (சங் 103:8; w23.07 பக். 21 பாரா 5)

நாம் தவறு செய்தால் உடனேயே அவர் நம்மை ஒதுக்கித்தள்ளிவிட மாட்டார் (சங் 103:9, 10; w23.09 பக். 6-7 பாரா. 16-18)

அளவுக்கு அதிகமாக அவர் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பதில்லை (சங் 103:14; w23.05 பக். 26 பாரா 2)

மனைவி, தன் மனதில் இருப்பதை எல்லாம் கொட்டும்போது கணவர் உன்னிப்பாகக் கேட்கிறார்.

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யெகோவா நியாயமாக நடந்துகொள்வதுபோல் நான் என் கணவனிடம்/மனைவியிடம் நடந்துகொள்கிறேனா?’

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 104:24—யெகோவாவின் புதிது புதிதாக உருவாக்கும் திறனைப் பற்றி இந்த வசனம் என்ன சொல்கிறது? (cl பக். 55 பாரா 18)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) சங் 104:1-24 (th படிப்பு 11)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச்சை ஆரம்பிப்பது

(3 நிமி.) பொது ஊழியம். (lmd பாடம் 3 குறிப்பு 4)

5. மறுபடியும் சந்திப்பது

(4 நிமி.) வீட்டில் சந்திப்பது. பைபிள் படிப்புக்கு அன்புடன் வரவேற்கிறோம்! என்ற வீடியோவைப் பற்றி, பைபிளை படிக்க ஆர்வம் காட்டிய ஒருவரோடு கலந்துபேசுங்கள். (th படிப்பு 9)

6. பேச்சு

(5 நிமி.) lmd இணைப்பு A குறிப்பு 6—பொருள்: கணவன் ‘தன்மீது அன்பு காட்டுவதுபோல் தன் மனைவிமீதும் அன்பு காட்ட வேண்டும்.’ (th படிப்பு 1)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 44

7. உங்களால் எவ்வளவு செய்ய முடியும் என்று தெரிந்து வைத்திருக்கிறீர்களா?

(15 நிமி.) கலந்துபேசுங்கள்.

நம்மால் முடிந்த சிறந்ததை செய்யும்போது யெகோவா சந்தோஷப்படுகிறார், நமக்கும் சந்தோஷமாக இருக்கும். (சங் 73:28) ஆனால் நம்மால் செய்ய முடியாததை செய்ய முயற்சி செய்தோம் என்றால், நாம் சோர்ந்துபோய்விடுவோம்; தேவையில்லாத கவலைகளையும் வரவைத்துக்கொள்வோம்.

“முடிந்ததை மட்டும் செய்தால் நிறைய செய்யலாம்!” என்ற வீடிHS-.25யோவில் வரும் இளம் சகோதரி.

முடிந்ததை மட்டும் செய்தால் நிறைய செய்யலாம்! என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்:

  • யெகோவா நம்மிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்? (மீ 6:8)

  • “முடிந்ததை மட்டும் செய்தால் நிறைய செய்யலாம்!” என்ற வீடிHS-.25யோவில் வரும் ஒரு காட்சி. அதில் வரும் இளம் சகோதரி தன்னுடைய தோழியோடு சேர்ந்து ஒரு காஃபி ஷாப்பில், பைபிள் படிப்பு படிக்கும் ஒரு பெண்ணை உற்சாகப்படுத்துகிறார்.
  • குறிக்கோளை அடைவதை நினைத்து ரொம்ப கவலைப்படாமல் இருக்க இந்த இளம் சகோதரிக்கு எது உதவியது?

நம்மால் எது முடியும், முடியாது என்று எப்படிக் கண்டுபிடிப்பது?

  • யாரோடும் உங்களை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். (கலா 6:4) மற்றவர்கள் செய்வதையே நீங்களும் செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள். அவர்களால் செய்ய முடியும் என்றால் உங்களாலும் செய்ய முடியும் என்று யோசிக்காதீர்கள். ஒருவர் உங்கள் வயதில் இருப்பதால் அல்லது உங்களைப் போன்ற குடும்ப சூழ்நிலையில் இருப்பதால் அவர்கள் செய்யும் அளவுக்குத்தான் நீங்களும் செய்ய வேண்டும் என்று கிடையாது. சில நேரம் அவர்களைவிட உங்களால் அதிகமாகவும் செய்ய முடியலாம். அல்லது அந்தளவுக்கு செய்ய முடியாமலும் போகலாம்

  • புதிதாக ஒரு விஷயத்தை செய்வதற்கு பயம் ஒரு தடையாக இல்லாத மாதிரி பார்த்துக்கொள்ளுங்கள். (ரோ 12:1; 1கொ 7:31) ஒரு சேவையை ஆரம்பிப்பதற்கு முன்பே, ‘இதை நான் என்ஜாய் பண்ணுவேனா?’ ‘இதை என்னால் செய்ய முடியுமா?’ என்றெல்லாம் பயந்து அதை முயற்சி செய்யாமலேயே இருந்துவிடாதீர்கள்.—மல் 3:10

  • உங்களால் எவ்வளவு செய்ய முடியும் என்பதைக் கண்டுபிடிக்க சின்ன சின்ன குறிக்கோள்களை வையுங்கள். உதாரணத்துக்கு, உங்களால் ஒரு ஒழுங்கான பயனியராக ஆக முடியுமா என்று தெரிந்துகொள்ள வேண்டுமா? அப்படியென்றால், கொஞ்ச மாதத்துக்கு உங்களால் ஊழிய மணிநேரத்தை அதிகமாக்க முடியுமா, அல்லது துணைப் பயனியர் செய்ய முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். ஒரு வருஷத்துக்கு மட்டும் ஒழுங்கான பயனியராக சேவை செய்ய முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். ஒருவேளை உங்களால் ஒரு ஒழுங்கான பயனியராக ஆக முடியவில்லை என்றாலும்... ஒரு வருஷத்துக்குமேல் அதைத் தொடர்ந்து செய்ய முடியவில்லை என்றாலும்... இதுவரை நீங்கள் அடைந்த சின்ன சின்ன குறிக்கோள்களை நினைத்து எப்போதுமே சந்தோஷப்படுவீர்கள்.—பிர 6:9

  • சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி மாற்றங்கள் செய்யுங்கள். சூழ்நிலைகள் மாறும்போது உங்களால் அதிகமாகவும் செய்ய முடியலாம் அல்லது அந்தளவு செய்ய முடியாமலும் போகலாம். அதனால், உங்கள் குறிக்கோள்களில் ஏதாவது மாற்றங்கள் தேவையா என்று அடிக்கடி யோசித்துப் பாருங்கள்

8. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) bt அதி. 17 பாரா. 8-12, பக். 137-ன் பெட்டி

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 55; ஜெபம்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்