உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb24 நவம்பர் பக். 12-13
  • டிசம்பர் 23-29

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • டிசம்பர் 23-29
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2024
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2024
mwb24 நவம்பர் பக். 12-13

டிசம்பர் 23-29

சங்கீதம் 119:121-176

பாட்டு 31; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. வலியப் போய் வலியை வாங்காதீர்கள்

(10 நிமி.)

கடவுளுடைய கட்டளைகளை நேசியுங்கள் (சங் 119:127; w18.06 பக். 17 பாரா. 5-6)

தப்பான விஷயங்களை வெறுத்து ஒதுக்குங்கள் (சங் 119:128; w93-E 4/15 பக். 17 பாரா 12)

யெகோவா சொல்வதைக் கேளுங்கள்; “அனுபவமில்லாதவன்” தவறு செய்துவிடுவதுபோல் நீங்களும் செய்துவிடாதீர்கள் (சங் 119:130, 133; நீதி 22:3)

தங்கக் கட்டிகளும் தங்கக் காசுகளும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது; பக்கத்தில் பைபிள் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘கடவுளுடைய கட்டளைகளை நேசிக்கிற விஷயத்திலும் கெட்டதை வெறுக்கிற விஷயத்திலும் நான் என்ன முன்னேற்றம் செய்ய வேண்டும்?’

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 119:160—இந்த வசனம் சொல்வதுபோல், நாம் எதில் உறுதியாக இருக்க வேண்டும்? (w23.01 பக். 2 பாரா 2)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) சங் 119:121-152 (th படிப்பு 2)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச்சை ஆரம்பிப்பது

(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். (lmd பாடம் 1 குறிப்பு 5)

5. மறுபடியும் சந்திப்பது

(4 நிமி.) வீட்டில் சந்திப்பது. அந்த நபருக்கு ஆர்வம் இருக்கும் விஷயத்தை jw.org-ல் எப்படிக் கண்டுபிடிப்பது என்று காட்டுங்கள். (lmd பாடம் 8 குறிப்பு 3)

6. சீஷர்களை உருவாக்குவது

(5 நிமி.) கூட்டங்களுக்குத் தொடர்ந்து வராத பைபிள் மாணவரோடு கலந்துபேசுங்கள். (lmd பாடம் 12 குறிப்பு 4)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 121

7. பணமே பாரமாகிவிட வேண்டாம்!

(15 நிமி.) கலந்துபேசுங்கள்.

பணத்தின்மீது மோகத்தை வளர்த்துக்கொள்பவர்கள் “பலவிதமான வேதனைகளால் தங்கள் உடல் முழுவதும் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.” (1தீ 6:9, 10) நாம் பண ஆசையை வளர்த்துக்கொண்டால்... அதன் பின்னாலேயே ஓடினால்... மோசமான பின்விளைவுகளை அனுபவிக்க வேண்டியிருக்கும். அவற்றில் சில:

  • யெகோவாவோடு நெருக்கமான பந்தத்தை வைத்துக்கொள்ள முடியாது.—மத் 6:24

  • வாழ்க்கையில் திருப்தியே இருக்காது.—பிர 5:10

  • தவறுகள் செய்துவிட வாய்ப்பு அதிகம். உதாரணத்துக்கு, பொய் பேசுவது, திருடுவது, ஏமாற்றுவது என எதையாவது செய்துவிடுவோம். (நீதி 28:20) பிறகு, குற்ற உணர்ச்சியால் கஷ்டப்படுவோம், யெகோவாவிடமும் மற்றவர்களிடமும் நம் பெயரைக் கெடுத்துக்கொள்வோம்

“காசு கரையாமல் இருக்க டிப்ஸ்” என்ற வீடியோவில் இருக்கும் ஒரு காட்சி. கையில் உண்டியலோடு ஒரு டீனேஜ் பையன்.

எபிரெயர் 13:5-ஐ வாசியுங்கள், பிறகு, இந்தக் கேள்வியைக் கலந்துபேசுங்கள்:

  • பண விஷயத்தில் என்ன மனநிலை நமக்கிருந்தால் வேதனையைத் தவிர்க்கலாம்? ஏன்?

ஒருவேளை நமக்கு பண ஆசையில்லாமல் இருக்கலாம். ஆனால், அதை ஞானமாகப் பயன்படுத்தவில்லை என்றால் வேதனைதான் மிஞ்சும்.

காசு கரையாமல் இருக்க டிப்ஸ் என்ற ஒயிட்போர்டு அனிமேஷன் வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

    “காசு கரையாமல் இருக்க டிப்ஸ்” என்ற வீடியோவில் இருக்கும் காட்சி. டீனேஜ் பையனும் பெண்ணும் தாங்கள் வாங்க ஆசைப்படுவதையும் தங்களுக்குத் தேவைப்படும் பொருள்களையும் அதன் விலையோடு சேர்த்து பட்டியல் போடுகிறார்கள். அந்தப் பையனின் பட்டியலில் ஹெட்போன்ஸ், ஷூ, சாப்பாடு மற்றும் ட்ரெயின் டிக்கெட் எழுதப்பட்டிருக்கிறது. அந்தப் பெண்ணின் பட்டியலில் பர்ஸ், வாட்ச், சாப்பாடு மற்றும் பெட்ரோல் எழுதப்பட்டிருக்கிறது.
  • நாம் ஏன் வரவுசெலவைத் திட்டம் போட வேண்டும்? அதை எப்படிப் போடுவது?

  • “காசு கரையாமல் இருக்க டிப்ஸ்” என்ற வீடியோவில் இருக்கும் காட்சி. அந்த டீனேஜ் பெண் மழை பெய்யும்போது இரண்டு குடை வாங்குகிறாள். ஒன்று தனக்கு, இன்னொன்று தம்பிக்கு. அவனோ தன் பணத்தை வைத்து ஐஸ் கிரீம் வாங்கிவிட்டான்.
  • சேமித்து வைப்பது ஏன் நல்லது?

  • “காசு கரையாமல் இருக்க டிப்ஸ்” என்ற வீடியோவில் இருக்கும் காட்சி. அந்த டீனேஜ் பையன் ஒரு பெரிய கிரெடிட் கார்டு பொம்மையோடு விலங்கிடப்பட்டிருக்கிறான். இன்னொரு பெரிய கிரெடிட் கார்டு பொம்மை அவனைப் பார்த்து சிரிக்கிறது.
  • அநாவசியமாகக் கடன் வாங்காமல் இருப்பது ஏன் புத்திசாலித்தனம்?

8. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) bt அதி. 20 பாரா. 1-7, பகுதி 7-க்கான அறிமுகம்

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 101; ஜெபம்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்